அத்தியாவசிய எண்ணைகள் அவற்றின் அதிக ஆற்றல் காரணமாக, உலகெங்கிலும் உள்ள சரும பராமரிப்பு நடைமுறைகளின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கிறது. இந்த எண்ணைகள் உங்கள் சரும பராமரிப்பு பொருட்களில் அவற்றின் செயல்திறனை அதிகரிக்க பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் சமீப காலமாக அத்தியாவசிய எண்ணைகள் பற்றி நிறைய விமர்சனங்கள் வருகின்றன. அவற்றின் தூய்மையும் செயல்திறனும் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன. அத்தியாவசிய எண்ணைகளுடன் அனைத்து சரும பராமரிப்பு பொருட்களையும் தூக்கி எறிவதற்கு முன், இந்த நியூஸ் உண்மையா என்பதைக் கண்டுபிடிக்க கொஞ்சம் ஆழமாக ஆராய்வோம்.

 

அத்தியாவசிய எண்ணைகள் எவை?

அத்தியாவசிய எண்ணைகள் எவை?

காய்ச்சி வடிகட்டும் செயல்முறையின் மூலம் வேர்கள், பூக்கள், மரப்பட்டைகள், இலைகள் அல்லது தாவரங்களின் பழங்களிலிருந்து அவற்றின் தூய்மையான வடிவத்தில் இருந்து எடுக்கப்படும் எண்ணைகள் அத்தியாவசிய எண்ணைகள் என்று அழைக்கப்படுகின்றன. அதிக செறிவூட்டப்பட்ட இந்த எண்ணைகள் நறுமண சிகிச்சையில் பயன்படுத்தப்படுகின்றன, ஏனெனில் அவை அமைதியான, இனிமையான வாசனை திரவியங்கள்.

 

அத்தியாவசிய எண்ணைகள் சரும பராமரிப்பு பொருட்களில் இணைந்தது எப்படி?

அத்தியாவசிய எண்ணைகள் சரும பராமரிப்பு பொருட்களில் இணைந்தது எப்படி?

அத்தியாவசிய எண்ணைகள் மருத்துவ மற்றும் சரும பராமரிப்பு நன்மைகளுக்காக பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்படுகின்றன. இன்று, அவை நறுமணத்திற்காக சேர்க்கப்படுகின்றன. இதை ஒரு நேச்சுரல் சாய்ஸ் என பலர் கருதுகிறார்கள். சில அத்தியாவசிய எண்ணைகள் ஆன்டிபாக்டீரியா, ஆன்டி ஃபங்கஸ் மற்றும் ஆண்டாக்ஸிடண்ட் பண்புகளை தருவதாக மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளன. தேயிலை மர எண்ணை முகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களைக் கொல்வதன் மூலம் முகப்பருவிற்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. இந்த எண்ணைகள் உங்கள் சரும பராமரிப்பு பொருட்களில் சேர்க்கப்படுவதில் எந்த பிரச்சனையும் இல்லை. இருப்பினும், எண்ணையைப் பிரித்தெடுப்பதில் அல்லது தரத்தில் எந்த வரையறையும் இல்லை என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

 

அத்தியாவசிய எண்ணைகள் தீங்கு விளைவிக்கக்கூடியவையா?

அத்தியாவசிய எண்ணைகள் தீங்கு விளைவிக்கக்கூடியவையா?

இந்த கேள்விக்கு நேரடியான பதில் இல்லை, ஏனெனில் அத்தியாவசிய எண்ணைகள் சருமத்திற்கு நல்லதா, கெட்டதா என்பதை தீர்மானிப்பதில் பல்வேறு காரணிகள் உள்ளன. ஆற்றல், பிரித்தெடுக்கும் முறை மற்றும் தரம் போன்ற காரணிகள் சருமத்தில் அத்தியாவசிய எண்ணைகளின் விளைவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதிக செறிவூட்டப்பட்ட பொருட்களை மேற்பூச்சுடன் பயன்படுத்தும்போது, ​​அத்தியாவசிய எண்ணைகள் நல்லதை விட அதிக தீங்கு விளைவிக்கும். எனவே அவை எப்போதும் சரும பராமரிப்புப் பொருட்களில் சிறிய அளவில் சேர்க்கப்பட வேண்டும். அத்தியாவசிய எணணைகள் உங்கள் சருமத்திற்கு ஒத்துக்கொள்கிறதா இல்லையா என்பதை அலர்ஜி மற்றும் சருமத்தில் ஏற்படும் பின்விளைவுகளை வைத்து சொல்லிவிடலாம்.

 

சரி, என்னதான் செய்வது...

சரி, என்னதான் செய்வது...

ஆமாம், சில அத்தியாவசிய எண்ணைகள் சரும எரிச்சலை ஏற்படுத்தும், ஆனால் நீங்கள் அதைப் பற்றி நினைக்கும் போது, ​​எந்த அமிலம் அல்லது சரும பராமரிப்பு பொருட்கள் (அதிகமாக செறிவூட்டப்படும் போது அல்லது முறையாக தயாரிக்கப்படாத போது), சரும எதிர்வினை அல்லது அலர்ஜிக்கு வழிவகுக்கும். எனவே, உங்கள் சருமத்தின் வகை, அதன் தேவைகள் மற்றும் சில தயாரிப்புகள் மற்றும் மூலப்பொருட்களுக்கு அது எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.