நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய எண்ணற்ற விஷயங்களை மனதில் கொண்டு பார்க்கும் போது, உங்கள் வாழ்க்கையின் முக்கிய நாளான திருமண தினத்திற்கு தயாராவது அழுத்தம் மிக்க செயலாக இருக்கும். ஆடைகள் முதல் உள் அலங்காரம் வரை, எல்லா விஷயங்களும் உங்கள் கவனத்தை கோருகின்றன. இந்த அழுத்தங்கள் அனைத்தும் உங்கள் கூந்தல் மற்றும் சருமம் மீது தாக்கம் செலுத்தும்,. திருமணத்திற்கு முந்தைய பரபரப்பில் இது தேவையில்லாதது. திருமண தினத்திற்கு முன் உங்கள் மணப்பெண் தோற்றத்தை மேலும் பொலிவாக்கும் வகையில், சில வாரங்களுக்கு முன் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய எளிய அழகு சாதன குறிப்புகளை பார்க்கலாம்...

·    பொலிவான சருமத்திற்கு

·    மென்மையான, நீர்த்தன்மை மிக்க சருமம்

·    மென்மையாப பாதங்கள்

·    பளிச்சிடும் பற்கள்

·    எதிர்பாராத பிரேக் அவுட்

 

பொலிவு பெறும் சருமம்

பொலிவு பெறும் சருமம்

ஒவ்வொரு மணமகளுக்கும் மிகவும் அவசியமானது பொலிவு மிக்க சருமமாகும். ஹைலைட்டர் உங்களுக்கு உதவும் என்றாலும், உள்ளிருந்து வரும் பொலிவுக்கு ஈடானது எதுவுமில்லை. அரை வைட்டமின் சி மாத்திரையை பொடியாக்கி, உங்கள் இரவு கிரீம் அல்லது சீரத்துடன் கலந்து பயன்படுத்தி மறுநாள் பொலிவு மிக்க, மென்மையான சருமத்துடன் கண் விழியுங்கள்.

 

மென்மையான, நீர்த்தன்மை மிக்க சருமம்

மென்மையான, நீர்த்தன்மை மிக்க சருமம்

மிக உலர் சருமம் மற்றும் எளிதில் பாதிக்க கூடிய சருமத்தை நீங்கள் பெற்றிருந்தால், ஒளிப்படங்களில் தோன்றும் போது, மேக்கப் அதை மேலும் அதிகமாக்க செய்யலாம். உலர் சரும பிரச்சனையை எதிர்கொள்ள, டீ ட்ரி ஆயிலை, பாதம் எண்ணெயுடன் கலந்து, படுக்க செல்லும் முன் உங்கள் முகத்தில் தடவிக்கொள்ளவும். இது அழமான நீர்த்தன்மை அளிப்பதோடு, கரு வளையங்களையும் அகற்றும்.

 

மிக மென்மையான பாதங்கள்

மிக மென்மையான பாதங்கள்

திருமண வைபவத்தின் போது நீங்கள் உலர் பாதத்துடன் காட்சி அளிக்க விரும்பமாட்டீர்கள். உங்கள் பாதத்தின் மீது வாசலின் தடவி, அதன் மீது பருத்தி சாக்ஸ் அணிவதன் மூலம் குழந்தை போன்ற மென் சருமத்தை பெறலாம். உலர் மற்றும் கோடுகள் கொண்ட பாதங்களுக்கு இது மிகவும் செயல்திறன் வாய்ந்த சிகிச்சையாகும்.

 

பளிரிடும் பற்களுக்கு

பளிரிடும் பற்களுக்கு

திருமண தினத்தன்று யாரும் மஞ்சள் படிந்த அல்லது துகள்கள் சிக்கிய பற்களுடன் காட்சிகள் அளிக்க விரும்ப மாட்டார்கள். சிவப்பு லிப்ஸ்டிக், பற்களின் மஞ்சள் தன்மையை மேலும் அதிகமாக்கி, தோற்றத்தை பாதிக்கலாம். உங்கள் டூத் பிரெஷ்சில் பேக்கிங் சோடா அல்லது கறி தூவி பல் தேய்த்தால், பளிரிடும் பற்களோடு மின்னும் புன்னகை பெறலாம்.

 

எதிர்பாராத பிரேக் அவுட்

எதிர்பாராத பிரேக் அவுட்

இது மணப்பெண்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தலாம். திருமண நாளுக்கு முன், கண்டறியப்படாத பிரேக் அவுட்கள் மிகுந்த சங்கடத்தை அளிக்கலாம். படுக்க செல்லும் முன், கொஞ்சம் பற்பசையை ( ஜெல் வேண்டாம்) பயன்படுத்துவதன் மூலம் இதை அகற்றலாம். இது பருக்களையும் உலர வைத்து, வடுக்களையும் விட்டுச்செல்லாமல் இருக்கும்.