அழகுப் பொருட்களின் உட்பொருட்கள் விஷயத்தில் கவனம் தேவை என்பது நாங்கள் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதற்காக தகவல்களை சரி பார்க்கலாம். பலரிடம் கேட்டுப் பார்க்கலாம். நீங்களே நல்ல முடிவைத் தீர்மானிக்கலாம். முன்பைவிட கன்ஸ்யூமர் இப்போதெல்லாம் விவரமாகத்தான் இருக்கிறார்கள். பாராபென், சிலிகான் போன்ற பொருட்கள் என்றாலே உஷாராகிவிடுவோம். அதனால்தான் சுத்தமான அழகுப் பொருட்களுக்கு மாறுகிறோம். மனித உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்காத பொருட்களை பயன்படுத்துபவைதான் க்ளீன் அழகுப் பொருட்கள் என அழைக்கப்படுகின்றன. இவை சருமத்திற்கு மட்டும் அல்ல சுற்றுச் சூழலுக்கும் நல்லது. நீங்கள் நினைப்பதைவிட சுலபமாக இதை அடையலாம். பின்விளைவுகள் இல்லாத அத்தகைய க்ளீன் அழகுப் பொருட்களை தேர்வு செய்வது பற்றிய வழிகாட்டி இது.

 

ஸ்டெப் #1: மிதமான ஃபேஸ் வாஷ் மூலம் முகத்தை க்ளென்ஸ் செய்ய வேண்டும்

ஸ்டெப் #1: மிதமான ஃபேஸ் வாஷ் மூலம் முகத்தை க்ளென்ஸ் செய்ய வேண்டும்

அழகுக் கலையில் ஃபேஸ் வாஷ் முதலிடம் பிடிக்கும். Simple Kind To Skin Refreshing Facial Wash அதற்கு ஒரு நல்ல சாய்ஸ். இந்த ஹைப்போ அலர்ஜனிக் ஃபேஸ் வாஷ் எல்லா சரும வகைகளுக்கும் பலன் கொடுக்கும். சென்சிடிவ் சருமத்திற்கும்கூட. ப்ரோ விட்டமின் பி 5, விட்டமின் இ போன்ற நீர்ச் சத்து கொடுக்கும் உட்பொருட்கள் இதில் உள்ளது. டெர்மடாலஜி டெஸ்ட் செய்யப்பட்ட இந்த ஃபேஸ் வாஸ் சிறந்த க்ளீன் ப்யூட்டி ஆப்ஷன்.

 

ஸ்டெப் #2: ஆல்கஹால் இல்லாத டோனர் பயன்படுத்த வேண்டும்

ஸ்டெப் #2: ஆல்கஹால் இல்லாத டோனர் பயன்படுத்த வேண்டும்

டோனர் பயன்படுத்த விருப்பமில்லை என்று கூறுபவரா நீங்கள். உங்கள் மனமதை மாற்றுவதற்கான தகவல் இது. ஆல்கஹால் கொண்ட டோனர் பற்றி நாங்கள் பேசவில்லை. Simple Kind To Skin Soothing Facial Toner பற்றி பேசுகிறோம். ஆல்கஹால் இல்லாத, மென்மையாக வேலை செய்யக்கூடியது இந்த டோனர். ப்ரோ விட்டமின் பி 5 (நீர்ச் சத்து தருவது), சாமோமைல் (மென்மையான சருமம்) கொண்டது இந்த அழகுக் கலை பொருள். இது ஒரு ஹைப்போஅலர்ஜனிக். இதில் விலங்குகளிலிருந்துஎடுத்த எந்த பொருளும் சேர்க்கப்படவில்லை. வேறு என்ன வேண்டும்…

 

ஸ்டெப் #3: சருமத்திற்கு தீங்கு விளைவிக்காத உட்பொருட்கள் மூலம் மாய்ஸ்சுரைஸ் செய்ய வேண்டும்

ஸ்டெப் #3: சருமத்திற்கு தீங்கு விளைவிக்காத உட்பொருட்கள் மூலம் மாய்ஸ்சுரைஸ் செய்ய வேண்டும்

டோனிங் முடிந்தவுடன் கவனிக்க வேண்டியது மாய்ஸ்சுரைஸர். ஸ்கின் டைப் என்ன என்ற வேறுபாடின்றி மாய்ஸ்சுரைஸர் அவசியம். Simple Kind To Skin Replenishing Rich Moisturiser தீங்கு விளைவிக்கும் பொருட்கள் இல்லாதது. ஊட்டச் சத்து கொடுக்கும் க்ளிசரின், களங்கம் போக்க உதவும் பிசாபோலோல், நீர்ச் சத்து கொடுக்கும் விட்டமின் பி 5 கொண்டது இந்த அழகுப் பொருள். எந்த விதமான தீங்கும் விளைவிக்காத ஸ்கின்கேர் முறைகள் வேண்டும் என நினைப்பவர்கள் பயன்படுத்த வேண்டிய நீர்ச் சத்து கொடுக்கும் மாய்ஸ்சுரைஸர் இது.

 

ஸ்டெப் #4: எல்லா பலன்களும் தரும் சன்ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும்

ஸ்டெப் #4: எல்லா பலன்களும் தரும் சன்ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும்

சன் ஸ்கிரீன் பற்றி சொல்லாமல் இருக்க முடியுமா… சரும பராமரிப்பு என வரும் போது இதைத் தவிர்க்கவே முடியாது. மாய்ஸ்சுரைஸர் பயன்படுத்திய பிறகு Dermalogica Solar Defense Booster SPF 50 பயன்படுத்திப் பாருங்கள். பாராபென் இல்லாத வேகன் அழகுக் கலை பொருள் எல்லோருக்கும் பொருந்தக்கூடிய சன் ஸ்கிரீன் ஆகும். விட்டமின் இ, சியின் நற்குணங்கள் கொண்டது. க்ரீன் டீ, திராட்சை விதை ஆகியவற்றின் ஏன்டி ஆக்ஸிடென்ட் பண்புகள் கொண்டது. கூடுதல் நீர்ச் சத்து கொடுக்கக்கூடியது இந்த அழகுப் பொருள். இதோ லிஸ்ட் தயாராகிவிட்டது. தீங்கு விளைவிக்காத க்ளீன் அழகுக் கலைக்கு மாற வேண்டிய நேரம் வந்துவிட்டது.