ஒருவரின் சரும வகையை அடையாளம் காண்பது எளிதல்ல. நம்மில் பலர் குழப்பமான சருமத்தை கொண்டிருக்கிறோம். அதாவது சருமம் சில இடங்களில் எண்ணெய் பசை மிக்கதாக இருக்கிறது. ஆனால் சில  பகுதிகளில் உலர் தன்மை மிக்கதாக இருக்கிறது. இந்தக் குழப்பமான சருமம், இணை சருமம் எனலாம். இது குழப்பமாக அமைந்திருந்தாலும் அதை எதிர்கொள்வதற்கான வழிகள் இதோ:

இணை சருமத்தை சிறப்பாக பராமரிப்பதற்கான வழிகள்:

·             பாலன்சிங் பேஸ்வாஷ்

·             டோனரை மறக்க வேண்டாம்

·             இணை சருமத்திற்கு வேறு வேறு மாஸ்க்

 

பாலன்சிங் பேஸ்வாஷ்

பாலன்சிங் பேஸ்வாஷ்

இணை சருமத்திற்கு மாய்ஸ்சர் பாலன்சிங் பேஸ்வாஷ் பயன்படுத்தவும். இது உங்கள் சருமத்தை சமநிலை பெற வைத்து, தேவையில்லாத பிசுபிசுப்பு மற்றும் உலர்தலை தடுக்கிறது. பேஸ்வாஷ் பற்றி தெளிவு இல்லை எனில், துளைகளை சுத்தமாக்குவதில் கவனம் செலுத்தவும். இது தூய்மை ஆக்கி, மேலும் சிறப்பாக எண்ணெய் பசையை அகற்றுகிறது. லாக்மே பிளஷ் & குரோ ஸ்டிராபெரி ஜெல் பேஸ்வாஷை பயன்படுத்தி பார்க்கவும்.

 

டோனரை மற்ற வேண்டாம்

டோனரை மற்ற வேண்டாம்

தினமும் முகத்தை டோன் செய்யவும். தினமும் படுக்கைக்கு செல்லும் முன், முகத்தை டோன் செய்யவும். இது சருமத்தின் எண்ணெய் பசை பகுதிகளை சமமாக்குவதோடு, உலர் தன்மையை சீராக்குகிறது.

 

இணை சருமத்திற்கு வேறு வேறு மாஸ்க் தேவை

இணை சருமத்திற்கு வேறு வேறு மாஸ்க் தேவை

உங்கள் முகத்தின் வேறு வேறு பகுதிகளுக்கு மாறுபட்ட மாஸ்கை பயன்படுத்தவும். டி- ஜோன் பகுதி எண்ணெய் பசை மிக்கதாக இருந்தால், மேக்னிபையிங் மாஸ்க் பயன்படுத்தவும். கன்னத்தில் மங்கலாக இருந்தால், குளோ மாஸ்கை பயன்படுத்தவும். ஒவ்வொரு பகுதிக்கும் வேறு மாஸ்கை பயன்படுத்தவும். 

மேக்கப்பிலும் மாற்றம் தேவை

வேறு வேறு பகுதிகளுக்கு வேறு வகையான அடிப்படை பொருட்களை பயன்படுத்த வேண்டும். குறிப்பிட்ட பகுதிகள் எண்ணெய் பசையோடு இருந்தால், அவற்றில் பவர் பவுண்டேஷனை பயன்படுத்தலாம். உலர் பகுதிகளில் உங்கள் பவுண்டேஷனோடு மாய்ஸரைசரை பயன்படுத்தவும். இதன் மூலம் உலர் தோற்றத்தை தவிர்க்கலாம்.