கண் இமை சொர சொரப்பாக, சரும அலர்ஜி வந்தது போல் இருக்கிறதா… இதை கண் இமைகளின் அழற்சி என்று கூறுகிறார்கள். இது நிறைய பேருக்கு இருக்கும் பிரச்சனை. குறிப்பாக குளிர்ப் பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கு அதிகம் ஏற்படும். இது கண் இமைகளில் அரிப்பு ஏற்படுத்துவதோடு, உங்கள் மேக்கப் உரிந்து வர வைக்கும். சருமத்தில் வெடிப்புகள் ஏற்படும். தோற்றம் டல்லாக மாறும்.

கவலைப்படாதீர்கள். இதை வீட்டிலேயே, நீங்களே எளிதாக சரி செய்யலாம். அதற்கு சரியான சரும அழகு பொருட்கள் தேவை. அதோடு உங்கள் வாழ்க்கை முறையில் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்தால் போதுமானது. என்ன செய்தால் பளிங்கு போல் மின்னும் கண் இமை கிடைக்கும். இதோ வழிகள்…

 

01. அடிக்கடி மாய்சுரைஸ் செய்தல்

01. அடிக்கடி மாய்சுரைஸ் செய்தல்

முகத்தின் பிற பகுதிகள் போலவே கண் இமைகளிலும் மாய்ஸ்சுரைசிங் ஐ க்ரீம் பயன்படுத்த வேண்டும். வறண்ட கண் இமைகளைத் தவிர்ப்பதற்கு இது ஒரு சுலபமான வழி. ஹைலுரானிக் ஆசிட், பெட்டைட்ஸ், செராமைட்ஸ் போன்ற உட்பொருட்கள் கொண்ட மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தவும். இது கண் இமைக்கு ஊட்டச் சத்து கொடுப்பதோடு, வறண்டு போகாமலும் தடுக்கும், மிக விரைவாகவே.

 

02. சிம்பிளான மேக்கப்

02. சிம்பிளான மேக்கப்

கண் இமை சொரசொரப்பாக, உரிந்து வருவது போல் இருப்பதைத் தவிர்க்க ஈஸி வழி என்ன தெரியுமா. முடிந்த வரை குறைவான மேக்கப் பயன்படுத்துவதுதான் அந்த ரகசியம். அந்த அலர்ஜி குறையும் வரையாவது குறைவான மேக்கப் பயன்படுத்துங்கள். மேக்கப் பொருட்கள் கெட்டுப் போகாமலிருப்பதற்காக அதில் சில உட்பொருட்கள் சேர்க்கப்பட்டிருக்கும். மென்மையான சருமத்தில் அது படிந்து, மேலும் அலர்ஜி ஏற்படுத்தலாம் என்பதுதான் பிரச்சனை.

 

03. போதுமான தூக்கம்

03. போதுமான தூக்கம்

இரவில் நன்றாக தூங்குவது சொரசொரப்பான கண் இமைகளை தவிர்க்க ரொம்பவே உதவும். எப்படி என்று கேட்கிறீர்களா? இரவில் தூங்கும் போதுதான் உங்கள் உடல் தன்னைத் தானே ரிப்பேர் செய்துகொள்கிறது, குணமாக்குகிறது. கண்களைச் சுற்றி இருக்கும் சருமமும் அப்போதுதான் குணமடைகிறது. அதனால் இரவில் எட்டு மணி நேரம் தூங்குவது மிக அவசியம். ஒவ்வொரு நாளும் இதைச் செய்து வந்தால் கண் இமைகள் வறண்டு போவதைத் தடுக்கலாம்.