சரும தன்மை (ஸ்கின் டோன்) சமமில்லாமல் இருப்பது உங்கள் அழகு கலையை பாதிக்கிறதா? இந்த சரும பிரச்சனை எத்தனை பரவலாக இருக்கிறது என்பது பலரும் அறியாதது. அநேகமாக எல்லோருமே இந்த பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர் எனலாம். சமமில்லாத சரும தன்மை, குறிப்பாக முகத்தில் உண்டாகும் போது, சோர்வை அளிக்கலாம். உலர் தன்மைக்கு அதிகம் இலக்காக கூடிய வாயைச்சுற்றியுள்ள பகுதியில் இது பாதிக்கும் போது இன்னும் கூட மோசமாக இருக்கலாம். உதடுகள் மற்றும் கண்ணத்தை சுற்றியுள்ள சருமம், மொத்த முகத்தையும் மங்கச்செய்த்து பொலிவிழக்க வைக்கலாம். இது சோர்வளிக்கவே செய்யும்.  

ஆனால் இதற்கு சில இயற்கையான தீர்வுகளை முன்வைக்கிறோம். வாயை சுற்றியுள்ள கரு வளையங்களை போக்க இந்த எளிய வீட்டு குறிப்புகளை பின் பற்றிப்பாருங்கள்.

 

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறில் உள்ள சிட்ரிக் அமிலம், டார்ஸ் ஸ்கின் செல்களை தடுத்து, அடர் திட்டுகளை குணமாக்குகிறது. எனவே தான், எலுமிச்சை சாறு உங்கள் சருமத்தை இயற்கையாக பிளிச் செய்வது என்று வரும் போது எலுமிச்சை சாறு மிகச்சிறந்த சிகிச்சைகளில் ஒன்றாக இருக்கிறது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம். எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி, ஒரு பாதியை வாயைச்சுற்றியுள்ள பகுதியில் 10 முதல் 15 நிமிடங்கள் மென்மையாக தேய்த்துக்கொண்டு அதன் பிறகு முகத்தை கழுவுக்கொள்வது தான்.

 

ஓட்மீல் ஸ்கிரப்

ஓட்மீல் ஸ்கிரப்

பொலிவான தோற்றத்தை பெறுவதில் ஓட்மீல் உங்களுக்கு இயற்கையாக உதவுகிறது. இறந்த செல்களை, படிந்திருக்கும் அழுக்குகளை உதிரச்செய்வதன் மூலம் இது சமமான சரும தன்மையை அளிக்கிறது. இந்த ஸ்கிரப்பை தயார் செய்ய, உங்கலுக்கு தேவை எல்லாம் ஓட்மீஸ், தக்காளி சாறு மற்றும் ஆலிவு ஆயில் மட்டும் தான். இந்த கலவையை முகத்தில் பூசிக்கொண்டு சிறிது நேரம் ஸ்கிரப் செய்யவும். அதன் பிறகு தண்ணீரால் கழுவிக்கொள்ளவும்.

 

பப்பாளி

பப்பாளி

வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்த பப்பாளி உங்கள் வாயைச்சுற்றியுள்ள பகுதி பொலிவாகவும், சமமான தன்மை பெறவும் உதவுகிறது. பப்பாளி ஸ்லைஸ் மற்றும் பன்னீர் கொண்டு கெட்டியான கலவை தயாரித்து, அதை சருமத்தில் பூசிக்கொண்டு 30 நிமிடம் இருக்கவும். அதன் பிறகு குளிரிந்த நீரில் கழுவிக்கொள்ளவும்.

 

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கில் உள்ள பிளிச்சிங் குணம், சரும பிக்மண்டேஷனை அகற்றுகிறது. மென்மையான சருமத்திற்கு நல்ல பலனை அளிக்கும். உருளைக்கிழங்கை இரண்டாக வெட்டி, அதன் ஒரு துணடை உங்கள் வாயை சுற்றியுள்ள பகுதியில் வட்ட வடிவில் தேய்க்கவும். 20 நிமிடம் இவ்வாறு செய்து, தண்ணீரில் கழுவிக்கொள்ளவும்.

 

மஞ்சள்

மஞ்சள்

மஞ்சள், பிக்மண்டேஷனை சீராக்குவதோடு, நுன்கோடுகள், சுருக்கங்கள் தோன்றுவதையும் குறைக்கிறது. இந்த மாஸ்கை தயாரிக்க, மஞ்சள் தூளை ஒரு கோப்பையில் தண்ணீருடன் கலந்து வாயை சுற்றியுள்ள பாதிக்கப்பட்ட பகுதிகளில் பூசிக்கொண்டு 10 அல்லது 15 நிமிடங்கள் கழித்து மிதமான தண்ணீரில் கழுவிக்கொள்ளவும்.