எங்களுக்கு தெரியும் உங்களுடைய அழகுசாதனப் பொருட்களில் சீரம், சன்ஸ்க்ரீன் ஆயில் மற்றும் இதர க்ரீம்கள் நிச்சயம் இடம்பெற்றிருக்கும். ஆனால் இது ஒரு முழுமையான சரும பராமரிப்பிற்கு போதுமானதா? உங்கள் கைகளுக்கும் முகத்தினை போலவே வயசாகிக்கொண்டே இருக்கும், மற்றும் அது பலவித சானிடைசர்களை தினமும் தாங்கிக்கொண்டிருக்கிறது. எனவே அதற்கும் சரியான பராமரிப்பு தேவை. நாங்கள் சொல்வது உங்களுக்கு சற்று குழப்பத்தை ஏற்படுத்தலாம். ஆனால் இது முற்றிலும் உண்மை, அதனால் உங்களுடைய பொருட்களில் ஒரு ஹாண்ட் க்ரீம் இருப்பது அவசியமானது.

 

01. ஈரப்பதத்திற்காக

01. ஈரப்பதத்திற்காக

யோசித்து பாருங்கள். ஒரு நாளைக்கு எத்தனை முறை உங்கள் கைகளை கழுவி இருப்பீர்கள்? குளிர்காலங்களின் போது நம் கைகள் வறண்டு உலர்ந்து போவதற்கும் வாய்ப்புள்ளது. நாம் எத்தனை முறை கைகளை கழுவினாலும் சானிடைசரை பயன்படுத்தினாலும் பயன் இல்லை. நமது உள்ளங்கைகளில் மற்றும் விரல்களில் உள்ள எண்ணெய் துவாரங்கள் மிகவும் சிறியவை. எனவே கைகள் சீக்கிரம் உலர்ந்து விடும். ஹாண்ட் க்ரீமானது உங்கள் கைகளில் உள்ள வறட்சி, வெடிப்பு ஆகியவற்றை நீக்கி தேவையான ஈரபதத்தையும் தரும்.

 

02. சரும தொற்றுகளை தவிர்ப்பதற்காக

02. சரும தொற்றுகளை தவிர்ப்பதற்காக

நம் உடம்பிலேயே நமது கைகளைத் தான் அதிகமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். எனவே எப்போதும் அதில் அடி அல்லது தோற்று ஏற்பட நேரலாம். எனவே ஹாண்ட் க்ரீம் மூலம் ஒரு பாதுகாப்பு அடுக்கை ஏற்படுத்தாமல் இருந்தால் கிருமிகள் நம் கைகளை ஆக்கிரமிக்கலாம். எனவே ஹாண்ட் க்ரீம் உங்கள் கைகளுக்கு ஒரு கவசம் போன்றது.

 

03.நகங்களின் கீழேயுள்ள தோல்பகுதிக்கு ஊட்டச்சத்து அளிப்பதற்காக

03.நகங்களின் கீழேயுள்ள தோல்பகுதிக்கு ஊட்டச்சத்து அளிப்பதற்காக

நகங்களின் கீழேயுள்ள தோல்பகுதி தான் நமது நகங்களை தொற்றிலிருந்து காக்கின்றது. ஆனால் தினசரி இந்த பகுதி அழுக்கினாலும், அதிகப்படியான நீரினாலும், கிருமிகளாலும் பாதிக்கப்படுகின்றது. பலமற்ற தோல்பகுதியினால், இதிலிருந்து நகங்களை பாதுக்காக்க இயலாது. எனவே சிறிதளவு க்ரீமை எடுத்து இந்த இடங்களில் மசாஜ் செய்வது அவசியம்.

 

04.முதிர்ச்சியினை கட்டுப்படுத்துவதற்காக

04.முதிர்ச்சியினை கட்டுப்படுத்துவதற்காக

நாங்கள் கூறியது நினைவிருக்கிறதா? முகத்தினை போலவே கைகளுக்கும் சீக்கிரம் வயதாகிக்கொண்டே இருக்கும். நம் கைகளின் பின்புறம் சிறிதளவு சுரப்பிகள் உள்ளன, எனவே அவை சீக்கிரம் உலர்ந்து விடும். இதனை கண்டுக்கொள்ளாமல் இருந்தால், வறட்சி ஏற்பட்டு கைகளில் சுருக்கங்கள் தென்படலாம். சிறிதளவு க்ரீமை பயன்படுத்துவதன் மூலம் இந்த பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

 

05.மன அழுத்தத்தை குறைப்பதற்காக

05.மன அழுத்தத்தை குறைப்பதற்காக

நம் கைகளை மசாஜ் செய்வதனால் சிறப்பான பலன்கள் இருக்கின்றன. மன அழுத்தத்துடன் நாட்களை கடக்கும் நாம் நமது உள்ளங்கைகள், விரல்கள் ஆகியவற்றை மசாஜ் செய்வதனால் நம் நரம்புகள் சாந்தமடைந்து, பதற்றம் தணிந்து லேசாக இருப்போம்.