சுற்றிலும் கிருமிகளால் சூழப்பட்டுள்ள நிலையிலும் நாம் ஆரோக்கியமாக தான் இருக்கிறோம் அல்லவா? அதற்கு முக்கிய காரணம் நம்முடைய உடலில் உள்ள நோய் எதிர்ப்பு அமைப்பு தான். கிருமிகள் மற்றும் நுண்கிருமிகளுக்கு எதிராக தொடர்ந்து செயல்திறன் வாய்ந்த வழியில் போராடிக்கொண்டிருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குளிர் மற்றும் காய்ச்சல் காலங்களில் கூடுதலாக செயல்படுகிறது.

ப்ளு காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாவதோடு, உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்திக்கொள்ளக்கூடிய ஆரோக்கியமான பழக்கங்களை ஏற்படுத்திக்கொள்ளலாம். இந்த குளிர் காலத்தில் உங்களை தற்காத்து கொள்வதற்கான எளிய வழிகள்…

  • அதிக பழங்கள், காய்கறிகள்
  • வைட்டமின் டி
  • நல்ல தூக்கம்
  • பூண்டு
 

அதிக பழங்கள் மற்றும் காய்கறிகள்

அதிக பழங்கள் மற்றும் காய்கறிகள்

மோசமான உணவு பழக்கம் கொண்டவர்கள் எளிதாக நோய் பாதிப்பிற்கு உள்ளாகும் அபாயம் இருக்கிறது. எனவே தான் உணவில் தினமும் போதிய வைட்டமின்கள், தாதுக்கள் இருக்க வேண்டும். குளிர் காலத்தில் இது மிகவும் அவசியம். ஆண்டிஆக்ஸிடெண்ட், வைட்டமின் சி, மற்றும் ஏ கொண்ட உணவுகள் மிகவும் உதவியாக இருக்கும். சிட்ரஸ் பழங்கள், ப்ரோகோலி, கீரை, பரங்கிகாய் உள்ளிட்ட உணவுகளை போதிய புரதம் மற்றும் சாப்பாட்டுடன் எடுத்துக்கொள்ள வேண்டும்.  

 

வைட்டமின் டி தேவை

வைட்டமின் டி தேவை

பத்து அல்லது பதினைந்து நிமிடங்களுக்கு சூரிய ஒளியை பெறுவது கூட உங்கள் சருமத்திற்கு போதிய வைட்டமின் டி அளித்து, உங்கள் எலும்புகளை மேம்படுத்தி, சுவாச தொற்றில் இருந்து உங்களை காக்கிறது. எனினும் குளிர் காலம் என்பதால் சன்ஸ்கீரின் பயன்பாட்டை தவிர்த்துவிட முடியாது. சூரிய ஒளிக்கதிர்கள் ஆண்டு முழுவதும் சக்தி மிக்கவை மற்றும் உங்கள் சருமத்தை பாதிக்க கூடியது. லாக்மே சன் எக்ஸ்பர்ட் அல்ட்ரா மேட்டே எஸ்.பி.எப் 50 பிஏ +++ ஜெல் உங்களுக்கு யூவி கதிர்களில் இருந்து 97 சதவீத பாதுகாப்பு அளிக்கிறது.

 

ஆரோக்கியமான தூக்கம் முக்கியம்

ஆரோக்கியமான தூக்கம் முக்கியம்

ஆரோக்கியமான தூக்க பழக்கத்தை உருவாக்கி கொண்டு இயன்றவரை மன அழுத்தத்தை தவிருங்கள். தூக்கம் இல்லாத மற்றும் மன அழுத்தம் மிக்க உடல் , பலவீனமான நோய் எதிர்ப்பு அமைப்பையே பெற்றிருக்கும். 7 முதல் 9 மணி நேரம் வரையான தடையில்லா தூக்கத்தை பெற முயலுங்கள். கொஞ்சம் லாவண்டர் எண்ணெயை டிஷ்யூவில் நனைத்து தலையவை அடியில் வைத்துக்கொண்டால் தூக்கம் மேம்படும்.  

 

பூண்டு பயன்பாடு

பூண்டு பயன்பாடு

உலகம் முழுவதும் எல்லா உணவிலும் பூண்டு பயன்பாடு முக்கியமாக இருக்கிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை இயல்பாக அதிகரிக்கிறது. உங்கள் உடலுக்கு மிகவும் அவசியமானது. பூண்டு இரத்த அழுத்ததையும் குறைப்பதாக அறியப்படுகிறது. தமனி இறுகுவதையும் மெதுவாக்குகிறது. பூண்டை சூப்பில் சேர்த்துக்கொள்ளலாம். காய்கறிகளுடன் சேர்த்து அல்லது உணவில் சேர்த்து பயன்படுத்தலாம்.