அழகுக்கு ஊட்டம் தரக்கூடிய விட்டமின் என்று வரும் போது விட்டமின் சி மாதிரியான அருமையான மருந்து கிடையாது. ஏன்டி ஆக்ஸிடென்ட் அதிகம் கொண்ட விட்டமின் சி உடலுக்கு ஊட்டம் கொடுப்பதோடு சருமத்திற்கு நல்லது செய்யும். சீரம், மாய்ஸ்சுரைசர், க்ரீம் போன்ற வழிகளில் சருமத்தின் மீது பயன்படுத்தலாம். இதன் மூலம் ஸ்கின் டோன் சமம் இல்லாமல் இருப்பதை சரி செய்யலாம். பொலிவற்ற சருமம் மினுங்க ஆரம்பிக்கும். சொரசொரப்பும் பருவின் தடங்களும் நீங்கும். விட்டமின் சி நிறைந்த அழகுக் கலை பொருட்களை அன்றாடம் பயன்படுத்துவது அவசியம். ஆனால் இதற்காக ரொம்ப ஒன்றும் மெனக்கெட வேண்டியதில்லை. அதிக நேரமும் ஆகாது. உங்களின் அழகுக் கலை லிஸ்ட்டில் விட்டமின் சி முதலிடம் பிடிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் காரணங்கள் இதோ…

அற்புதமான ஏன்டி ஆக்ஸிடென்ட்

 

அற்புதமான ஏன்டி ஆக்ஸிடென்ட்

அற்புதமான ஏன்டி ஆக்ஸிடென்ட்

எல்லா சரும வயதுக்கும் எல்லா சரும நிபுணர்களும் பரிந்துரைக்கும் ஏன்டி ஆக்ஸிடென்ட் என்றால் அது விட்டமின் சி மட்டுமே. சருமத்தின் செல் அளவுக்கு ஊடுருவிச் சென்று அதன் டி.என்.ஏவை மாற்றி அமைக்கும் ஆற்றல் கொண்டது விட்டமின் சி. இதனால் கொலாஜன் அதிகமாகும், யு.வி கதிர்களின் பாதிப்பிலிருந்து சருமம் மீண்டு வரும். மாய்ஸ்சுரைசருக்கு பதில் விட்டமின் சி பயன்படுத்தலாம் என்பது பல டெர்மடாலஜிஸ்ட் தரும் பரிந்துரை. புதிதாக அறிமுகமாகியுள்ள Lakmé 9to5 Vitamin C+ Facial Serum ககாடு ப்ளம் உட்பொருட்களால் தயாரானது. ஆரஞ்சுகளைவிட இதில் 100 மடங்கு அதிக விட்டமின் சி உண்டு. சருமத்திற்கு நல்ல ஏன்டி ஆக்ஸிடென்ட் என்பது மட்டுமின்றி, சருமம் பொலிவாகவும் இருக்க இது உதவும்.

 

சூரியக் கதிர்களின் பாதிப்பைக் குறைக்கும்

சூரியக் கதிர்களின் பாதிப்பைக் குறைக்கும்


அதிக நேரம் வெய்யில் படுவதால் சருமத்தில் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. சன் ஸ்பாட், சொரசொரப்பு, கோடுகள், சிலருக்கு சருமம் செதில் செதிலாக வருவது என பல பிரச்சனைகள். சருமத்தின் மீது அப்ளை செய்யும் போது யு.வி கதிர்களிலிருந்து பாதுகாப்பு தரும் விட்டமின் சி, இறந்த செல்களையும் சீர் செய்யும். நீங்கள் பயன்படுத்தும் சன் ஸ்கிரீனுடன் விட்டமின் சி அதிகம் கொண்ட க்ரீம் பயன்படுத்த வேண்டும். Lakmé 9to5 Vitamin C+ Day Creme ஒரு லைட் வெயிட் ஃபார்முலா. இதில் துரிதமாக செயல்படும் விட்டமின் சி உட்பொருட்கள் உள்ளன. இது ஏன்டி ஆக்ஸிடென்ட் என்பதோடு சருமம் பொலிவாக இருக்கவும் உதவும். சருமத்தில் கொலாஜன் உற்பத்தி அதிகரிக்க இது உதவும்.

 

 

மிருதுவான சருமம்

மிருதுவான சருமம்


சருமம் என்பது தாகம் கொண்ட பிராணி. அதிக நீர்ச் சத்து கேட்கும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். அது பல்வேறு உறுப்புகளுக்கும் பிரித்து அனுப்பப்படும். அதனால்தான் சருமத்தின் மீது வெளிப்புறமாக நீர்ச் சத்து கொடுக்க வேண்டும். சருமத்தை ஊட்டச் சத்துடன் வைத்திருக்க இது உதவும். நீர்ச் சத்தை சேர்த்து வைக்கவும், சருமத்தில் அதிக ஆயில் சேராமலோ, சருமம் உலர்ந்து போகாமலோ விட்டமின் சி தடுக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா...

