முகப்பருவை விட மோசமானது எது என்பது உங்களுக்கு தெரியுமா? முகப்பரு இருப்பதால்தான் உங்களுடைய சருமம் மிருதுவானது என்பதை கண்டுபிடிக்க முடியும்! மிருதுவான முகச்சருமத்தில் ஏற்படும் முகப்பருவுக்கு சிகிச்சையளிப்பது என்பது உண்மையான போராட்டம் ஆகும் என்பதை அதனால் அவதிப்படுபவர்களுக்கு நன்றாகத் தெரியும். எந்த வயதிலும் முகப்பருவை சமாளிப்பது மனஉளைச்சலை உண்டாக்கும். மிருதுவான சருமத்திலுள்ள முகப்பருவை சமாளிக்க வேண்டிய சூழ்நிலை வரும்போது, அதற்கு கொஞ்சம் மென்மையான மற்றும் சிறிது அக்கறையும் தேவைப்படுகிறது.

 

பீபி : உங்கள் முகப்பருவை எப்படி அகற்றப் போகிறீர்கள்? மருத்துவர் எம்.ஷா:

பீபி :  உங்கள் முகப்பருவை எப்படி அகற்றப் போகிறீர்கள்? மருத்துவர் எம்.ஷா:


மேக்கப்புடன் உறங்கக் கூடாது:  எந்தவகை சருமத்தை உடையவர்களாக இருந்தாலும், கட்டாயமாக மேக்கப்புடன் படுத்துறங்கக் கூடாது. இதனால், சீக்கிரமான சரும முதிர்ச்சி, முகப்பருக்கள், சருமத்துவாரங்கள் அடைதல் போன்ற பிரச்னைகள் வருவதற்கு காரணமாகின்றது.   

  • உங்களுடைய ப்ரஷகளை கழுவவும்:  எப்போதும் உங்களுடைய மேக்கப் ப்ரஷ்களை நன்றாக கழுவி வைத்துக் கொள்ளவும்.  உங்களுடைய ப்ரஷ்களை எப்போது பயன்படுத்தும்போதும்,  எண்ணெய் பிசுக்கு, இறந்த சரும் செல்கள், மற்றும் பாக்டீரியா போன்றவை அவற்றில் சேர்ந்து கொள்வதால் அவை உங்கள் சருமத்தின் மீதும். ஒட்டிக்கொள்ளும். இதன் விளைவாக முகப்பரு வருவதற்கும் வாய்ப்புள்ளது.
  • மற்றவர்களுடைய ப்ரஷகளை பயன்படுத்தக் கூடாது:  மற்றவர்களுடைய மேக்கப் ப்ரஷ்களை பயன்படுத்துவதினால், முகப்பரு உருவாவதற்கு காரணமாகும் பாக்டீரியாக்கள் பரவும். அடிப்படையில், மற்றவர்களுடைய முகப்பரு மற்றும் பாக்டீரியா உங்கள் முகத்தையும் பாதிக்கும்.
  • 6-7 மணி நேர உறக்கம் கட்டாயம் தேவை:  நீங்கள் நிம்மதியான, ஆழ்ந்த உறக்கம் உங்களுக்கு இல்லையென்றால், உங்கள் உடல் மிகவும் சோர்வடையும். அதனால், கார்டிசோல் என்ற ஹார்மோன் அதிகம் சுரந்து, முகப்பரு உருவாவதற்கு காரணமாகி விடும்.
  • சுயமாக ஹைட்ரேட் செய்து கொள்ளவும்: முகப்பரு வராமல் தடுப்பதற்கு மிகச் சிறந்த வழி என்னவென்றால், உங்கள் உடலின் உள்ளும், புறமும் நன்றாக ஹைட்ரேட் செய்து கொள்ள வேண்டும். ஹைட்ரேட் செய்யாத சருமத்தினால் பலவித சருமப் பிரச்னைகள் உண்டாகும். மேலும், முகப்பரு உருவாதற்கு மிகப் பெரிய தூண்டுதலாக அமையும்.
  • முகத்திற்கு வேக்சிங் செய்து கொள்வதை தவிர்க்கவும்: உங்கள் முகம் மிருதுவான சருமத்தை உடையதாயிருந்தால், வேக்சிங் செய்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.  சருமத்தின் உள்நோக்கிய வளர்ச்சியின் காரணமாக முகப்பரு உருவாகலாம். அது மேலும் உங்களின் சரும வகையை மோசமடையச் செய்யும்.

