வறண்ட சருமம் பார்ப்பதற்கு சாதாரணமாக இருக்கும். அதை சரிசெய்வதற்கு நீங்கள் நிறைய மாய்ஸ்சுரைஸர் தடவிக் கொள்ள வேண்டும். அத்துடன் அனைத்தும் சரியாகிவிட்டது என்று நினைப்பீர்கள், சரிதானே? நல்லது, ஆனால் உண்மையில் அது மிகவும் சிக்கலானதாகும். மோசமான வறண்ட சருமத்தையுடையவர்கள் எங்களுடைய இந்தக் கருத்தை ஒத்துக் கொள்வார்கள் . துரதிர்ஷ்டவசமாக, நிலைமையை மோசமாக்கக் கூடிய வறண்ட சருமத்தை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதைப் பற்றிய விழிப்புணர்வு இல்லை. மேலும் இதன் விளைவாக சுருக்கங்கள், ஸோரியாஸிஸ், அரிப்பு மற்றும் தடித்தல் போன்ற சரும துன்பங்களுக்கு வழிவகுக்கும்.

மோசமான வறண்ட சருமத்திற்கு எப்படி சிகிச்சை அளிப்பது என்பது பற்றிய சிறந்த நுட்பமான தகவல்களை பெற ஐந்து சரும மருத்துவர்களிடம் கலந்தாலோசித்தோம்.

 

அதிக சூடான தண்ணீரில் குளிப்பதை தவிர்க்கவும்.

அதிக சூடான தண்ணீரில் குளிப்பதை தவிர்க்கவும்.

ஒரு நாள் அல்லது ஒரு வார சோர்வை போக்க நீண்ட நேரம் அதிக சூடான தண்ணீரில் குளிக்கும் போது சுகமாக இருக்கும்படி தோன்றும். இருப்பினும், உங்கள் சருமத்தை மிகவும் மோசமாக வறட்சியடையச் செய்யும் என்று கூறும் சரும மருத்துவர் டாக்டர் சுகம் குப்தா, M.B.B.S., MD., “அதிக சூடான தண்ணீரில் குளிக்கக் கூடாது” என்றும், “கெமிக்கல்ஸ் மற்றும் டிடர்ஜெண்ட்டையும் வறண்ட சருமத்தின் மீது உபயோகப்படுத்த வேண்டாம்” என்றும் அறிவுறுத்துகின்றார்.

 

மென்மையான சோப் /பாடி வாஷ்ஷை பயன்படுத்தவும்.

மென்மையான சோப் /பாடி வாஷ்ஷை பயன்படுத்தவும்.

மோசமான கெமிக்கல்ஸ் மற்றும் சோப்பை ஆதாரமாக கொண்டிருக்கும் க்ளீன்சர்கள் மோசமான வறண்ட சருமத்தின் மிக எளிதாக எரிச்சலை ஏற்படுத்தும். “உங்கள் சோப்பில் ஆல்கலைன் இல்லாமலிருக்க வேண்டும். மேலும், தேவையான pH மதிப்பு 5.5” ஆக இருக்க வேண்டும்” என்று Dr.D.G.P. சாஸ்திரி MBBS, பரிந்துரைக்கிறார். இந்த க்ளீன்சர்கள் தான் சருமத்தின் மீது மிருதுவாகவும், சருமத்தின் மீதுள்ள மாஸ்யரை போக்காமலும் இருக்கும்.

 

துடைக்க வேண்டாம்

துடைக்க வேண்டாம்

தோல் உரிவதால் மோசமாக வறண்ட சருமத்தை மிகவும் மோசமாக்கி விடும். புனே அரசு மருத்துவ கல்லூரியில் அசோசியேட் புரோஃபஸர் டெர்மடாலஜிஸ்ட் B.J.வாக இருக்கும் Dr. அணில் கோசாவி, “ சருமத்தை கடுமையாக தேய்க்கவோ அல்லது துடைக்கவோ கூடாது” என்று அறிவுறுத்துகிறார். குளித்தப்பின் உங்கள் சருமத்தை துடைப்பதைவிட ஒரு துண்டால் மென்மையாக ஒத்தி எடுக்கவும்.

