ஒவ்வொரு படுக்கயறை மேடையிலும், அவசியம் இருக்க வேண்டிய பொருட்கள் இருக்கின்றன. இவை இரவு நேரத்தை எளிதாக்கி, நிம்மதியாக தூங்க உதவும். ஆனால், நீங்கள் சோம்பல் மிக்கவராக இருந்து, வீட்டிற்கு வந்ததும் படுக்கையில் விழுந்து தூங்கும் பழக்கம் கொண்டவர் எனில், நீங்கள் மங்கிய மேக்கப்புடன் அல்லது பருக்களுடன் கண் விழிக்க வாய்ப்பிருக்கிறது. எனவே, தான் உங்கள் சரும நலனை பாதுகாப்பது அவசியமாகிறது. எனவே, உங்கள் சரும பொலிவை பாதுகாக்க, படுக்கைறை மேஜை அருகே வைத்திருக்க வேண்டிய அழகு சாதனப்பொருட்களை பட்டியலிடுகிறோம்.
# மேக்கப் ரிமூவர் மற்றும் பஞ்சு

களைப்பான நாளுக்குப்பிறகு அல்லது விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பிய பின்பு மேக்கப்பை மேக்கப் ரிமூவர் கொண்டு அகற்றுவதை தவிர்த்து விடலாமே என தோன்றலாம். இது போன்ற நாட்களில், மேக்கப் ரிமூவர் மற்றும் பஞ்சு அருகில் இருப்பது நல்லது. இவற்றை பயன்படுத்துவதும் எளிதானது. சருமத்தின் மீது மேக்கப்பின் சாயலை முழுமையாக அகற்றும் மேக்கப் ரிமூவரை நாடவும். லாக்மே அப்சல்யூட் பை பேஸ்டு மேக்கப் ரிமூவரை நாங்கள் பரிந்துரைக்கிறோம். இதன் எண்ணெய் மற்றும் தண்ணீர் கலந்த பாருமுலா மேக்கப்பை எளிதாக அகற்றுகிறது.
# மாய்ஸ்சரைசர்

பருவநிலை ஈரப்பதம் மிக்கதாக இருந்தால் மாய்ஸ்சரைசிங் செய்வது அவசியம். குளிர்சாதன வசதிக்கு அடிக்கடி இலக்காவது, நம்முடைய சருமத்தை பாதித்து, அதில் உள்ள இயற்கையான எண்ணெய்களை உறிஞ்சி விடுகிறது. பகலில் சருமம் இழக்கும் ஊட்டச்சத்துகளை மீண்டும் அளிப்பதற்கு சிறந்த நேரம் இரவாகும். டோவ் ரிச் நரிஷ்மண்ட் கிரீம் போன்ற ஆழமாக செல்லக்கூடிய மாய்ஸ்சரைசர் மிகவும் ஏற்றது.
# இரவு கிரீம்

நீங்க பெரும்பாலும் படுக்கச்செல்லும் முன், ஒரு புத்தகத்தை வாசித்தபடி அல்லது ஒரு திரைப்படத்தை ரசித்தபடி இருந்து இரவு கிரீமை பயன்படுத்த மறந்துவிடுகிறீர்களா? இது பலரும் செய்வது தான். இதற்கு தீர்வாக, கைக்கு எட்டிய தொலைவிலேயே இரவு கிரீமை வைத்திருப்பது நல்லது. பாண்ட்ஸ் கோல்ட் ரேடியன்ஸ் யூத்புல் நைட் கிரீம் மிகவும் ஏற்றதாக இருக்கும்.
# லிப் பாம்

லிப்ஸ்டிக் அல்லது உணவு கரை இல்லாத நேரமான இரவு நேரத்தில் தான் உங்கள் உதடுகளுக்கு அதிக ஓய்வு கிடைக்கும் நேரம். உங்கள் உதடுகளுக்கு தேவையான சேவை செய்ய ஏற்ற நேரமும் இது தான். உங்கள் கைப்பையோடு, லிப் பாம் ஒன்றையும் படுக்கையறை மேஜையில் வைத்திருப்பது நல்லது. லாக்மே லிப் லவ் சாப்ஸ்டிக் உங்ஜள் உதடுகளை ஊட்டச்சத்து பெற வைத்து, மென்மையாகவும் வைத்திருக்க உதவுகிறது.
# வாசனை மெழுகுவர்த்தி

இதை அழகு சாதனம் என சொல்ல முடியாது ஆனால் அவசியமானது தான். லேவண்டர் மனம் கொண்ட மெழுகுவர்த்தியை அருகே வைத்திருப்பது நல்ல தூக்கத்தை அளித்து, சரும நலனுக்கு உதவுகிறது. உங்கள் அறையை மேலும் செழுமையாக்க அல்லது காவியத்தன்மை பெற வைக்க இவை நிச்சயம் உதவும்.
Written by Team BB on Dec 11, 2018