நீங்கள் என்னைப் போலவே ஸ்கின்கேர் பைத்தியம் என்றால் உங்கள் பாத்ரூம் ஒரு பரிசோதனைக்கூடமாக ஆக்கியிருப்பீர்கள் என்பது நிச்சயம். அதைச் சேர்த்து, இதைச் சேர்த்து என பலவற்றையும் மிக்ஸ் செய்வது வழக்கமாகச் செய்யக்கூடியதுதான் என்றாலும் சில உட்பொருட்கள் சேர்க்கப்பட்டால் சரியாக செயல்படுவதில்லை.

எல்லோருக்கும் மாயா ஜாலம் போல பலன் தரக்கூடியது வைட்டமின் சி. ஃப்ரீ ரேடிகல்ஸ் நீக்குவது, சேதமடைந்த செல்களை சரி செய்வது, சருமத்தின் புத்துயிர் பெறு திறனை அதிகரிப்பது என இதில் நிறைய ஆன்டி-ஆக்ஸிடென்ட் உள்ளது. ஆனால் வைட்டமின் சியையும் சரும நலனுக்கான வேறு பொருட்களையும் சேர்க்கும் போது கவனமாக இருக்க வேண்டும். தனித்தனியாக அற்புதமான பலன்களைக் கொடுக்கும் என்றாலும் சேர்த்து பயன்படுத்தினால் சொதப்பிவிடும். அதற்கான உஷார் டிப்ஸ் இதோ...

 

வைட்டமின் சி+பென்ஸாயில் பெராக்ஸைட்

வைட்டமின் சி+பென்ஸாயில் பெராக்ஸைட்

பருக்கள் லேசாகவோ அதிகமாகவோ இருக்கும் போது அற்புதமாக பலன் தரக்கூடியது பென்ஸாயில் பெராக்ஸைட். ஆனால் அதை வைட்டமின் சியுடன் சேர்ப்பது சருமத்திற்கு நல்லதல்ல. அதைச் சேர்க்கும் போது வைட்டமின் சியும் பென்ஸாயில் பெராக்ஸையும் தரும் பலன்கள் (நேர் எதிர் செயல்கள் மூலம்) இல்லாமல் போகும்.

 

வைட்டமின் சி+ரெடினால்

வைட்டமின் சி+ரெடினால்

வயதாவதைத் தடுக்கும் சக்தி கொண்ட ரெட்டினாய்ட்ஸ், சுருக்கங்களும் கோடுகளும் ஏற்படாமல் குறைக்கும். ஆனால் அதனுடன் வைட்டமின் சி சேர்த்தால் தோல் உரிய ஆரம்பிக்கும், சிவப்பாக மாறும் அரிப்பு ஏற்படும். சருமம் மொத்தமாக அம்பேல். அதனால் காலையில் வைட்டமின் சி இரவில் ரெட்டினால் பயன்படுத்துவது நல்லது.

 

வைட்டமின் சி+ஏ.ஹெச்.ஏ, பிஹெச்.ஏ

வைட்டமின் சி+ஏ.ஹெச்.ஏ, பிஹெச்.ஏ

ஆல்ஃபா ஹைட்ராக்ஸி அமிலம் (ஏ.ஹெச்.ஏ), பீட்டா ஹைட்ராக்ஸி அமிலம் (பி.ஹெச்.ஏ) ஆகியவை இறந்த செல்களை நீக்க உதவும் அரு மருந்து. ஏ.ஹெச்.ஏ சருமத்தின் மேற்பரப்பை குணப்படுத்தும், சரும துளைகளுக்குள் ஊடுருவிச் செல்லும் பி.ஹெச்.ஏ இறந்த செல்களை நீக்குவதோடு கூடுதலாக இருக்கும் எண்ணெய்ப் பசையையும் நீக்கும். அதனால் வைட்டமின் சியுடன் சேர்த்து பயன்படுத்தினால் சருமம் உரியும். அதனால் காலையில் வைட்டமின் சி இரவில் ஏ.ஹெச்.ஏ அல்லது பி.ஹெச்.ஏ பயன்படுத்துவது நல்லது.

 

வைட்டமின் சி+நியாசினாமைட்

வைட்டமின் சி+நியாசினாமைட்

சருமத்தில் புரதச் சத்து சேர்வதற்கு வைட்டமின் பி3 என அழைக்கப்படும் நியாசினாமைட் மிகவும் உபயோகமாக இருக்கும். சீரற்ற சரும நிறத்தை குணப்படுத்தும் ஆற்றல், சரும துளைகள் பெரிதாவதைத் தடுக்கும் சக்தி, கோடுகள் சுருக்கங்களைத் தடுக்கும் தன்மை கொன்டது நியாசினாமைட். இதனால் சருமத்தில் ஆரோக்கியமான மினுமினுப்பு தெரியும். ஆனால் வைட்டமின் சியுடன் சேர்க்கும் போது ஒன்றின் பலன்களை மற்றொன்று இல்லாமல் செய்துவிடும்.