உங்கள் முகத்தில் இருக்கும் பருக்களை கண் கொண்டு பார்க்க முடியாத ஒரு பயங்கரத்தை சற்றே கற்பனை செய்துப் பாருங்கள்; நீங்கள் செய்ய விரும்புவதெல்லாம் அதனை போக்க வேண்டும் அல்லது கவனமாக மறைக்க வேண்டும். முகப்பருக்களை போக்கும் ஒரு சரியான தீர்வு இதுவரையில் உங்களுக்கு கிடைக்காவிட்டால் மற்றும் பருக்களை ஒழிக்க புதிய வழிகளை தொடர்ந்து தேடிக் கொண்டிருக்கிறீர்கள் எனில், இதோ ஒரு சில எளிய தீர்வுகள் உங்களுக்காகவே ....
 

நிபுணர்களை நம்புங்கள்

நிபுணர்களை நம்புங்கள்

முகப்பரு பிரச்சனைக்கு நிபுணரை தவிர நம்பிக்கை வைக்கக் கூடிய வேறு சிறந்த நபர் யாருமில்லை. அந்த காரணத்துக்காக நாங்கள் நம்புவது பாண்ட்ஸ் பிம்ப்பிள் க்ளியர் ஃபேஸ் வாஷ். அதிலுள்ள செயலாற்றும் தைமோ-டி எஸ்ஸென்ஸ் உங்கள் சருமத்துக்குள் ஆழமாக ஊடுருவிச் சென்று முகப்பருக்களை உண்டாக்கும் கிருமிகளை அதன் வேரிலேயே முடக்கி, பருக்களை போக்க உதவுகிறது.

 

லவங்கப்பட்டை மற்றும் தேன் உபயோகியுங்கள்

லவங்கப்பட்டை மற்றும் தேன் உபயோகியுங்கள்

லவங்கப்பட்டை பொடி அரை தேக்கரண்டி எடுத்து அதனை 2 மேஜைக்கரண்டி தேன் உடன் கலந்து கட்டியாக ஒரு பேஸ்ட் உருவாக்கவும். இதனை பருக்களால் பாதிக்கப்பட்ட சருமம் முழுவதிலும் பூசி விட்டு 30 நிமிடங்களுக்கு அப்படியே வைத்திருக்கவும். பிறகு வெது வெதுப்பான தண்ணீரால் கழுவவும். இந்த சிகிச்சையை நாள் ஒன்றுக்கு ஒரு தடவை செய்யவும். லவங்கப்பட்டையில் இருக்கும் அழற்சி-எதிர்ப்பு தன்மைகளும், தேனில் இருக்கும் நுண்ணுயிர்-எதிர்ப்பு தன்மைகளும் சேர்ந்து உங்கள் முகப்பருக்களை விரைவிலேயே மறையச் செய்து விடும்.

 

ஐஸ்கட்டி பயன்படுத்தி போக்கிடவும்

ஐஸ்கட்டி பயன்படுத்தி போக்கிடவும்

முகப்பருக்களை போக்கும் ஒரு ஆச்சரியமான, ஆனால் செயல்திறனுள்ள முறை ஐஸ் கட்டிகளை பயன்படுத்துவதாகும். ஒரு பரு மீது ஐஸ் க்யூப் ஒன்றை வைத்து சுமார் 3 நிமிடங்களுக்கு அப்படியே பிடித்திருக்கவும். ஐஸ் க்யூப்பின் குளிர்ச்சி நிலை சருமத்துக்கு அடியில் இருக்கும் ரத்த நாளங்களை குறுக்குகிறது, இதனால் பருவின் அளவு எளிதாக குறைந்து விடுகிறது! உங்களுக்குள்ள முகப்பரு மறையும் வரை நாளொன்றுக்கு இரு தடவை இந்த முறையை செய்யவும்.