குழந்தையின் சருமம் போன்ற பட்டு மேனியுடன் காலையில் கண் விழிப்பது ஒவ்வொரு பெண்ணின் கனவு. இதை சாதிப்பதற்கு பல மணி நேரம் தகவல்களைத் தேட வேண்டும். எந்தெந்த ஸ்கின் கேர் பொருட்கள் பலன் கொடுக்கும், தினமும் பின்பற்ற வேண்டிய சரும நல வழக்கங்கள் என்ன ஆகியவற்றைக் கண்டுபிடித்து, அதை ஒரு சர்வாதிகாரி போல பின்பற்ற வேண்டும். ஆனால் அத்தனையும் செய்த பிறகும் பலன் இல்லையா. அங்குதான் பிரச்சனை இருக்கிறது தோழியே.

ஆனால் கவலைப்பட வேண்டாம். சரும நலன் பற்றியும் மேக்கப் பற்றியும் நன்கு அறிந்த நண்பர்கள் அதற்கும் தீர்வுகள் வைத்திருக்கிறார்கள். பளபள என மின்னும் ஊட்டச் சத்து கொண்ட சருமத்துடன் கண் விழிக்க வேண்டுமா. அதற்கான மிகச் சிறந்த வழிகளை கண்டறிந்து இங்கே உங்களுக்கு வழங்குகிறோம்.

இரவில் சருமத்தை ஹைட்ரேட் செய்வது எப்படி… குழந்தையைப் போன்ற பட்டு மேனியுடன் கண் விழிக்கும் ரகசியம்

ஸடெப் 01: முகத்தை நன்றாக க்ளென்ஸ் செய்த பிறகு, கண்டிப்பாக டோனர் பயன்படுத்த வேண்டும். இது சருமத்தின் பி.ஹெச் சமநிலையை பாதுகாக்க, சரும துளைகளை இருக்கமாக்க, குறிப்பாக அதற்கடுத்து பயன்படுத்தும் ஸ்கின்கேர் பொருட்கள் சருமத்தால் உறிஞ்சப்பட உதவும்.

ஸ்டெப் 02: அதற்கடுத்து, Lakme Absolute Argan Oil Radiance Overnight Oil-in-Serum போன்ற ஹைட்ரேஷன் அதிகரிக்கும் சீரம் பயன்படுத்த வேண்டும். இதன் செயல் ஆற்றல் மிக்க உட்பொருட்கள் குறைவான எடை கொண்டிருப்பதால் சருமத்திற்குள் எளிதாக, ஆழமாக உள்ளே செல்லும். இதன் மூலம் சருமத்தின் ஈரப் பதம் அதிகரிக்கும்.

ஸ்டெப் 03: அதற்கடுத்து ஐ க்ரீமில் கவனம் செலுத்த வேண்டும். கண்ணைச் சுற்றி கரு வளையமும் வீக்கமும் வேண்டும் என ஆசைப்படுவீர்களா என்ன. Dermalogica Total Eye Care போன்ற ஈரப் பதம் தரும் ஐ க்ரீம் பயன்படுத்துங்கள்.

ஸ்டெப் 04: அடுத்து, Ponds Flawless Radiance Derma + Night Cream போன்ற அடர்த்தியான, ஊட்டச் சத்து கொடுக்கும் நைட் க்ரீம் பயன்படுத்துங்கள். இது அழகுப் பொருட்களை உள்ளே சீல் வைக்க உதவும். இது சருமத்தின் ஈரப் பதத்திற்கு பெரிதும் உதவும். மறு நாள் கண் விழிக்கும் போது உங்கள் சருமத்தைத் தொட்டுப் பார்த்தால் பஞ்சு பஞ்சாக மென்மையாக இருக்கும்.