கமேலியா எண்ணெயை சரும நலனுக்கான அற்புத பொருள் என வர்ணிக்கலாம். ஏன் என்று அறிய வேண்டுமா? ஒமேகா 3 பேட்டி ஆசிட்ஸ், ஆன்டி ஆக்சிடென்ட்ஸ் மற்றும் இதர ஊட்டச்சத்துகள் நிறைந்த கமேலிய எண்ணெய், உங்கள் சருமத்தின் மீது மாயத்தை நிகழ்த்த வல்லது. நீர்த்தன்மையை அதிகமாக்குவதில் துவங்கி, வடுக்களை மறையச் செய்வது வரை பலவிதங்களில் இது சருமத்திற்கு பலன் அளிக்கும்.

உங்கள் அழகு சாதன பழக்கத்தில் கமேலியா எண்ணெயை உடனடியாக சேர்த்துக்கொள்ள வேண்டியதற்கான நான்கு காரணங்கள் இதோ:

·             நீர்த்தன்மை

·             சுருக்கங்கள் நீக்கம்

·             வடுக்கள் மறைவு

·     நகக்கணு பாதுகாப்பு

 

நீர்த்தன்மை

நீர்த்தன்மை

கமேலியா எண்ணெய்க்கு தண்ணீரை தக்க வைத்துக்கொள்வதில் அசாதாரணமான தன்மை இருக்கிறது. சருமத்தின் கீழ்ப்பகுதியில் ஆழமாக ஊடுருவி, அணுக்கள் வளர்ச்சியை ஊக்குவித்து, சருமத்திற்கு தேவையான ஆதரவு மற்றும் வளைந்து கொடுக்கும் தன்மையை அளிக்கிறது. சேதமடைந்த சரும அணுக்களை சீராக்கி சருமத்தை புதுப்பிக்கிறது.  

 

சுருக்கங்கள் நீக்கம்

சுருக்கங்கள் நீக்கம்

கமேலியா எண்ணெய், உங்கள் சருமத்தின் நெகிழ்ச்சி தன்மையை மீட்டுத்தருவதில் சிறப்பாக செயல்படுகிறது. இது சருமத்தை மென்மையாக்கி, அதை உறுதியாக்குகிறது. மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்களை இது மறையச்செய்து இளமையான தோற்றத்தை அளிக்கிறது.

 

வடுக்களை நீக்குகிறது

வடுக்களை நீக்குகிறது

எந்த பொருளை பயன்படுத்துவது என தெரியவில்லை எனில் வடுக்களை எதிர்கொள்வது சவாலாக இருக்கலாம். வடுக்களை சமாளிக்க சிறந்த வழிகளில் ஒன்று, ஈரமான சருமத்தில் கொஞ்சம் கமேலியா எண்ணையைத் தடவி அது ஈர்க்கப்படும் வரை மெல்ல மசாஜ் செய்வதாகும். இதை சில மாதங்களுக்கு தொடர்ச்சியாக செய்து வந்தால், வடுக்கள் மறையத் துவங்கியிருப்பதை உணரலாம்.

நகக்கணு பாதுகாப்பு

உங்களது நகக்கணு மற்றும் நகங்களை நன்றாக பராமரிக்க கமேலியா எண்ணெயை பயன்படுத்தலாம். இந்த எண்ணெய் நகக்கணுவை ஊட்டசத்து பெற வைத்து, உலர் சரும பாதிப்பை போக்கி, நகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், சில சொட்டு கமேலியா எண்ணெயை எடுத்துக்கொண்டு நகக்கணு பகுதியில் 5 முதல் 10 நிமிடம் மசாஜ் செய்வது தான்..