கையை அடிக்கடி கழுவதாலும் வீட்டில் பாத்திரங்கள் விளக்குவதாலும் நகங்கள் வறண்டு, உடைகிறதா. இப்போதே மேனிக்யூர் செய்தாக வேண்டும். ஆனால் கடைகள் எல்லாம் மூடியிருக்கும் போது எப்படி. ஐடியா. வீட்டிலேயே அதைச் செய்யலாம். நீங்களே செய்யலாம். உங்கள் நகங்கள் ஹெல்தியாக மாறும். எப்படி செய்வது என்று தெரியவில்லையா? இதோ இந்த ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி உங்களுக்கு உதவும்.

 

தேவையான டூல்ஸ்:

தேவையான டூல்ஸ்:


நெயில் பாலிஷ் ரிமூவர், காட்டன் பேட்
நெயில் க்ளிப்பர்
நெயில் ஃபைல்-பஃபிங் ப்ளாக்
ஸ்கிரப்பர்
க்யூட்டிகல் ஆயில்
மாய்ஸ்சுரைஸர்
நெயில் பாலிஷ் (விருப்பமிருந்தால்)

 

 

ஸ்டெப் 01: முந்தைய நெயில் பாலிஷ் ரிமூவ் செய்தல்

ஸ்டெப் 01: முந்தைய நெயில் பாலிஷ் ரிமூவ் செய்தல்

இப்போதுள்ள நெயில் பாலிஷ் ரிமூவ் செய்யப்பட வேண்டும். அசிடோன் இல்லாத நெயில் பாலிஷ் ரிமூவர் பயன்படுத்துவது நல்லது. அது மிகவும் மிருதுவாக நெயில் பாலிஷ் ரிமூவ் செய்யும் என்பதால் வெள்ளை திட்டுக்கள் ஏற்படாது.

 

ஸ்டெப் 02: கட் செய்தல், அழகாக்குதல்

ஸ்டெப் 02: கட் செய்தல், அழகாக்குதல்

வளர்ந்த நகங்கள் என்றால் அதை கட் செய்து, விரும்பிய ஷேப்பில் அழகாக்கிக்கொள்ளவும். வட்ட அல்லது சதுர வடிவ நெயில்கள் சிறந்தவை. பஃபர் வைத்திருந்தால் அதை வைத்து நகத்தின் முனைகளை மென்மையாக மாற்றவும்.

 

ஸ்டெப் 04: ஊற வைத்து, ஸ்கிரப் செய்தல்

ஸ்டெப் 04: ஊற வைத்து, ஸ்கிரப் செய்தல்

மிதமான சூடு கொண்ட தண்ணீரை ஒரு பாத்திரத்தில் பிடித்து வைக்கவும். அதில் நகங்கள் இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் ஊற விடவும். இது நகங்களை மிருதுவாக்கி அடுத்த கட்டத்திற்கு தயாராக்கும். பாடி ஸ்கிரப் சிறிதளவு எடுத்துக்கொள்ளவும். அல்லது சர்க்கரை, தேங்காய் எண்ணெய் கலவையும் பயன் தரும். கைகளில் உள்ள இறந்த செல்களை இதன் மூலம் ரிமூவ் செய்யவும். கழுவி நன்றாக உலர வைக்கவும்.

 

ஸ்டெப் 04: க்யூட்டிக்கல் ஆயில், மாய்ஸ்சுரைஸர் அப்ளை செய்யவும்

ஸ்டெப் 04: க்யூட்டிக்கல் ஆயில், மாய்ஸ்சுரைஸர் அப்ளை செய்யவும்

ஹேண்ட் வாஷ் வேதிப் பொருட்களாலும் நெயில் பாலிஷ் தாக்கத்தாலும் நகங்கள் உலர்ந்துவிடும். உறிந்து வரலாம். ஆலிவ் அல்லது ஆர்கன் ஆயில் அல்லது க்யூட்டிக்கல் ஆயில் அப்ளை செய்வது மூலம் இதைத் தடுக்கலாம். அது நன்றாக உறிஞ்சப்படும் வகையில் மசாஜ் செய்ய வேண்டும். அதன் பிறகு மாய்ஸ்சுரைசர் அப்ளை செய்து, சில நிமிடங்கள் அப்படியே விட வேண்டும்.

 

ஸ்டெப் 06: நெயில் பாலிஷ் அப்ளை செய்வது

ஸ்டெப் 06: நெயில் பாலிஷ் அப்ளை செய்வது

வீட்டிலேயே இருப்பதால் நெயில் பாலிஷ் தவிர்ப்பது நல்லது. ஆனால் நெயில் பாலிஷ் பயன்படுத்துவது என நினைத்தால், அதை கடைசி ஸ்டெப் என வைத்துக்கொள்ளுங்கள். எவ்வளவு வெளிர் நிறம் தேர்ந்தெடுக்கிறீர்களோ அவ்வளவு நல்லது. நகத்தில் கரை படாமலிருக்க பேஸ் அப்ளை செய்ய மறக்காதீர்கள்.