உடலின் வெப்பநிலை குறையும்போது, உங்களுடைய சருமத்தில் வறட்சி, நமைச்சல் மற்றும் சுருக்கம் ஏற்படுவது சகஜம். குளிர்காலத்தில் ஏறபடக்கூடிய வறண்ட சருமத்தைத் தவிர்ப்பது எப்படி... ஸ்லேதரிங் ஸெரமஸ், மாய்ச்சரைஸர், ஹேண்ட க்ரீம்ஸ், ஃபூட் க்ரீம்ஸ், லிப் பாம்ஸ் போன்றவைகளை உபயோகிப்பது மட்டும்தான் ஒரே வழி என நினைப்பீர்கள். ஆனால் உங்களுடைய சருமங்கள் மென்மையாகவும், மிருதுவாகவும் இருப்பதற்கும், சருமத்திற்கு நீர்ச்சத்து கிடைப்பதற்கு உங்களுடைய உணவுப் பழக்கங்களிலும் கவனித்தில் கொள்ள வேண்டும். மறவாதீர்கள்: நாம் உண்ணும் உணவே, நம்முடைய பலமும், பலவீனமும். சருமத்தில் சுரக்கும் ஈரப்பதத்தை தடுக்கவும், வெளி தாக்குதலிலினால் ஏற்படும்

பாதிப்புகளை தடுக்கவும் ஒரு பாதுகாப்பு சுவர் உங்களுடைய சருமத்தில் இயற்கையாகவே உள்ளது. எனினும், மாசுகள், தொற்றுகள் மற்றும் கடுமையான வானிலை போன்றவற்றினால் இந்த பாதுகாப்பு சுவர்கள் பாதிப்புகள் ஏற்பட்டு, அதன் விளைவாக சருமத்தில் வறட்சி மற்றும் சுருக்கமும் ஏற்படும். சத்துள்ள உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உங்கள் சருமத்தின் லிபிட் தடுப்பை பலப்படுத்தலாம். குளிர்காலத்தில் உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு உங்கள் உணவுகளில் சேர்த்துக் கொள்ள வேண்டியவை இங்கே கூறப்பட்டுள்ளது.

 

01. ஒமேகா - 3 ரிச் ஃபுட்

ஒமேகா - 3 ரிச் ஃபுட்

ஒமேகா - 3 ரிச் ஃபுட் உங்கள் சருமத்திற்குத் தேவையான, ஆயிலை உற்பத்தி செய்து, நீர்ச் சத்துடன் வைத்துக் கொள்ள செய்கிறது. உங்கள் சருமத்திலுள்ள லிபிட் தடுப்பை அதிகரிக்க சல்மான் மற்றும் ஃபளாக்ஸீட் போன்ற உணவுகள் மிகவும் நன்றாக வேலை செய்ய்யும். மீனின் சுவை பிடிக்காதவர்களுக்கு மீன் எண்ணெய் சப்ளிமெண்ட் எடுத்துக் கொள்ளலாம். எனினும், இவற்றில் நச்சுத்தன்மையுள்ளதால் அளவுக்கதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

 

02. கோலேஜென் – ரிச் ஃபுட்

கோலேஜென் – ரிச் ஃபுட்

உங்கள் உணவில் கோலேஜென்னும், புரோட்டீனும் குறையும்போது, உங்களுடைய சருமம் வறண்டு போகிறது. இதுவே, மெல்லிய கோடுகள் மற்றும் இளமுதுமைக்கும் காரணமாகிறது. உங்களுடைய சருமம் மீண்டும் நல்ல தோற்றத்தைப் பெற, குறிப்பாக குளிர்காலத்தில் கோலெஜென்-ரிச் ஃபுட்களை உங்கள் உணவுகளில் சேர்த்துக் கொள்ளவும். எலும்புக் குழம்பு(போன் ப்ராத்), சிட்ரஸ் உணவுகள், முட்டை, பூண்டு முதலிய ஒரு சில உணவுகளில் கோலேஜென்னை சத்துக்கள் உள்ளது.

 

03. நல்ல கொழுப்பு மற்றும் புரோட்டீன்

நல்ல கொழுப்பு மற்றும் புரோட்டீன்

குளிர்காலத்தில் உங்கள் சருமத்தை பாதுக்காக்கும் சுவரை பலப்படுத்துற்கு நல்ல கொழுப்புச் சத்துக்கள் உள்ளவற்றை உண்பது வேறொரு வழியாகும். சூரியகாந்திப்பூ விதைகள், பாதாம், சியா விதைகள், வால்நட் முதலிய பருப்புவகைகளை உண்பதிலிருந்து நல்ல கொழுப்புச் சத்துக்களை பெற முடியும். வெண்ணெய், ஆலிவ் ஆயில் மற்றும் ஈவினிங் ப்ரிம்ரோஸ் ஆயில் முதலியவற்றிலும் நல்ல கொழுப்புச் சத்துக்கள் இருப்பதாகக் கருதப்படுகிறது.

 

04. விட்டமின் ஏ

விட்டமின் ஏ

சருமத்தின் மீள்தன்மையை மேம்படுத்துவதோடு, மோசமான சேதத்திலிருந்தும் விட்டமின் ஏ பாதுகாக்கின்றது. இதனால், உங்கள் சருமம் மிருதுவாகவும், இளமை லுக்குடனும் காணப்படும். கேரட், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பிராக்கோலி, பரங்கிக்காய் முதலியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை சருமத் திசுக்களை சரிசெய்வது மட்டுமல்லாமல், குளிர்காலத்தில் பொதுவாக சருமத்தைத் தாக்கும் வறட்சியிலிருந்தும் பாதுகாக்கின்றன.

 

05. தண்ணீர்

தண்ணீர்

ஆமாம், சரியாகத்தான் நீங்கள் படித்துள்ளீர்கள்; தண்ணீர் உணவு அல்ல, இருப்பினும், இந்தப் பட்டியலில் இடம்பெறுவதற்கான முக்கியத்தவும் தண்ணீரில் உள்ளது. ஏனெனில், தண்ணீரைவிட உங்கள் உடல் மற்றும் சருமத்தை நீர்சத்து உடையதாக வைத்துக் கொள்ள முடியாது. குளிர்காலத்தில், தாகம் அதிகம் எடுக்காததால். குறைந்தளவு தண்ணீரையே நீங்கள் குடிப்பீர்கள். இதன் காரணமாக உங்கள் உடலின் நீர்ச்சத்து குறைந்துவிடும், உங்கள் சருமம் வறண்டு விடும். இதிலிருந்து விடுபடவும், சருமத்தின் நன்மைக்கும், தினமும் 8-10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.