ஜிம்மில் வியர்வை சொட்டசொட்ட செய்யும் உடற்பயிற்சிகள் செய்வதனால், உங்கள் உடலை அதிசயிக்கச் செய்கிறது, மேலும், உங்களை சுறுசுறுப்பாகவும், உடல் கட்டுடனும் வைத்திருக்கச் செய்கிறது, ஏனெனில், அனைத்து விதமான வியர்வைகளையும் உங்கள் சருமம் ஏற்றுக் கொள்ளாது. துவாரங்களை அடைத்தல், திடீரென்று பிளவுகள் மற்றும் எரிச்சல் போன்றவற்றை உங்கள் சருமத்தில் ஏற்படுத்தும். உடை மாற்றும் அறையில் சில நிமிடங்கள் செலவிட்டால், நீங்கள் வீடு திரும்பும்போது ஒரு வித்தியாசத்தை கட்டாயம் காண முடியும்.
உங்கள் சருமம் ஆரோக்கியமாகவும் மற்றும் சருமம் விரிசல்கற்றதாகவும் இருக்க வேண்டுமானால், ஜிம்மிற்கு சென்று வந்தபின் உங்கள் சருமத்தை சுத்தம் செய்து கொள்வது பற்றிய குறிப்புகள் அடங்கிய வழிகாட்டி:-
- மென்மையான க்ளீன்ஸரையே பயன்படுத்துங்கள்.
- விரைவாக ஒரு குளியலை போடுங்கள்
- குளிர்ந்த நீரால் முகத்தில் தெளித்துக் கொள்ளுங்கள்
- வறண்ட சருமத்தை லேசாக ஒத்தி எடுங்கள்
மென்மையான க்ளீன்ஸரையே பயன்படுத்துங்கள்.

நன்றாக உடற்பயிற்சி செய்து முடித்தப்பின், உங்கள் முகத்திலுள்ள வியர்வையையும், அழுக்கையும் நன்றாக துடைக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். அதற்குப் பதிலாக, ஒரு மென்மையான க்ளீன்ஸரை பயன்படுத்துங்கள். அது உங்கள் சருமத்தின் மேற்பரப்பினமீதுள்ள எண்ணெய் பிசுப்பை அகற்றி, உங்களை புத்துணர்ச்சியுடன் இருக்க வைக்கும். நல்ல நறுமணத்துடன் கூடிய புத்துணர்ச்சித் தரக்கூடிய Lakme Blush And Glow Lemon Face Wash அசுத்தங்களை அகற்றி, உங்ள் சருமத்தை மிளிரச் செய்யும்.
விரைவாக ஒரு குளியலை போடுங்கள்

ஜிம்முக்கு வரக்கூடிய பெரும்பாலான மக்கள் முகத்தை மட்டும் அங்கே கழுவிக் கொண்டுவிட்டு, வீட்டிற்கு சென்றபின் உடலின் மற்ற பகுதிகளை கழுவிக் கொள்கிறார்கள். இதனால் அசுத்தங்கள் மற்றும் பாக்டீரியாக்களை இந்த துவாரங்களுக்குள் அடைபடுவதுடன், சரும பிரச்னைகளை உண்டுபண்ணும். இதற்கு Dove Go Fresh Nourishing Body Wash ஐ கையோடு கொண்டு செல்லுங்கள். இதில் வெள்ளரி மற்றும் க்ரீன் டீ சாறுகள் உள்ளடக்கியுள்ளதால், அழுக்கு நீக்குவதோடு, சருமத்திற்கு சுத்தமான பலனைத் தரும்.
குளிர்ந்த நீரால் முகத்தில் தெளித்துக் கொள்ளுங்கள்

சூடான தண்ணீரினால் குளிப்பது என்பது ஒரு நல்ல புத்துணர்வு கிடைத்தாலும், அதன் பிறகு குளிர்ந்த நீரால் தெளித்து கொள்வதை பின்பற்றுங்கள்.வெப்பநிலை வேறுபாடு காரணமாக உங்கள் சருமம் குளிர்வடையும் மேலும், அவை துவாரங்களை அடைப்பதோடு, வியர்வை முழுவதையும் வெளிப்படுத்திவிடும்.
வறண்ட சருமத்தை லேசாக ஒத்தி எடுங்கள்

உங்கள் சருமத்தை கடினமான டவலினால் துடைக்கும்போது, அது உங்கள் சரும்த்தில் எரிச்சலையும், வறட்சியையும் உண்டாக்கும். அதற்குப் பதிலாக, ஒரு டவலை எடுத்து உங்கள் சருமத்தை மென்மையாக ஒத்தி எடுங்கள். இது அனைத்து நீரையும் விரைவாக உறிஞ்சிவிடும். உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
Written by Kayal Thanigasalam on May 20, 2021
Author at BeBeautiful.