ஒரு சமயத்தில் நிபுணர்களை மட்டுமே நம்பியிருந்த நாங்கள், இப்போது எங்களுடைய அன்றாட சருமப்பராமரிப்புகளுடன் அழகு சாதன கருவிகளை மெதுமெதுவாக சேர்த்துக் கொள்ள முயற்சி செய்து கொண்டு வருகிறோம். சரும நிபுணர்களிடம் மட்டுமே வைத்துக் கொள்ள வேண்டிய ஒரு சில அழகு சாதனப் பொருட்களிருந்தாலும், பிரச்னைகளற்ற, சவாலற்ற வீட்டிலேயே வைத்துக் கொண்டு அனைவரும் பயன்படுத்தக் கூடிய நிறைய அழகு சாதனப் பொருட்கள் கிடைக்கின்றன. ஃபேசியல் ரோலர்ஸ் மற்றும் குவா ஷா கற்கள் போன்ற கவர்ச்சியான அழகு சாதனங்களை உங்களுடைய இன்ஸ்டா

கிராம் பகுதியில் பார்த்திருக்கலாம். மேலும் அவற்றைப் பார்க்க பார்க்க அந்த சாதனங்களை வாங்கி பயன்படுத்துவதற்கான ஒரு தூண்டுதல் உங்களுக்குள் ஏற்படுகின்றது. உங்களுடைய அன்றாட சருமப்பராமரிப்புடன் சேர்த்து வீட்டிலேயே வைத்துப் பயன்படுத்தக் கூடிய அழகு சாதனப் பொருட்களை நாங்கள் பரிந்துரைக்கின்றோம். போனஸ் :

சுகமான ஸ்பா போன்ற சிகிச்சையை நீங்கள் வீட்டிலிருந்தபடியே பெற முடியும். மேலும், இது சருமம் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும், பொலிவுடன் இருப்பதற்கு உத்தரவாதம் அளிக்கின்றது!

 

01. ஃபேஸ் ரோலர்ஸ்

01. ஃபேஸ் ரோலர்ஸ்

இந்த ஃபேசியல் ரோலர்கள் மிகவும் பிரபலமான சருமப்பராமரிப்புக்கான அழகு சாதனக் கருவிகளில் ஒன்றாகும். ஃபேஸ் ரோலர்கள் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும், சருமத்தை இறுக்கமாக்கவதுடன், வீக்கத்தையும் குறைக்கின்றன. குறிப்பாக ஃபேஸ் மஸாஜ் செய்து கொள்வதற்கு வழக்கமாக பயன்படுத்தப்படும் ஜேட் அல்லது ரோஸ் குவார்ட்ஸைக் கொண்ட இந்த கருவி ஒரு க்ரிஸ்டலை உள்ளடக்கியது. இந்த சாதனத்தில் மனதை ஊக்கப்படுத்தக் கூடிய திறனுள்ளதால் இந்த சாதனத்தை வாங்குவதற்கு கூடுதலான ஒரு காரணமாக உள்ளது. மென்மையான செயல்படுதல், எரிச்சலை தடுத்தல், மற்றும் கதிர்வீச்சை உறுதிப்படுத்தல், சருமத்தை பொலிவுறச் செய்வதல் போன்றவற்றிற்காக Lakme Absolute Perfect Radiance Whitening Serum, போன்ற ஒரு சருமப்பராமரிப்பு சீரம்மை தடவிக் கொள்வதினால் நல்ல பயனைத் தரும்.

 

02. குவா ஷா

02. குவா ஷா

சமீபத்திய ஆண்டுகளில் பிரபலங்களால் மிகவும் நேசிக்கப்பட்ட குவா ஷா, உண்மையிலேயே ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்டதாகும். இது ஒரு நவநாகரீக அழகு சாதனமாக மாறுவதற்கு முன்பே, இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பாரம்பரிய சீன மருத்துவத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது. பியான், ஜேட் அல்லது ரோஸ் குவார்ட்ஸால் செய்யப்பட்ட ஒரு கல்லைப் பயன்படுத்துவதால், நச்சுத்தன்மை நீக்கப்படுவதால் இரத்த ஓட்டம் அதிகரித்தல், கொலாஜென்னை ஊக்கப்படுத்துதல், மேலும், லிம்பாடிக்ஸ மற்றும் எதிர்ப்புசக்தியை தூண்டுதல் போன்றவற்றால் இயற்கையான முகத்தை குவா ஷா மெருகேற்றுவதாக உறுதியளிக்கிறது. இதன் சிறப்பே, முகம் மற்றும் உடலில் பயன்படுத்தப்படுத்துவதற்கு இந்த சாதனம் மிகவும் சிறந்தது. இது மேலும், உடலின் இறுக்கத்தையும், பதற்றத்தையும் முறிப்பதற்கான சரியானதொருக் கருவியாகும். Lakme Absolute Argan Oil Radiance Overnight Oil-in-Serum போன்ற ஒரு ஆயிலை சேர்த்துக் கொள்வதினால், இதன் செயல்பாடுகளை எளிமையாக்குவதுடன், ஆர்கன் ஆயிலின் கூடுதலானப் பயன்களையும் தருகின்றது.

 

03. பியூமிஸ் கல்

03. பியூமிஸ் கல்

பியூமிஸ் கற்களை முகம் மற்றும் உடல் இரண்டிற்கும் பயன்படுத்தக்கூடிய மற்றொரு பல்நோக்கு பயனுள்ள சாதனம், நீண்ட காலமாக பலரால் விரும்பப்பட்டு பயன்படுத்தபட்டதாகும். எரிமலையும் நீரும் ஒன்றாக கலக்கும்போது உருவாகக் கூடிய இந்தக் கல் இலகுவான உராய்வுப் பொருளான, இதை வறண்ட,இறந்த சருமத்தை அகற்ற பயன்படுத்தப்படுகிறது. சருமத் தடிப்பைமென்மையாக்குவதுடன், சருமத்தில் ஏற்படும் பிளவுகளால் உருவாகும் வலியை குறைக்கவும் பியூமிஸ் கற்கள் பயன்படுகின்றது. இந்தக் கற்களின் முழுப்பயனையும் பெற வேண்டுமானால், அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், இந்தக் கல்லை நீரில் நன்றாக நனைத்து, பாதிக்கப்பட்ட இடத்தின் ஒரு சிறிய பகுதியில் வட்டசுழற்சியாக வாரத்திற்கு ஒரு முறை செய்து வர வேண்டும். அதன் பிறகு அதன் சிறப்பை நன்கு உணர்வீர்கள்.