 

ஒரு நல்ல மாஸ்யரைஸரினால் சருமத்திற்கு ஊட்டத்தை அளிக்கவும்

ஒரு நல்ல மாஸ்யரைஸரினால் சருமத்திற்கு ஊட்டத்தை அளிக்கவும்

மாஸ்யரைஸர் உங்கள் சருமத்தின் மாஸ்யரைஸரை தக்க வைக்க உதவுகின்றது. எனவே, “குளித்தப் பிறகும், தூங்குவதற்கு முன்பும் ஒரு நல்ல மாஸ்யரைஸரை போட்டுக் கொள்வது மிக முக்கியமானதாகும்”, காஸ்மெடிக் டெர்மடாலஜிஸ்ட் Dr. மிருனால் கே. மோடி என்று கூறுகிறார்.

 

சருமத்திற்கேற்ற ஆடைகளை அணியுங்கள்

சருமத்திற்கேற்ற ஆடைகளை அணியுங்கள்

மோசமான வறண்ட சருமம் கூட மிக மென்மையானதாக இருக்கும். சில ஆடைகள் மற்றும் காஸ்மெடிக் பொருட்களால், மிக எளிதில் சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். Dr.D.G.P. சாஸ்திரி MBBS, “பொருத்தமற்ற காஸ்மெடிக்ஸ் மற்றும் ஆடைகளை பயன்படுத்தவதை தவிர்க்கவும்” என்று பரிந்துரைக்கிறார். காஸ்மெடிக்ஸ் மற்றும் சரும பராமரிப்பு தயாரிப்புகளை வாங்கும்போது, காலாவதியாகும் தேதியையும், உங்களுக்கு அலர்ஜி ஏற்படுத்தக் கூடிய பொருட்கள் ஏதாவது சேர்க்கப்பட்டுள்ளதா என்பதையும் பரிசோதிக்கவும்.

 

தேவையான அளவு தண்ணீரை குடிக்கவும்

தேவையான அளவு தண்ணீரை குடிக்கவும்

உங்கள் உடலில் நீர்ச்சத்து குறையும் போது, உங்கள் சருமம் மோசமாக வறட்சியடைவதற்கான மற்றொரு காரணமாக இருக்கலாம். எனவே, “நீர்ச்சத்து மேம்படுத்துங்கள், தேவையான அளவு தண்ணீரைக் குடியுங்கள் ”, என்று காஸ்மெடிக் டெர்மடாலஜிஸ்ட் Dr. மிருனால் கே. மோடி கூறுகிறார். டீ, காஃபி, மற்றும் சோடா போன்ற பானங்கள் குடிப்பதை குறைத்துக் கொள்ளுங்கள்.

 

தோல் டாக்டர் /சரும நிபுணரிடமோ கலந்தாலோசனை செய்யுங்கள்

தோல் டாக்டர் /சரும நிபுணரிடமோ கலந்தாலோசனை செய்யுங்கள்

மேலே குறிப்பிட்ட குறிப்புகள் அனைத்தும் மோசமாக வறண்ட சருமத்தை வளப்படுத்துவதற்காக கூறப்பட்டவை. ஆனால். இவற்றால் எந்தவித நிவாரணமும் ஏற்படவில்லையெனில், நிபுணர்களால் மட்டுமே பரிசோதித்து சொல்லக்கூடிய அடிப்படையான சிக்கல் ஏதோ இருப்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். “மோசமான அறிகுறிகள் தென்படும் போது உங்கள் டாக்டர்/சரும நிபுணரை உடனே அணுகவும்”, என்று மும்பை, நியூ மரைன் லைன்ஸ் ரோட், சர்ச்கேட் விலாசத்தில் இருக்கும் காஸ்மெடிக் டெர்மடாலஜிஸ்ட் Dr. மிருனால் கே. மோடி கூறுகிறார். “பார்லர்/க்ளினிகல் நடைமுறைகளுக்கு செல்ல வேண்டாம்”, என்று தி இல்லுமினிஸ் க்ளிக்கின் Dr. ரீமா தாஸ் அறிவுறுத்துகிறார். இத்தகைய நடைமுறைகளால் மோசமான வறண்ட சருமத்தில் மிக எரிச்சலை ஏற்படுத்தக் கூடிய போக்கை உடையது.