கரு வளையங்கள் பலவித காரணங்களால் உண்டாகலாம். தூக்கம் இல்லாதது, மது அருந்துவது, காபி, போதிய தண்ணீர் குடிக்காமல் இருப்பது என பல காரணங்களினால் கண்களுக்கு கீழ் கருப்பு வளையங்கள் உண்டாகலாம். கண்களுக்கு கீழ் உள்ள மென்மையான பகுதி, மெலிதாகி, நீர்த்தன்மை இழந்து, இரத்த நாளங்களை தெரியச்செய்வதால், கண்களைச்சுற்றி கரு வளையங்கள் தெரிகின்றன. இருப்பினும், நீர்த்தன்மை அளிக்கும் உணவுகள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவுகள் இதில் பெரும் மாற்றத்தை கொண்டு வரக்கூடியவை.கீழ்கண்ட உணவுகளை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக்கொண்டால், கரு வளையங்களை மறையச்செய்யலாம்.

 

வெள்ளரி

வெள்ளரி

வெள்ளரி அதிக தண்ணீர் கொண்டிருப்பதால் மிகச்சிறந்த அழகு சாதன உணவாகிறது. இவற்றை உணவில் சில துண்டுகள் சேர்த்துக்கொள்வது, உங்கள் உடல் மற்றும் சருமத்தை நிர்த்தன்மை பெற வைத்து, பல சரும பிரச்சனைகளை தவிர்க்க உதவுகிறது. இதில் வைட்டமி கே இருப்பதால், சருமத்தின் இலாஸ்டிக் தன்மையை மேம்படுத்துகிறது.

 

தர்பூசனி

தர்பூசனி

அதிகபட்சமாக 92 சதவீத தண்ணீர் கொண்டிருப்பதால், தண்ணீர் விகிதத்தை சமன்படுத்தி உடலை நீர்த்தன்மை பெற வைக்கிறது. இதில் உள்ள பல ஆண்டி ஆக்ஸிடெண்ட்கள் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, கருவளையங்களை மறையச்செய்கிறது. இதை சில துண்டுகள் ஸ்னாக்சாக அல்லது பழச்சாறாக பருகலாம்.

 

தக்காளி

தக்காளி

லைகோபின் அளிக்கும், தக்காளி கண்களைச்சுற்றியுள்ள இரத்த நாளையங்களில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. கண்களுக்கான இரத்த ஓட்டத்தையும் மேம்படுத்துகிறது. சாலெட்டில் சேர்த்து தினரும் ஒரு நடுத்தர அல்லது ஏழு செரி தக்காளிகலை உட்கொள்ளவும்.

 

பீட்ரூட்

பீட்ரூட்

உங்கள் சருமத்தை பளிச்சிட வைத்து பொலிவாக்கும் முக்கிய பொர்டுகள் பீட்ரூட்டில் இருக்கின்றன. பீட்டாலின் ஆண்டிஆக்ஸிடெண்ட் இதில் உள்ளது. கண் ஆரோக்கியத்திற்கு இது உதவுகிறது. கருவளையங்களை மறையச்செய்து கண்பார்வையை மேம்படுத்துகிறது. காலையில் ஒரு கிளாஸ் பீட்ரூட் சாறு அருந்தினால் நல்ல பலன் பெறலாம்.

 

புரதம்

புரதம்

புரதம் நிறைந்த உணவு, பிராணவாயுவை மேம்படுத்தி, சருமத்தை ஆரோக்கியமாகவும், பொலிவாகவும் ஆக்குகிறது. தினமும், ஒரு அளவு முட்டை மற்றும் கொஞ்சம் சிக்கன் எடுத்துக்கொண்டால் தேவையான புரதச்சத்து பெறலாம்.