மிருதுவான, மகிழ்ச்சித் துள்ளும் மற்றும் நீர்ச்சத்துடையதாக உணர்த்தும் புத்துணர்ச்சிப் பெற்ற சருமத்தை கைகளால் வருடும் அந்த உணர்வை விட உலகில் ஏதாவது உணர்வு இருந்தால் கூறுங்கள், அதற்காகக் காத்திருப்போம். சரும ஆரோக்கியத்திற்கு மாஸ்ச்யரைஸிங் அவசியம் தேவை என்பது உண்மையில் அத்தனை ஒன்றும் பெரிய செய்தியன்று. ஆனால், முழுமையான பலன்களைப் பெற வேண்டுமென்றால் சரியான நேரத்தில் மாஸ்ச்யரைஸரை தடவிக் கொள்ள வேண்டும் என்பது மிகவும் அவசியமானது என்று உங்களுக்குத் தெரியாதா. ஆமாம் அதை சரியாகப் படித்துள்ளீர்கள். அதிகளவு நீர்ச்சத்துப் பெறுவதற்காக தடவக் கூடிய பாடி லோஷனை பயன்படுத்த வேண்டிய 3 சிறந்த நேரங்களை இங்கோ நாங்கள் பட்டியலிட்டு தந்துள்ளோம்.

 

1) குளித்த பிறகு

1) குளித்த பிறகு

நீங்கள் குளித்துவிட்டு வெளியே வரும் அடுத்த நிமிடத்தில் நீங்கள் உங்கள் பாடி லோஷனை தடவிக் கொள்பவராக இருந்தால், அதற்காக உங்களை பாராட்டுக்கிறோம், அதை நீங்கள் சரியாகச் செய்கிறீர்கள்.  ஈரமான நிலையில் இருக்கும்போது உங்கள்  உடலுக்கு அதிகளவு நீர்ச்சத்துக் கிடைக்கும். ஈரமான சருமத்தில் பாடி லோஷனை தடவும் போது, சருமத்தின் நீர்ச்சத்து அதிகரிக்கும். எனவே, நீங்கள் குளித்துவிட்டு வெளியே வந்தவுடன் அடுத்த நிமிடத்தில் மாஸ்ச்யரைஸரை தடவும்போது நீர்சத்தை வெளியேறாமல் தடுத்து, சருமத்தை மிருதுவாகவும், பொலிவாகவும் வைத்துக் கொள்கிறது.

பீபி பிக்ஸ் : Dove Supple Bounce Body Lotion 

 

2) ஷேவிங் செய்த பிறகு

2)  ஷேவிங் செய்த பிறகு

ஷேவிங் செய்யும்போது உடலில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்றுவதோடு மட்டுமல்லாமல், சருமத்தின் மேல் அடுக்கையும் அகற்றிவிடும். ஆகையினால்தான், ஷேவிங் செய்தபின் மாஸ்ச்யரைஸ் செய்ய வேண்டியது அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாகும்.  ஏனெனில், அவை சருமத்தை வறண்டு போகாமல் காப்பதோடு, ரேஸரினால் ஏற்படும் வெட்டுக்காயங்களிலிருந்தும் பாதுகாக்கிறது.

பீபி பிக்ஸ் : Vaseline Intensive Care Aloe Fresh Body Lotion

 

 

3) படுக்கச் செல்வதற்கு முன்

3)  படுக்கச் செல்வதற்கு முன்

இதை மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.  குளித்துவிட்டு வெளியே வந்தவுடன், உடலை மாஸ்ச்யரைஸ் செய்து கொள்ளூங்கள். அதன்பின், இரவு ஆடையான பைஜாமாவை போட்டுக் கொள்ளுங்கள்.  போர்வையைவிட உங்கள் சருமத்திற்கு மிருதுவாகவும்,  மென்மையையும்  தரக்கூடிய மெத்தையில் படுத்துக் கொள்ளுங்கள், இதற்குமுன் எப்போது கிடைக்காத திருப்தியாகும், அப்படித்தானே.  சருமமும், உடலும் இரவில் புத்துயிர் பெறும்.  எனவே, உங்களுடைய சருமத்திற்கு மிகச் சிறந்த உணவையும், பாடி லோஷனையும் வழங்குவது மிகவும் முக்கியமான அம்சமாகும்.  சருமப்பாதுகாப்பு பராமரிப்பை செய்வதற்கு இரவு 10 மணி முதல் 11 மணி வரை மிகவும் ஏற்ற சமயமாகும்.  ஏனெனில், அச்சமயத்தில் தான் சருமம் மறுசுழற்சியடைந்து, தன்னைத்தானே சரி கொள்ள ஏதுவாக இருக்கும்.

பீபி பிக்ஸ் : Lakmé Peach Milk Moisturizer Body Lotion

பின்குறிப்பு :  ஒரு நாளைக்கு இரண்டுமுறை மாஸ்ச்யரைஸ் செய்து கொள்வது நல்லது.  எனவே, உங்களுடைய அன்றாட வழக்கத்தை தேர்வு செய்து அதை உறுதிபட செய்யுங்கள்.  மேலும், மிகவும் முக்கியமாக மாஸ்ச்யரைஸிங் செய்து கொள்வதை எந்த நேரத்திலும் மறந்து விடாதீர்கள்.  நீர்ச்சத்து மிகவும் அவசியம்.