நல்ல சருமப் பராமரிப்பை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதை இப்போது நடந்து கொண்டிருக்கும் ஊரடங்கு மாற்றிவிட்டது. தொழில்முறைச் சார்ந்த சேவைகளை பெறுவதற்கான வாய்ப்பு குறைவாக இருக்கின்றக் காரணத்தால், உங்களின் சருமத்தை பாதுகாக்கின்றப் பொறுப்பு இப்போது உங்களைச் சார்ந்ததாகும். இதன் விளைவாக மனக்கவலையுடன் ஊரடங்கினால் ஏற்படும் மனஅழுத்தம் ஆகிய இரண்டும் சேர்ந்து உங்களுடைய அன்றாட நடைமுறைகள் கடுமையாக மாற்றப்பட்டதால் உங்கள் சருமம் பலவித சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. சூரியனால் பாதிப்பு முதல் வறட்சி வரை மற்றும் சோர்வான தோற்றமுடைய சரும நிறம், தனிமைப்படுத்திக் கொள்ளுதல் போன்றவற்றினால்
உங்கள் சருமம் மிகவும் பாதிப்படைந்துள்ளது. ஃபேசியல் செய்வதற்காக உங்களுக்கு பிடித்தமான சலூனுக்கு சென்று வருவது குறைவாக இருப்பதால், தற்சமயத்திற்கு உங்களுடைய சருமப் பிரச்னைகளை வீட்டு கைவைத்தியத்தின் மூலம் சமாளித்துக் கொள்ளலாம். நீங்களே சிகிச்சைகள் செய்து கொள்வதினால் பலன் கிடைப்பது சில நாட்கள் ஆகலாம். எனவே, தரமான பொருட்களுடன் அவற்றை சேர்த்து பயன்படுத்தும்போது, உங்களுக்கு விரைவான பலன் கிடைப்பதுடன், உங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள முடியும். இந்த ஊரடங்கில் ஏற்படும் சருமப் பிரச்னைகளை சமாளிக்க உதவுவதற்கு சில இயற்கை வைத்தியங்களை இங்கே கூறுகிறோம்.
- நீர் சத்துக் குறைபாட்டிற்கு கற்றாழையை பயன்படுத்தவும்.
- சரும உதிர்தலுக்கு உப்பை பயன்படுத்தவும்.
- முகப்பரு பிரச்னைகளுக்கு டீ ட்ரீ ஆயிலை பயன்படுத்தவும்.
- சருமம் புத்துணர்ச்சிப் பெற காபிப் பொடியைப் பயன்படுத்தவும்.
- சூரிய பாதிப்பை எதிர்த்துப் போராட க்ரீன் டீயை பயன்படுத்தவும்
நீர் சத்துக் குறைபாட்டிற்கு கற்றாழையை பயன்படுத்தவும்.

உடலின் தண்ணீர் குறைபாடே நீர்ச்சத்துக் குறைபாட்டிற்கு காரணமாகும். தொடர்ந்து மனஅழுத்தம் மற்றும் போதுமான நீர் அருந்தாமை போன்றவற்றினால் உங்கள் சருமத்தின் கொழுப்பு தடுப்பு அரண் பலவீணப்பட்டுப் போவதன் விளைவாக மாஸ்யரைஸர் இழப்புக்கு காரணமாகிறது. வறட்சி சருமத்தை பொலிவிழந்து, சோர்வாகவும், சுருங்கியும் தோற்றமளிக்கச் செய்யும். மேலும், கூடுதலாக அரிப்பு, படை போன்ற பிரச்னைகளையும் விளைவிக்கும். உங்கள் முகத்தில் கற்றாழையைப் பயன்படுத்தி, இந்தப் பிரச்னைக்கு ஒரு முற்றுபுள்ளி வைக்கவும். சிறந்த பலன் கிடைக்க Simple Kind To Skin Refreshing Facial Wash போன்ற மென்மையான க்ளீன்ஸரினால் முகத்தை சுத்தம் செய்து உலர்ந்து துணியால் துடைக்கவும், பிறகு கற்றாழை ஜெல்லை நாளொன்றுக்கு இருமுறைப் பயன்படுத்தவும்.
சரும உதிர்தலுக்கு உப்பை பயன்படுத்தவும்.