 

 

பீபி : மிருதுவான, முகப்பருவால் பாதிக்கப்பட்ட சருமத்திற்கான வழக்கமான சரும பராமரிப்புகள் யாவை?

பீபி :  மிருதுவான, முகப்பருவால் பாதிக்கப்பட்ட சருமத்திற்கான வழக்கமான சரும பராமரிப்புகள் யாவை?


மருத்துவர் எம்.ஷா: மிருதுவான மற்றும் முகப்பருவால் பாதிப்பான சருமம் உங்களுக்கு இருந்தால், அதற்கு சரியான சருமப் பராமரிப்பு வழிமுறைகள் பின்வருமாறு...

  • க்ளீன்ஸர் :  மிருதுவான மற்றும் முகப்பருவால் பாதிப்பான சருமம் உங்களுக்கு இருந்தால், பேடிஸ்ஸிலிருந்து இலவசமாகக் கிடைக்கும் மென்மையான க்ளீன்ஸரை பயன்படுத்தலாம்.
  • பீபி ப்ரோ டிப் : மிருதுவான சருமத்திற்காகவும், எரிச்சலை உருவாக்கும் அசுத்தங்களை அகற்ற உதவுவதற்காகவும் தயாரிக்கப்பட்ட  Simple Kind To Skin Micellar Cleansing Water ரினால் கைகளை சுத்தும் செய்து கொள்ளவும்
  • எக்ஸ்ஃபாலியேட்:  சருமத்தின் மேற்பரப்பில் உள்ள இறந்த சரும செல்களை அகற்றுவதற்கும், இரத்த ஓட்டத்தை அதகரிக்கவும் உதவுகிறது.
  • பீபி ப்ரோ டிப் :  100% இயற்கை மாஸ்யரைஸர்கள் மற்றும் எக்ஸ்ஃபாலியண்ட்ஸ்களால் தயாரிக்கப்பட்ட St. Ives Fresh Skin Apricot Face Scrub   பாதிப்படைந்த சருமத்தை தேய்த்து அகற்றவும்.
  • மாஸ்யரைஸர் : மிருதுவான சருமம் உள்ளவர்கள், மிகவும் மென்மையான பிசுபிசுப்பற்ற மற்றும் வேகமாக உறிஞ்சக்கூடிய மாஸ்யரைஸரை பயன்படுத்தவதில் உறுதியாக இருங்கள்.   
  • பீபி ப்ரோ டிப் : மிருதுவான உங்கள் சருமத்திற்கு Simple Kind To Skin Hydrating Light Moisturiser மிகவும் அவசியமானதாகும்.
  • சன்ஸ்க்ரீன் : எப்படிப்பட்ட பருவகாலங்களுக்கும், வருடம் முழுதும் சன்ஸ்க்ரீன் மிகவும் அவசியமாகும்.  மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் புறஊதாக் கதிர்களிலிருந்து உங்கள் சருமத்தை காப்பது மட்டுமல்லாமல், வேறு பெரிய சருமப் பிரச்னைகளிலிருந்தும் உங்கள் சருமத்தைப் பாதுகாக்கின்றது.
  • பீபி ப்ரோ டிப் :  ஒட்டிக்கொள்ளாத மற்றும் எண்ணெய் பிசுபிசுப்பற்ற Lakmé  Sun Expert Ultra Matte SPF 50 PA+++ Gel Sunscreen பயன்படுத்தவும்.  மிகச் சிறந்த பலன் கிடைக்க ஒவ்வொரு 3-4  மணி நேரத்திற்கு ஒரு முறை மீண்டும் பயன்படுத்த வேண்டும்.
  • வெளியில் செல்வதற்கு முன் நன்றாக மறைத்துக் கொள்ளவும்:  இறுதியாக,  மிருதுவான சருமத்தையுடைய அனைவரும், வெளியில் செல்வதற்குமுன் உங்கள் சருமத்தை நன்றாக மூடி மறைத்துக் கொள்ள வேண்டும்.  இது எரிச்சலிலிருந்தும்,  சிவத்திலிலிருந்தும் உங்கள் சருமத்தைக் காப்பாற்றும்.