ஒவ்வொரு மாதமும் வலி மிகுந்த சில தினங்களை எதிர்கொள்ள இயற்கை நிர்பந்திக்காவிட்டால், நம்முடைய அழகு கலை செயல்முறைகளும் இந்த அளவு வலி மிகுந்தவையாக இருந்திருக்காது. உங்கள் கண் புருவங்களில் இருந்து முடிகளை பிடுங்குவதாகட்டும், கரும் புள்ளிகளை அகற்றுவதாகட்டும் இவற்றுக்கு எல்லையே இல்லை. எனினும், சில பெண்கள் வேக்சிங் செய்வதை வலி மிகுந்தததாக கருதி அதை முழுவதும் தவிர்த்து, ஷேவிங் வழியை நாடுகின்றனர். எனவே வலிக்கு விடை கொடுத்துவிட்டு சிக்கல் இல்லாமல் வேக்சிங் செய்து கொண்டு மென்மையான சருமத்தை பெறுவதற்கான 5 எளிய வழிகளை முன்வைக்கிறோம்:
- உங்கள் சருமத்தை எக்ஸ்போலியேட் செய்யவும்
- ஷேவ் செய்ய வேண்டாம்
- தொழில்முறை உதவியை நாடவும்
- தலைக்கு குளிக்கவும்
- உங்கள் மாத சுழற்சியை கவனிக்கவும்
உங்கள் சருமத்தை எக்ஸ்போலியேட் செய்யவும்

உங்கள் வேக்சிங் செயல்முறையில் இருந்து அதிக பலன் பெற மற்றும் வலியை குறைக்க, சருமத்தை முதலில் எக்ஸ்போலியேட் செய்யவும். செயிண்ட்.ஈவ்ஸ் ரேடியண்ட் ஸ்கின் பிங்க் லெமன் & ஆரஞ்ச் எக்ஸ்போலியேட் பாடி வாஷ் இறந்த செல்களை அகற்றி, மயிர்கால்களஈ சுத்தமாக்கி, வேக்சிங் வலியை குறைக்கிறது.
ஷேவ் செய்ய வேண்டாம்

உங்கள் வேக்சிங் செயல்முறைகளுக்கு இடையே ஷேவ் செய்து சிறிய முடிகளை அகற்ற நீங்கள் தூண்டப்படலாம். ஆனால், இது முடிகளின் இயற்கையான வளர்ச்சியில் குறுக்கிட்டு, வேக்சிங் செயல்முறையை மேலும் வலி மிகுந்ததாக மாற்றும் என்பதை இதை தவிர்க்குமாறு பரிந்துரைக்கிறோம். வேக்சிங் செயல்முறைக்கு செல்லும் முன், ¼ அங்குலமாவது முடி வளர அனுமதிக்கவும்.
தொழில்முறை உதவியை நாடவும்

வேக்சிங் எளிதான செயல்முறை போல தோன்றலாம். கொஞ்சம் வேக்சை தடவி அதன் மீது, ஒரு ஸ்டிரிப்பை வைத்து, பின்னர் அதை இழுத்து முடியை அகற்றுவது எளிதாக தோன்றலாம். ஆனால் இங்கு நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயம் இருக்கிறது. எல்லோரது முடியும் ஒரே திசையில் வளர்வதில்லை. மேலும் சிறந்த பலனைப்பெற வெப்ப நிலை ஏற்றதாக இருக்க வேண்டும். எனவே, லாக்மே சலூனில் உள்ள தொழில்முறையாளர்கள் உதவியை நாடவும். இதன் மூலம், சிவப்பாதல் உள்ளிட்ட வேக்சிங் பாதிப்புகளை தவிர்க்கலாம்.
தலைக்கு குளிக்கவும்

வேக்சிங் செயல்முறைக்கு முன்னர் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது உங்கள் சரும துளைகளை திறக்க வைத்து, வேக்சிங் வலியை குறைக்கும். நீங்கள் எப்போதும் குளிர்ந்த நீரில் குளிப்பதை விரும்புகிறவராக இருந்தாலும் அதை தவிர்க்கவும். ஏனெனில் அது துளைகளை சுருக்க வைத்து, மேலும் வலி உண்டாக்குகிறது.
உங்கள் மாத சுழற்சியை கவனிக்கவும்

வேக்சிங் செய்து கொள்ள செல்லும் முன் உங்கள் மாத விலக்கு சுழற்சியை கவனத்தில் கொள்ளவும். மாதவிலக்கு காலத்தில் இதை தவிர்க்கவும். ஏனெனில் அப்போது வலியை பொறுத்துக்கொள்ளும் தன்மை மிகவும் குறைவாக இருக்கிறது. மாத விலக்கிற்கு சில தினங்களுக்கு பின் செல்வது மாற்றத்தை ஏற்படுத்தும்.
Written by Team BB on May 21, 2019