ஷேக்ஸ்பியர் காலத்திலேயே ஆப்ரிக்காட்டின் நன்மைகளைப் பற்றி பேசியிருக்கிறார்கள். அழகுக்கும் உதவக்கூடியதுதான் ஆப்ரிகாட். இதில் உள்ள ஏன்டி ஆக்ஸிடென்ட்ஸ் உங்களை இளமையாகக் காட்டும். ஏராளமான ஸ்கின் டேமேஜ்களிலிருந்து காப்பாற்றும். குறிப்பாக சூரியக் கதிர்களால் ஏற்படும் பாதிப்பிலிருந்து பாதுகாப்பு தரும். மாசுபாடு ஏற்படாமலும் தடுக்கும். இவை எல்லாம் அல்லாமல் இன்னும் ஏராளமான நன்மைகளையும் தருவதுதான் ஆப்ரிகாட். படித்து பயன் பெறுங்கள்.

 

01. சருமத்திற்கான மாய்ஸ்சுரைஸர்

சருமத்திற்கான மாய்ஸ்சுரைஸர்

ட்ரையான, அரிப்பு ஏற்படும் சருமத்திற்கு நீர்ச் சத்து கொடுப்பதில் ஆப்ரிகாட் சிறந்தது. அவ்வளவு அதிகமான ஃபேட்டி அமிலம், விட்டமின் ஏ அதில் உள்ளது. சரும செல்களுகக்கு நீர்ச் சத்து கொடுப்பதுடன், சருமத்தால் மிக எளிதாக உறிஞ்சப்படுவது இது. இதனால் எல்லா ஸ்கின் டைப்பிற்கும் இது ஏற்றது.

 

02. பிளாக்ஹெட் நீக்குதல்

பிளாக்ஹெட் நீக்குதல்

இறந்த செல்களை நீக்குவது மூலம் சருமத்தை ஆழமாக க்ளென்ஸ் செய்கிறது ஆப்ரிகாட். சரும துளைகளின் அடைப்புகளையும் நீக்குகிறது. முகப் பரு ஏற்படுத்தும் கட்டிகளுக்குள் எளிதாக ஊடுருவக்கூடியது ஆப்ரிகாட் ஜூஸ். வீக்கமும் தழும்பும் ஏற்படுத்தும் பாக்டீரியாவையும் நீக்குகிறது. Lakmé Blush and Glow Gel Scrub - Green Apple and Apricot போன்ற ஜென்டிலான ஸ்கிரப் பயன்படுத்துவதும் நல்ல சாய்ஸ். தூசி, பிளாக்ஹெட்ஸ், இறந்த செல்களை நீக்குவதோடு இந்த எக்ஸ்ஃபோலியேட்டிங் ஜெல் மிருதுவான சருமம் கிடைக்கவும் உதவும்.

 

03. சுருக்கங்கள் குறைக்க

03. சுருக்கங்கள் குறைக்க

ஆப்ரிகாட் ஆயிலில் விட்டமின் ஏ அதிகம் உண்டு. இது சருமம் முதுமையடைவதைக் குறைக்கும். கொலாஜன் மீண்டும் உற்பத்தியாக உதவும். சருமம் டைட்டாக உதவும். நீண்ட காலம் பயன்படுத்தும் போது சுருக்கங்கள் குறையும்.

 

04. சருமத்தின் எலாஸ்டிக் தன்மை

04. சருமத்தின் எலாஸ்டிக் தன்மை

சருமத்திற்கு ஊட்டமளிக்கும் சக்தி தருவதால் நிறைய ஸ்கின்கேர் பொருட்களில் ஆப்ரிகாட் பயன்படுத்தப்படுகிறது. நிறைய விட்டமின் ஏ, ஏன்டி ஆக்ஸிடென்ட் இதில் இருக்கிறது. இதனால் சருமத்தின் டேமேஜ் கட்டுப்படுத்தப்படும். ஸ்கின் செல்கள் புதுப்பித்துக்கொள்வது எளிதாகும். இதனால் சருமத்தின் எலாஸ்டிக் தன்மை அதிகரிக்கும். பொலிவான மேனி கிடைக்கும்.

 

05. சரும நோய்களுக்குத் தீர்வு

05. சரும நோய்களுக்குத் தீர்வு

ஸ்மூத்தான, பொலிவான சருமம் போக பல சரும பிரச்சனைகளைத் தீர்க்கவும் ஆப்ரிகாட் உதவுகிறது. அரிப்பு போன்ற பல பாதிப்புகளைத் தடுக்க விட்டமின் சி, ஏ கொண்ட ஆப்ரிகாட் உதவுகிறது. குறிப்பாக வீக்கம் ஏற்படுவதையும் பருக்கள் ஏற்படுவதையும் இது தடுக்கும்.

 

06. சரும நிற மாறுபாடுகளுக்குத் தீர்வு

06. சரும நிற மாறுபாடுகளுக்குத் தீர்வு

இறந்த செல்களை எக்ஸ்ஃபாலியேட் செய்ய உதவுவதால் சரும நிறத்தில் ஏற்படும் மாறுபாடுகளைக் கட்டுப்படுத்த ஆப்ரிகாட் உதவும். புதிய, லைட்டான ஸ்கின் செல்கள் கிடைக்கும். ஸ்மூத்தான, ஈவன் டோன் கொண்ட, இளமையான சருமத்திற்கு இது உத்தரவாதம்.