மோசமான தலைமுடி நாட்களைப் போலவே, மோசமான சரும நாட்களையும் நீங்கள் கடந்து போக வேண்டும். ஒரு நாள் உங்களுடைய சருமம் மிகவும் பளபளப்பாக இருக்கும். ஒரு நாள் கழிந்த பின் சருமத்தில் பிளவுகள் ஏற்படும். அதை ஒரு பெரிய விஷயமாக நினைக்காமல் அதை ஃப்ரஷ் செய்ய நினைக்கலாம். ஆனால் அப்போதுதான் உங்களுடைய சருமத்தில் பாதிப்பட்டிருக்கிறதா இல்லையா என்று தெரியும். இதை ஆரோக்கியமான படுக்கையறை சருமப் பராமரிப்பு பழக்கம் உண்மையிலே நல்ல மாற்றத்தை தர வல்லது. ]

இப்போது படுக்கச் செல்வதற்கு முன் எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்று நீங்கள்யோசிக்கிறீர்கள். அவை இங்கே வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. உங்களுடைய அழகை மெருகேற்ற 5 படுக்கை நேர சருமப் பராமரிப்பு பழக்கம் பற்றி கூறப்பட்டுள்ளது. உங்களுடைய #WokeUpLikeThis selfiesக்காக எந்தளவுக்கு சரியாக உள்ளது காணொளியைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

 

மேக்கப்பின் ஒவ்வொரு துகளையும் அகற்றுங்கள்

மேக்கப்பின் ஒவ்வொரு துகளையும் அகற்றுங்கள்

இரவில் தூங்கச் செல்வதற்குமுன் உங்கள் முகத்திலிருந்து ஒவ்வொரு மேக்கப் துகளை, அழுக்கு மற்றும் ஆயில் நீக்குவது எவ்வளவு முக்கியம் என்பதை வலியுறுத்த முடியாது. இரண்டு முறை சுத்தம் செய்வது என்பது காலத்தின் கட்டாயம். எனவே, Pond’s Vitamin Micellar Water Hydrating Aloe Veraவினால் உங்கள் முகத்தை நன்றாக சுத்தம் செய்ய ஆரம்பிக்கவும். அதைத் தொடர்ந்து Dove Deep Pure Oil Control Facial Cleanserஐ போன்ற ஒரு மென்மையான க்ளீன்ஸரை பயன்படுத்துங்கள். முழுமையாக சுத்தம் செய்வதினால் உங்கள் சருமம் சுவாசிக்கவும், தன்னைத் தானே சரிசெய்து கொள்ளவும் முடியும் என்பதை உறுதி செய்கிறது.

 

ஐ க்ரீம் தடவுவதை நிறுத்தாதீர்கள்

ஐ க்ரீம் தடவுவதை நிறுத்தாதீர்கள்

ஒவ்வொரு அழகியல் ப்ளாக்கர்கள் மற்றும் சருமப் பராமரிப்பு நிபுணர்கள் க்ளீன்சர், டோனிங், மாஸ்யரைஸரிங் (CTM) போன்றவற்றில் மீது கவனம் செலுத்துகின்றனர். அதில் ஒரு சிலர் தான் ஒரு ஐ க்ரீம் அல்லது சீரம்மை பயன்படுத்த சொல்கிறார்கள். உங்களுக்கு CTM ஒத்துவரவில்லையெனில், கண்களைச் சுற்றித் தெரியும் முதுமைக்கான முதல் அறிகுறிகளுக்கு ஒரு அண்டர்-ஐ க்ரீமை பூசிக் கொள்ளவும். உங்கள் கண்களுக்கு பிரகாசத்தையும், உங்கள் சருமத்திற்கு ஊட்டச்சத்தையும் தரக்கூடிய Lakme Absolute Argan Oil Radiance Night Revival Eye Cream ஒரு ஆர்கன் எண்ணெய்யை உள்ளடக்கிய சூத்திரத்தை உடையது.

 

ஒரு பட்டு தலையணைப் பெட்டியை பயன்படுத்துங்கள்

ஒரு பட்டு தலையணைப் பெட்டியை பயன்படுத்துங்கள்

உங்களுடைய சருமம், தலைமுடி மற்றும் உறக்கத்திற்கு, மிருதுவானத் தன்மையுடைய தலையணைகள் தான் மிகவும் சிறந்தது. சரும நிபுணர்கள் காட்டனுக்கு பதிலாக பட்டு தலையணையை பரிந்துரை செய்கின்றார்கள். அதற்குக் காரணம் சருமம் மற்றும் தலைமுடி மீது உராய்வது குறைவு. எரிச்சலையும், பாதிப்பையும் தடுக்கின்றது. படுக்கச் செல்வதற்கு முன் நீங்கள் தடவிக் கொண்ட அனைத்து சருமப் பராமரிப்பு பொருட்களையும் அவை உறிஞ்சிக் கொள்வதில்லை.

 

ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்கவும்.

ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்கவும்.

தண்ணீர் உங்கள் சருமத்தை ஹைட்ரேட்டுடனும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும். எனவே, படுக்கச் செல்வதற்கு முன் ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பது எப்போதுமே நல்ல விஷயமாகும். உங்கள் சருமத்தை உள்ளுக்குள்ளிருந்து ஹைட்ரேட் செய்வதனால், அது கொழுகொழுவென்றும், ஆரோக்கியமானதாகவும், சோர்வில்லாமலும் இருக்க உதவுகின்றது.

 

தேவையான அளவு தூங்குங்கள்.

தேவையான அளவு தூங்குங்கள்.

இறுதியானது ஆனால் குறைவானதல்ல. போதுமான தூக்கம் தேவை என்பது அனைத்திலும் மிகவும் முக்கியமானதாகும். நெடு நேரம் இரவு விழித்துக் கொண்டிருந்தால், உங்களின் சருமத்தின் தோற்றம் அழகாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. படுக்கைக்கு செல்வதற்கு குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன் உங்களின் அழகுசாதன கழற்றி வைத்துவிட வேண்டும். உங்களுக்கு சிறந்த, ஆழந்த தூக்கம் பெறுவதற்கு உங்கள் தலையணைகளில் லேவெண்டர் எஸன்ஷியல் ஆயில் ஒரு சிலத் துளிகளை போடவும்.