முகப்பரு பெரிதாகி சிவந்து போதல் மற்றும் வீக்கமடைதல் போன்றவைகளினால் பாதிக்கப்படுபவர்களுக்கு இது ஒரு மிகப்பெரிய பிரச்னையாகும். கடுமையான சரும பராமரிப்பு தயாரிப்புகளினால், மிருதுவான சருமத்தையுடைய பெண்கள்தான் பாதிப்படைகின்றனர். சருமத்தின் மிக அருகிலுள்ள சிறுசிறு இரத்த நாளங்களும் அலர்ஜியினால் பாதிப்படையும். அடிக்கடி சருமப் பொருட்களை மாற்றுவதாலும், புதிய பொருட்களை முயற்சிப்பதாலும் உங்களுடைய சருமம் மிக மோசமாக பாதிப்படைய வாய்ப்புள்ளது. வழக்கமாக செய்யக் கூடிய சரும பராமரிப்புடன் ஒரு சில பொருட்களை சேர்த்து பயன்படுத்தினால் சிவத்தல் மற்றும் எரிச்சலை தடுக்க முடியும். அடுத்தமுறை நீங்கள் சரும பராமரிப்புக்காக ப்யூட்டிப் பார்லருக்கு செல்லும்போது, பின்வரும் பொருட்களை பயன்படுத்த முயற்சியுங்கள்.
அதிமதுரச் சாறு

உங்களுடைய மிட்டாய்களிலுள்ள பொருட்களைத் தவிர, சரும எரிச்சலைத் தணிக்கக் கூடிய க்ளைஸர்ரைஸின் என்ற கிருமிநாசினி அதிமதுரத சாற்றில் உள்ளது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், அதிமதுரத்திற்கு இனிப்புத் தன்மையை இந்த அமிலம்தான் தருகிறது. ரோசாசியா, எக்சிமா, சோரியாஸிஸ், டெர்மடிடிஸ் போன்ற சருமப் பிரச்னைகள் மற்றும் சிவப்படைதல், அரிப்புகள், தடிப்புகள் மற்றும் வீக்கம் போன்ற வேறு சிலப் பிரச்னைகளுக்கான சிகிச்சைக்கு இதை பயன்படுத்தலாம். ஹைப்பர்பிக்மென்டேஷன் மற்றும் நிறமாற்றம் போன்ற சருமப் பிரச்னைகளை தீர்த்து, சருமத்தின் மீது ஒரு சிறந்த பலனை அதிமதுரம் ஏற்படுத்துகின்றது.
க்ரீன் டீ

உடலிலிருந்து தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுவதோடு, இதிலுள்ள ஆன்டிஆக்ஸிடெண்ட் பண்புகள் சிவந்த இடங்களை ஆற்றி , அதன் அடையாளங்களை மறைக்கும் தன்மையுடையது. இந்த இயற்கையான தாவரத்தை அடிப்படையாகக் கொண்ட ஆன்டிஆக்ஸிடெண்ட், எந்த பக்கவிளைவையும் ஏற்படுத்தாத, அனைத்து சரும வகைகளுக்கும் பொருந்தமானதாகும். நீங்கள் பயன்படுத்திய க்ரீன் டீ பைகளை ஐஸ் கட்டிகளை நிரப்பி, பாதிக்கப்பட்ட இடங்களில் ஒத்தடம் கொடுப்பதன்மூலம் சிவத்தல் குறைந்து எரிச்சலும் அடங்கும்.
வெள்ளரி

குளிர்ச்சி மற்றும் புண்களை ஆற்றும் பண்புகளையுடைய வெள்ளரி, ஒரு சிறந்த வலி நிவாரணியாகும். அதாவது, இதிலுள்ள பல ஆன்டிஆக்ஸிடெண்ட் பண்புகள் வலிகளை போக்கக் கூடியது. இதில் வைட்டமின் ஏ, பொட்டாசியம், சல்பேட்ஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. அதனால், வெங்குரு மற்றும் வேறுவித சரும எரிச்சல்களையும், சருமம் வறட்சியடையாமல் அவற்றிற்கு மிகச் சிறந்த சிகிச்சையளிக்கக் கூடியது. உங்களி தோலின் மேற்புற செதில்களை வெள்ளரிச் சாறு கொண்டு சுத்தம் செய்வதால், சருமம் சிவந்து போவதை வெகுவாக குறைக்கின்றது.
கற்றாழை

நன்றாக பருத்த முகப்பரு, செங்குரு, ரோசாசியா போன்ற எதுவானாலும், விரைவாக குணமடையச் செய்யும் தூண்டுகோலாக கற்றாழையை தூதுவனாக இயற்கை நமக்கு அளித்துள்ளது. கற்றாழையிலுள்ள சிறந்த உட்பொருட்கள் வலியை குறைப்பதோடு, விரைவாக குணமடைவதற்கும் தூண்டிவிடுகின்றன. the Lakmé 9 to 5 Naturale Aloe Aqua Gel போன்ற கற்றாழை ஜெல் அல்லது ஒரு தயாரிப்பு உடனடியாக கிடைக்கின்றது. அவை உங்கள் சருமத்தை ஹைட்ரேட் செய்து குணமடைச் செய்கின்றது.
நியாசினாமைட்

சரும பராமரிப்பு தயாரிப்புகளில் மிக அற்புதமான ஒரு பொருளான இது மிக எளிதாக கிடைக்கக் கூடியதானாலும், உங்களுக்காகவே நாங்கள் இதை வழங்குகின்றோம். சீரற்ற சரும நிறம், மெல்லிய வரிகள், பெரிய துளைகள் முதலிய பிரச்னைகளுக்கு இந்த Lakmé 9 to 5 Naturale Aloe Aqua Gel குணப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் உங்களுடைய சருமத்தை பலப்படுத்தக் கூடிய இயற்கை அரணாகவும் செயல்படுகின்றது. வெளிப்புறத்திலிருந்து பாதிப்பை ஏற்படுத்தும் செய்யும் பாக்டீரியாக்களினால் ஏற்படும் எரிச்சலிருந்து சருமத்தை பாதுகாக்கின்றது. மேலும் சரும வீக்கத்தை குறைத்து, அவற்றை குணப்படுத்துகின்றது
Written by Kayal Thanigasalam on Mar 05, 2021
Author at BeBeautiful.