40 களில் அடியெடுத்து வைக்கிறீர்களா? உங்கள் சரும அழகை பாதுகாப்பதற்கான சரும நல குறிப்புகள்

Written by Team BBSep 16, 2023
40 களில் அடியெடுத்து வைக்கிறீர்களா? உங்கள் சரும அழகை பாதுகாப்பதற்கான சரும நல குறிப்புகள்

உங்களுக்கு  40 களில், சரும செல்கள் புதுப்பிக்கப்படும் விகிதம் 20 வயதை விட பாதியாகிவிடும் என்பதால், உங்கள் சருமத்தில் சுருக்கங்கள் தோன்றத்துவங்கி, உங்கள் சருமம் குறைந்த பொலிவுடன் காட்சி அளிக்கத் துவங்கலாம். எனவே தான், உங்கள் சருமத்தை நீர்த்தன்மை பெற வைத்து, அதை ஊட்டச்சத்து பெற வைக்கும் சரும நல முறைகளை பின்பற்றுவது மிகவும் அவசியமாகும். 

மேலும், நல்ல தூக்கத்தை பெறுவது, மன அழுத்தங்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்பதில் கவனம் செலுத்துவது, ஆகியவை முக்கியம். 40 களில் நீங்கள் மேற்கொள்ள வேண்டிய முக்கிய சரும நல பழக்கங்களை இங்கே விவரிக்கிறோம்:

 

சன்ஸ்கிரீன்

ஐ கிரீம்

உங்களுக்கு வயதாகும் போது, உங்கள் சருமத்தின் மீதான சூரிய ஒளியின் தாக்கமும் அதிகமாகிறது. இதன் விளைவாக, நீங்கள் எப்போதும் எச்.பி.எப் பாதுகாப்பு கொண்டிருப்பது அவசியமாகிறது. நீண்ட நேரம் சூரிய ஒளியில் இருக்கும் சூழலில் தொப்பி மற்றும் ஹேட் அணிவதை வழக்கமாக கொள்ளவும். நீங்கள், ‘ லாக்மே சன் எஸ்க்பர்ட் அல்ட்ரா மேட்டே எஸ்.பி.அப் 50 +++ லோஷனையும் ’ பயன்படுத்தலாம். இது, தீங்கான யு.வி கதிர்களில் 97 சதவீதத்தை முடக்கி, உங்கள் சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவுகிறது.

 

டே கிரீம்

ஐ கிரீம்

பகல் நேரத்தில், உங்கள் சன் ஸ்கிரீனால் தடுக்க முடியாத பிரிரேடிலக்ஸால் சருமத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை தடுப்பது மிகவும் முக்கியமாகும். ”லாக்மே’ அப்சல்யூட் பெர்பக்ட் ரேடியன்ச் ஸ்கின் லைட்னிங் டே கிரீம் ”, போன்ற ஆண்டிஆக்ஸிடெண்ட் நிறைந்த கிரீமை பயன்படுத்தவுன். இது சருமத்தை புத்துணர்ச்சி பெற வைத்து, ஈரப்பதம் அளித்து, அதை அழகு பெற வைத்து, உடனை பொலிவை அளிக்கிறது.

 

நைட் கிரீம்

ஐ கிரீம்

வயோதிகத்திற்கு எதிரான தன்மை கொண்ட நைட் கிரீமை தேர்வு செய்வது அவசியம். இத்தகைய கிரீம்கள் சரும செல்களுக்கு ஊக்கம் அளிப்பதோடு, சருமத்தின் வயோதிக தன்மையை தாமதமாக்குகிறது. ‘பாண்ட்ஸ் கோல்ட் ரேடியன்ஸ் யூத்புல் நைட்கிரீம் ’ உண்மையான தங்கத்தின் நற்குணம் கொண்டிருப்பதோடு, வைட்டமின் ஏ மற்றும் பி 3 ஆகியவற்றுடன் உங்கள் சருமத்திற்கு வயோதிகத்திற்கு எதிரான தன்மையை அளிக்கிறது.

 

எக்ஸ்போலியேட்டர்

ஐ கிரீம்

உங்கள் சருமத்தை எக்ஸ்போலியேட் செய்வது, இறந்த செல்களை அகற்றி புதிய செல்களை மேலெழச்செய்யும். இதன் மூலம் உங்கள் சருமம் இளமையாகவும், பொலிவு மிக்கதாகவும் இருக்கும். ‘டெர்மாலாஜிகா ஜென்டில் கிரீம் எக்ஸ்போலியேட் ’ உங்கள் சருமத்திற்கு பாதிப்பில்லாத எக்ஸ்போலியேஷன் சிகிச்சை அளிக்கிறது. இது சரும தோற்றத்தை சீராக்கும் வகையில் இறந்த செல்களை அகற்றி, இயற்கையான என்சைம்கள் வாயிலாக சரும செல்கள் புதுப்பிப்பை ஊக்குவிக்கிறது.

 

ஐ கிரீம்

ஐ கிரீம்

ஐகிரீம்கள் என்று வரும்போது, அதிலும் நீங்கள் 40 களில் இருக்கும்போது, நுண்கோடுகள், சுருக்கங்கள், கரு வளையங்கள் போன்ற வயோதிக அம்சங்களை குறி வைக்கும். கிரீமை நாடுவது ஏற்றது. ‘டெர்மலாஜிகா ஓவர்நைட் ரிப்பேர் செரம்’ கிரீமை முயன்று பாருங்கள். இது இரவு நேர சரும பழுதுபார்த்தலை மேம்படுத்தி, சரும பொலிவை அதிகமாக்குகிறது.

Team BB

Written by

Team efforts wins!!!!
2315 views

Shop This Story

Looking for something else