 

 

சருமத்தின் டோன் சூப்பராக இருக்கும்

சருமத்தின் டோன் சூப்பராக இருக்கும்


சருமத்தில் அதிக மெலனின் சுரக்கும் போது கருப்பு கருப்பாக இருக்கும். அதனால் ஒரு பாதிப்பும் இல்லை என்றாலும் எல்லோரும் ஆசைப்படுவது போல சமமான டோன் கொண்ட சருமம் கிடைக்காமல் போக இது காரணமாகிவிடும். சருமத்தின் மீது விட்டமின் சி அப்ளை செய்யும் போது மெலனின் சுரக்கக் காரணமாக இருக்கும் டைரோசினாஸ் குறைக்கப்படும். குறிப்பாக இரவில் அப்ளை செய்யும் போது. Lakmé 9to5 Vitamin C+ Night Creme பயன்படுத்திப் பாருங்கள். அது விட்டமின் சியின் களஞ்சியம். எளிதில் உறிஞ்சக்கூடிய எதில் அமிலம் இதில் உள்ளது. ஷியா பட்டர், முர்முரு பட்டர் போன்ற மாய்ஸ்சுரைஸ் செய்யும் உட்பொருட்களும் இதில் உண்டு. சருமத்திற்கு ஊட்டச் சத்து கிடைக்கும் ரிப்பேர் செய்யவும் இந்த க்ரீம் உதவும். இரவில் நீங்கள் தூங்கும் நேரத்தில் அதிக நிறமேற்றம் ஏற்படாமல் தடுக்கும்.

 

 

சரும எரிச்சல் தடுக்கப்படும்

சரும எரிச்சல் தடுக்கப்படும்


எல்லா சரும வகைகளுக்கும் மிருதுவாக, பொருத்தமாக இருக்கும் என்பதால் எதைப் பற்றியும் யோசிக்காமல் விட்டமின் சி பொருட்களைப் பயன்படுத்தலாம். சென்சிடிவ் ஸ்கின் கொண்டவர்கள்கூட பயன்படுத்தலாம். சருமத்தில் எரிச்சல் ஏற்படும் என பயப்படுகிறீர்களா. சரியான விதத்தில் பயன்படுத்தினால் அவ்வாறு ஏற்படாது. குறிப்பாக, பல அழகுக் கலை பொருட்களின் திறமையை அதிகரிக்கும் திறன் கொண்டது விட்டமின் சி. விட்டமின் இ, ஃபெருலிக் ஆசிட் போன்றவற்றுடன் சேர்ந்தும் பயன்படுத்தலாம்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்:

விட்டமின் சி சீரம் பயன்படுத்துவதின் நன்மைகள்
சக்திவாய்ந்த உட்பொருட்கள் கொண்ட சீரம்கள் எல்லா ஸ்கின்கேர் பொருட்களைவிட சிறப்பாக பலன் தரக்கூடியவை. அழகுக் கலையில் விட்டமின் சி சேர்த்துக்கொண்டால், தொடர்ந்து பயன்படுத்தினால் கொலாஜன் உற்பத்தி அதிகரிக்கும், கூடுதல் நிறமேற்றம் குறையும், சருமம் வெளுப்பாகத் தெரியும், சூரியக் கதிர்களால் ஏற்படும் பாதிப்பு குறையும், காயங்கள் குணமாவது துரிதமாகும்.

முகத்தில் விட்டமின் சி சீரம் எப்போது, எப்படி பயன்படுத்துவது...
ஒரு நாளில் ஒரு முறை அல்லது இரு முறை பயன்படுத்தலாம். டோனர் பயன்படுத்திய பிறகு சீரம் பயன்படுத்தவும். மாய்ஸ்சுரைஸர் அப்ளை செய்வதற்கு முன்பு பயன்படுத்த வேண்டும். பகலில் சன் ஸ்கிரீன் பயன்படுத்த மறக்கக்கூடாது. சூரியக் கதிர்கள் படும் போது விட்டமின் சியின் சக்தி குறையும்.

விட்டமின் சி எவ்வாறு கரும் புள்ளிகளைக் கரைக்கிறது
சருமத்தின் மீது அப்ளை செய்யும் போது விட்டமின் சி மெலனின் உற்பத்தியைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் கரும் புள்ளிகள் கரையும். நிறமேற்றம் குறைந்து, சமமான டோன் கொண்ட, மின்னும் சருமம் கிடைக்கும்.