சரும உதிர்தலுக்கு உப்பை பயன்படுத்தவும்.ஊரடங்கு இல்லாவிட்டாலும் கூட, உடல் பராமரிப்பைப் பற்றி பெரும்பாலும் யாரும் கண்டு கொள்ளப்படுவதில்லை. இறந்த சரும செல்கள் சருமத்தின்மீது அதிகம் சேர்ந்து விடுவதால், வறட்சி, சீரற்ற சருமம், நீக்கப்பட்ட முடி மீண்டும் உட்புகுந்து வளர்தல் மற்றும் பொதுவான பொலிவற்ற சருமத் தோற்றம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால், இறந்த செல்களை சருமங்களிலிருந்து அகற்ற வேண்டியது உங்களின் வழக்கமான பராமரிப்பில் மிக முக்கியமானதாகும். ஒரு புத்துணர்ச்சியான குளியல் அனுபவத்தைப் பெற Pears Naturale Brightening Pomegranate Body Wash போன்ற சுத்தம் செய்யும் ஜெல்லுடன் எப்சம் உப்பை கலந்து பயன்படுத்த வேண்டும்.
முகப்பரு பிரச்னைகளுக்கு டீ ட்ரீ ஆயிலை பயன்படுத்தவும்.

சரும்த்தின் அவசர சிகிச்சைகளுக்கு கையிருக்க வேண்டிய மிக அருமையான உட்பொருளாகும் டீ ட்ரீ ஆயிலாகும். இதிலுள்ள வீக்கத்தை குறைக்கக் கூடிய மற்றும் நுண்ணுயிரிகளை எதிர்க்கும் சக்தி, முகப்பரு மற்றும் சருமத் தொற்று உட்பட மிக முக்கியான அனைத்து சருமப் பிரச்னைகளையும் கையாள்வதற்கு இது உதவி செய்கின்றது. முகப்பூச்சு பூசிக் கொள்வதினால் மேலும் பயன் பெற இந்த டீ ட்ரீ ஆயிலை உங்களுடைய ஃபேஸ் டூல்ஸ்ஸை பயன்படுத்தி மஸாஜ் செய்து கொள்ளலாம் அல்லது Lakmé 9 to 5 Matte Moist Clay Face Mask போன்ற முகப்பூச்சுடன் ஒரு சிலத் துளிகள் கூடுதலாக டீ ட்ரீ ஆயிலை சேர்த்து பயன்படுத்தலாம்.
சருமம் புத்துணர்ச்சிப் பெற காபிப் பொடியைப் பயன்படுத்தவும்.

ஃபில்டரில் மீதமாகும் காபிப் பொடியை தூக்கி எறிந்து விடாதீர்கள். அதற்கு பதிலாக, ஆலிவ் ஆயிலுடன் கலந்து முகத்தில் பூசி வர உங்கள் சருமம் நன்றாகப் புத்துணர்ச்சிப் பெறும். காபியில் இருக்கும் உட்பொருட்கள், செல்லுலைட், முகப்பரு போன்ற பாதிப்புகளை குறைப்பதுடன், கருவளையங்கள் தோன்றுவதையும் குறைக்கின்றது. இந்தக் கலவையை நன்றாக தேய்க்காமல் மென்மையாகத் தடவவும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரினால் நன்றாக கழுவிட வேண்டும். இதன் தொடர்ந்து, காபிப் பொடியைப் பயன்படுத்துவதினால் ஏற்படும் வறட்சியை எதிர்கொள்ள குறிப்பாக Pond’s Hydrating Dewy Radiant Skin போன்ற நீர்ச்சத்துள்ள ஒரு ஷீட் மாஸ்க்கை பயன்படுத்தவும்.
சூரிய பாதிப்பை எதிர்த்துப் போராட க்ரீன் டீயை பயன்படுத்தவும்

வீட்டிலேயே சமூக இடைவெளியில் இருந்து கொண்டிருப்பதால், சூரியக்கதிரின் பாதிப்பிலிருந்து தப்பிக்க முடியாது. அதனால் நீங்கள் ஏற்கனவே கவனித்தது போல சிலப் சூரிய பாதிப்புப் புள்ளிகள் மற்றும் ஹைபர்பிக்மெண்டேஷன் போன்ற பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. வறண்ட சருமம், சூரிய பாதிப்பிலிருந்து தப்பிக்க, இந்த க்ரீன் டீ இலையை நன்றாக அறைத்து, கொஞ்சம் தேன் கலந்து உபயோகிக்கவும். சூரியப் புள்ளிகள் கொஞ்சம்கொஞ்சமாக மறைவதற்கு இந்த க்ரீன் டீ பேகை பயன்படுத்தவும். இந்தப் பாதிப்புக்காக எத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும், தினசர் சன்ஸ்க்ரீன் போட்டுக் கொள்வதில் உறுதியாக இருங்கள். குறிப்பாக, Lakmé Sun Expert SPF 30 Ultra Matte Lotion. போன்றதொரு மென்மையான ஃபார்முலாவை பயன்படுத்தவும்.
Written by Kayal Thanigasalam on Jul 20, 2021