நாம் எல்லோரும் இப்போது அதிக பயணம் மேற்கொள்கிறோம். தினமும் பயணம் செய்வது களைப்பை உண்டாக்குவதோடு, நம் சருமத்தையும் பாதிக்கிறது. எனவே அன்றைய தின முடிவில், உங்கள் சருமத்திற்கு வெறும் பேஸ் வாஷ் மட்டும் போதுமானது அல்ல.

தினசரி பயணத்திற்கு பிறகு களைப்படையும் உங்கள் சருமத்தை புத்துணர்ச்சி பெற வைப்பதற்கான 5 வழிகள் இதோ:

·     டீடாக்ஸ் மாஸ்க்

·     பேசியல் பிரஷ்

·     பேசியல் மி்ஸ்ட்

 

சன்ஸ்கிரீன்

சன்ஸ்கிரீன்

நீங்கள் பயணம் செய்யும் போது, நீங்கள் சூரிய கதிர்கள் மற்றும் யூவி, கதிர்களை எதிர்கொள்கிறீர்கள். எனவே வீட்டை விட்டு வெளியே செல்லும் போது, உங்களுக்கு போதுமான எஸ்.பி.எப் பாதுகாப்பு இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். சன்ஸ்கிரீன் சருமத்தை கருத்துப்போவதில் இருந்து காப்பதோடு, யு.வி.ஏ கதிர்களால் உண்டாகும் சுருக்கங்கள் பாதிப்பையும் குறைக்கிறது.

முகத்தைச்சுற்றி பாதுகாப்பு

இரு சக்கர வாகனத்தில் சென்றாலும் சரி பொது போக்குவரத்தில் சென்றாலும் சரி, முகத்தை சுற்றி ஒரு துணியால் மூடிக்கொள்ளுங்கள். இந்த துணி அழுக்கு மற்றும் புழுதி உங்கள் முகத்தை நேரடியாக தாக்கமல் தடுகும். சருமம் மற்றும் புழுதுக்கி இடையிலான பாதுகாப்பாக அமையும்.

 

டீடாக்ஸ் மாஸ்க்

டீடாக்ஸ் மாஸ்க்

வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை டீடாக்ஸ் மாஸ்க் பயன்படுத்தவும். சார்கோல் மாஸ்க் அல்லது பெண்டோனைட் கிளே மாஸ்க் போன்றவற்றை பயன்படுத்தவும். இது போன்ற பொருட்கள் உங்கள் சருமத்தின் துளைகளில் அடைந்திருக்கும் அழுக்கை வெளியேற்றுகின்றன. இந்த மாஸ்கை அகற்றிய பிறகு, நன்றாக முகத்தை அலசுவதன் மூலம் ஈரப்பத தன்மையை உறுதி செய்து கொள்ளுங்கள்.

 

பேசியல் பிரெஷ்

பேசியல் பிரெஷ்

நீங்கள் முகத்தை கழுவும் போது, சரும துளைகளில் உள்ள அழுக்கை வெளியேற்றினால் மட்டும் போதாது. சுழலும் தன்மை கொண்ட பிரெஷை வாங்கி தினமும் படுக்கைக்குச்செல்லும் முன் அதைக்கொண்டு முகம் கழுவவும். இது துளைகளில் சிக்கியுள்ள அழுக்கு மற்றும் கருந்துகள்களை அகற்றும்.

 

பேசியல் மிஸ்ட்

பேசியல் மிஸ்ட்

பேசியல் மிஸ்ட் மற்றும் ஈர துடைப்பான்கள் உங்கள் முகத்தை புத்துணர்ச்சி பெற வைப்பதற்கான எளிய வழிகள். இவற்றை உங்களுடன் வைத்திருந்து, உங்கள் சருமம் மங்கலாகும் போதெல்லாம் முகத்தின் மீது தெளித்து, துடைத்துக்கொள்ளுங்கள். பேசியல் மிஸ்ட் வேண்டாம் எனில், ரோஸ் வாட்டர் மற்றும் ஆலோவேரா கொண்டு நீங்களே தயாரித்துக்கொள்ளுங்கள்.  ஆலோவேரா கிருமிகளை அழிக்கிறது. ரோஸ் வாட்டர் உங்கள் சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.