ரோஜாக்களின் நிறமும், வைலட்களின் நிறமும் உங்களுக்கு தெரிந்தது தான். ஆனால் இந்த மலர்களுக்கு சரும நலன் காக்கும் குணம் இருப்பதும், வடுக்களின் தோற்றத்தை போக்கும் என்பதும் உங்களுக்குத்தெரியுமா? பல காலமாகவே மலர்கள் சரும நலனில் முக்கிய அங்கம் வகித்து வருகின்றன. லோஷன்கள் முதல் பாடி வாஷ் வரை, பல சரும நல பொருட்களில் மலர்கள் பயன்படுத்தப்படுகின்றன. சரும நலனுக்கான பொருட்களில் அதிகம் பயன்படுத்தப்படும் மலர்கள் மற்றும் அவை அளிக்கும் பலன்களும், அவற்றை எப்படி உங்கள் சரும நலனில் சேர்த்துக்கொள்ளலான் என்பதற்கான வழிமுறைகளையும் பார்க்கலாம்.

 

ரோஜா

ரோஜா

அழகு சாதன பொருட்களில் பரவலாக பயன்படுத்துப்படும் பொருட்களில் ஒன்றான ரோஜா, அதன் தீவிரமான நீர்த்தன்மை அளிக்கும் குணத்திற்காக அறியப்படுகிறது. அது சூரிய ஒளி பாதிப்பு கொண்ட மற்றும் புண் பாதிப்பு கொண்ட சருமத்தை குணமாக்கும். எனவே தான், கோடைக்காலத்தில் ரோஜா நீரை சில மணி நேரங்களுக்கு ஒரு முறை தெளித்துக்கொள்வதை அழகுகலை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இதை தொடர்ந்து பயன்படுத்துவது மூலம், கரும்புள்ளிகள், வெள்ளை புள்ளிகள் தோன்றுவதை குறைத்து சருமத்தின் pH சமனையும் காக்கிறது.

 

மல்லிகை

மல்லிகை

தென்னிந்தியா மற்றும் மேற்கு இந்தியாவில் பிரபலமாக பயன்படுத்தப்படும் இந்த மலர் பலவித அழகுசாதன பலன்களை அளிக்கிறது. அனைத்து வகை சருமம் மற்றும் பருவக்காலங்களுக்கு ஏற்ற மல்லிகளை, சருமத்தை பிரிரேடிகல்ஸ் மற்றும் சுற்றுச்சூழலின் பாதிப்பில் இருந்து காக்கிறது. குளிர் காலத்தில் இது, சருமத்தை நீர்த்தன்மை பெற வைத்து, உலர் தன்மையை விலக்கி வைக்கிறது. லக்ஸ் வெல்வெட் டச் பாடி வாஷ் வித் ஜாஸ்மின் Velvet Touch Body Wash With Jasmine மற்றும் பாதாம் எண்ணெய் உங்கள் சருமத்தின் மீது ஈரப்பத லேயரை உண்டாக்கி, அதை பளபளப்பாகவும், மென்மையாகவும் வைத்திருக்கும்.

 

சாமந்தி

சாமந்தி

பூஞ்சை எதிர்ப்பு, கிருமி எதிர்ப்பு, ஆண்டி ஆக்ஸிடெண்ட் தன்மை மற்றும் புண்களை குணமாக்கும் ஆற்றல் என பலவித பலன்களை கொண்ட மலராக சாமந்தி திகழ்கிறது. பருக்கள் துவங்கி, காயங்கள், சுருக்கங்கள் என பலவித சரும பிரச்சனைகளை இது சீராக்குகிறது. சாமந்தி சருமத்தை இயற்கையாக ஈரப்பதம் பெற வைத்து, அதன் இலாஸ்டிக் தன்மையை மேம்படுத்துகிறது. சாமந்தியின் பலனை எளிதாக பெறுவதற்கான வழி சாமந்தி டீபேகை பயன்படுத்துவதாகும். டீயை குடித்தப்பிறகு டீபேகை பிரிட்ஜில் வைத்திருந்து தேவைப்படும் போது எடுத்து முகத்தில் மென்மையாக தேய்த்துக்கொள்ளலாம்.

 

செம்பருத்தி

செம்பருத்தி

ஏ.எச்.ஏ அல்லது ஆல்பா ஹைட்ராக்சி அமிலம் நிறைந்த இந்த மலரை உங்கள் சரும நலனில் சேர்த்துக்கொள்வதில், உங்கள் சருமத்தை இளமையாக தோன்ற வைத்து, டார்க் ஸ்பாட்களை குறைக்கிறது. உங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும், அழகாககவும் வைத்திருப்பதோடு, செம்பருத்தி உங்கள் கூந்தலுக்கும் பலன் தரக்கூடியது. இந்த மலரை பேஸ் மாஸ்க் மற்றும் ஸ்கிரப்பில் பயன்படுத்தலாம். உச்சந்தலையை செம்பருத்தி எண்ணெயால் மசாஜ் செய்து கொண்டால் முடி உதிர்வதை தடுக்கலாம்

 

தாமரை

தாமரை

இந்தியாவின் புனிதமான மலராக இருப்பதோடு, தாமரை இதழ்களில் வைட்டமின் சி, வைட்டமின் பி காம்பிலக்ஸ் மற்றும் பலவித அத்தியாவசிய தாதுக்கள் இருக்கின்றன. எண்ணெய் பசை சருமத்தில் இது செபம் சுரப்பதை சீராக்கி, துளைகள் அடைபடுவது மற்றும் பருக்களை தடுக்கிறது. தாமரை எண்ணெய் தலைமுடி உதிர்வதை தடுத்து, முன்கூட்டியே நரை முடி தோன்றுவதையும் தடுக்கிறது.