“நீங்கள் வாய் திறந்து பேசுவதற்கு முன்பே கண் புருவங்கள் பேசுகின்றன.” யாரோ சொன்னது. நாம் வாழும் இந்தக் காலத்தில் இதை நாம் நம்பாமல் இருக்க முடியாது. முகத்தின் பெரும் பகுதியை மேஸ்க் மூடிவிடும் போது புருவங்கள் ஸ்டைலாக இருந்தாக வேண்டும் அல்லவா. அதுதானே மற்றவர்களுக்குத் தெரியும். முகக் கவசம் அணிகிறீர்களோ இல்லையோ, ஏனோ தானோ என்று வளர்ந்திருக்கும் புருவம் ஜூம் மீட்டிங் முதல் ஆன்லைன் டேட்டிங் வரை எதற்கும் சரிப்பட்டு வராது.
ஆனால் அழகுக் கலை நிலையத்திற்கும் செல்ல முடியாது என்றால் என்ன செய்வது. இதோ தீர்வு. வீட்டிலேயே கண் புருவங்களை அழகாகத் திருத்துவதற்கான 3 ஈஸி வழிகளை இங்கே அறிமுகம் செய்கிறோம். செமையாக இருக்கிறது அல்லவா. இதோ அந்த டரிக்ஸ்…
- ஸ்டெப் 01: புருவங்களை மேப் செய்யவும்
- ஸ்டெப் 02: சரியான கருவிகளை பயன்படுத்துங்கள்
- ஸ்டெப் 03: புருவங்களை ட்வீஸ், ட்ரிம் செய்தல்
ஸ்டெப் 01: புருவங்களை மேப் செய்யவும்

முதலில் புருவங்களை நன்றாக வளர விட வேண்டும். மிக அதிகமாக ட்வீஸ் அல்லது வேக்ஸ் செய்தால் புருவங்கள் மெல்லிதாக மாறும். அது கவனத்தை ஈர்க்கும் வகையில் இருக்காது. முதலில் புருவங்களின் ஷேப் என்ன என்று பார்க்க வேண்டும். அதன் அடிப்படையில் புருவங்களை மேப் செய்ய வேண்டும். புருவங்களின் மிக முக்கியமான இடங்களை அடையாளம் காண்பதையே மேப்பிங் என்று சொல்கிறோம். புருவங்களின் தலைப் பகுதி, வளைவுப் பகுதி, நுனிப் பகுதி என அதில் மூன்று உண்டு. பின்வரும் ஸ்டெப்களை பயன்படுத்தி சரியாக மேப் செய்யவும்:
- பென்சில் ஒன்றை எடுத்து மேலிருந்து கீழாக நேராகப் பிடிக்கவும். அதை மூக்கின் எதிர்ப் பக்கத்தில் வைத்து, அதன் நுனி புருவங்கள் துவங்கும் இடத்தில் இருக்குமாறு பிடிக்க வேண்டும்.
- பிறகு பென்சிலை புருவத்தின் திசையில் சுழற்றவும். கண்ணின் விளிம்பை எட்டும் போது பென்சில் சுழற்சியை நிறுத்தவும். இங்குதான் உங்களின் வளைவு துவங்க வேண்டும்.
- இந்த இடத்தைக் குறித்துக் கொள்ள வேண்டும்.
- பிறகு, கண்ணின் வெளிப்புற விளிம்பு எட்டும் வரை தொடர வேண்டும். அங்கேயும் நிறுத்தி, குறித்துக்கொள்ளவும். இதுதான் புருவம் முடியும் இடம்.
- இதையே மற்றொரு புருவத்திலும் செய்ய வேண்டும்.
புருவங்களின் இயற்கையான ஷேப் என்ன என்பதை அறிய இது உதவும். புருவங்களை திருத்த இது உதவியாக இருக்கும்.
ஸ்டெப் 02: சரியான கருவிகளை பயன்படுத்துங்கள்

எந்த மாதிரியான போர் என்றாலும் வெல்வதற்கு சரியான ஆயுதங்கள் வேண்டும் அல்லவா. ஒரு நல்ல புருவத்திற்கான பென்சில், வளைவான ஸ்டென்லெஸ் ஸ்டீல் ட்வீஸர், ப்ரஷ், இரண்டு சிறிய, கூர்மையான கத்தரிக்கோல்… எல்லாம் கையில் இருக்க வேண்டும். அதிக புருவங்களை நீக்கிவிடக்கூடும் நீங்கள் நீக்கிவிடக்கூடும் என்பதால் பூதக் கண்ணாடி பயன்படுத்த வேண்டாம்.
ஸ்டெப் 03: புருவங்களை ட்வீஸ், ட்ரிம் செய்தல்

கையில் பிடிக்கக்கூடிய கண்ணாடிக்கு பதில் சுவறில் மாட்டும் கண்ணாடி பயன்படுத்தவும். இதனால் இரண்டு கைகளையும் பயன்படுத்த முடியும். ஸ்பூலி பயன்படுத்தி புருவ முடியை மேல் புறமாக ப்ரஷ் செய்யவும். அதன் பிறகு ஒரு கையால் சதையைப் பிடித்துக் கொண்டு, மறு கையால் கூடுதல் முடியை மெல்ல மெல்ல பிடுங்கி எடுக்கவும் (அது வளர்ந்திருக்கும் திசையில்). நீளமாக வளர்ந்திருக்கும் முடியை கத்தரிக் கோல் வைத்து கட் செய்யலாம். ட்வீஸ் செய்த பிறகு சிவப்பு சிவப்பாக இருக்கும், அரிப்பு ஏற்படும். அதனால் கையில் ஐஸ் க்யூப் வைத்திருக்கவும். மாய்ஸ்சுரைஸரும் பயன்படுத்தலாம். இது நீர்ச் சத்து தருவதோடு எரிச்சலில் இருந்தும் நிவாரணம் தரும்.
Written by Kayal Thanigasalam on Aug 26, 2021
Author at BeBeautiful.