எந்தவிதமான தொந்தரவுமில்லாமல் வீட்டிலிருந்தபடியே உங்களுடைய சருமத்தை எளிமையான பராமரிக்க உதவும் இந்த அழகு சாதனத்துக்கு மிக்க நன்றி. காலையில் நேரத்தில் அவசரகதியில் இந்த சாதனத்தை பயன்படுத்தினாலும். மாலை பணிக்குச் சென்று சோர்வுடன் வீடு திரும்பியவுடன் இதைப் பயன்படுத்தினாலும், இந்த ஃபேசியல் சாதனத்தைப் பயன்படுத்த துவங்கிவிட்டால், அந்தப் பணி முடிவதற்குள் பாதியிலேயே நிறுத்தக் கூடாது. அதிக

பலன்களை அடைய விரும்பினால், இந்த ஃபேசியல் சாதனத்தை சரியாகப் பயன்படுத்த தெரிந்து கொள்வது மிக அவசியம். குவா ஷா சாதனத்தை எப்படி சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் நாம் தெரிந்து கொள்வோம். இதைப் பயன்படுத்தும் முறையை பின்வரும் படிப்படியான செய்முறையில் காண்போம்

 

வழிமுறை 01 : உங்கள் சருமத்தை சுத்தம் செய்யவும்

வழிமுறை 01 : உங்கள் சருமத்தை சுத்தம் செய்யவும்

முதல் படியாக உங்களின் ஏதாவது சருமப் பராமரிப்பினால் சருமத்தை சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் செய்யும் போது, அழுக்குகள், எண்ணெய் பிசுக்குகள் போன்றவை அகலும் மற்றும் சருமத்தில் பிளவுகளை ஏற்படுத்தும் சருமத் துவாரங்களில் மறைந்திருக்கும் அசுத்தங்களும் நீங்குவதற்கும் இது உதவி புரியும். சருமத்தை சுத்தம் செய்த பின், உங்களுடைய சருமத்தின் அளவை சமன்படுத்த டோனரை பயன்படுத்தவும். அதன்பிறகு சீரம் மற்றும் மாஸ்யரைஸரை பூசிப் பரப்பி விட வேண்டும்.

 

: ஃபேசியல் எண்ணெயை தடவிக் கொள்ளவும்

: ஃபேசியல் எண்ணெயை தடவிக் கொள்ளவும்

மாஸ்ட்ரைஸர் நன்றாக உறிஞ்சப்பட்டவுடன், இரண்டு அல்லது மூன்று சொட்டு Dermalogica Phyto Replenishing Oil ஐ எடுத்து உள்ளங்கைகளுக்கிடையில் நன்றாகத் தேய்க்க வேண்டும். கொஞ்சம் சூடு வந்து, நன்றாக ஊடுருவும் வரை காத்திருக்கவும். அடுத்தப் படிக்கு செல்வதற்கு முன், உங்கள் சருமம் மற்றும் கழுத்துப் பகுதியில் தேய்க்காமல் மெதுவாக தடவவும்.

 

வழிமுறை 03 : குவா ஷா சாதனத்தைப் பயன்படுத்துவதற்கான தருணம்

வழிமுறை 03 : குவா ஷா சாதனத்தைப் பயன்படுத்துவதற்கான தருணம்

குவா ஷா கல்லை கையில் எடுத்துக் கொள்ளுங்கள், அதை 45 டிகிரி கோணத்தில் உங்களுடைய தாடையில் வைத்துக்கொண்டு அங்கிருந்து காது வரை மெதுவாக இழுத்துக் கொண்டுச் செல்லவும். ஏழிலிருந்து எட்டுமுறை வரை இதேபோல் செய்யவும். பிறகு குவா ஷா சாதனத்தை மீண்டும் தாடைப்பகுதிக்கே கொண்டு வரவும். இப்போது தாடையிலிருந்து கழுத்து வரை இழுத்துக் கொண்டேச் செல்லவும். தாடை வரிசைக்குப் பிறகு கன்னத்தின் எலும்புகளிலிருந்து காது வரையிலும் பிறகு கண்ணிமைகளின் மேற்புறத்திலிருந்து தலைமுடி வரையிலும் முன்பு செய்தது போலவே செய்யவும் இந்த மொத்த செயல்பாடுகளையும் வாரத்திற்கு ஒருமுறை செய்து பார்த்துவிட்டு, பிறகு உங்களுடைய சருமத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைக் கவனியுங்கள்.