தேனானது சரும பிரச்சனைகளை தீர்க்கும் ஒரு சிறந்த மூலப்பொருளாகும். பல்வேறு அழகு தயாரிப்புகளில் அதனை ஒரு மூலப்பொருளாக சேர்த்து கொண்டதே அதற்கு சான்று! அதீத ஆன்டியாக்சிடண்ட்ஸ் அடங்கிய இது சருமத்தின் சுருக்கங்களை குறைத்து முதிர்ச்சியடையாமல் காக்கும். மேலும் இது சருமத்திற்கு ஈரப்பதத்தை அளித்து முகப்பரு ஏற்படுத்தும் கிருமிகளையும் அழிக்கும். அப்போது இது சிறந்ததுதானே?

சருமம் மற்றும் கூந்தல் பிரச்சனைகளுக்கு இதனை எவ்வாறு பயன்படுத்துவது... மேலும் படியுங்கள்

 

முகப்பரு

முகப்பரு

தேனில் உள்ள ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டிபங்கள் குணங்கள் முகப்பரு ஏற்படுத்தும் கிருமிகளை அழிக்கவல்லது. இது சருமத்தில் உள்ள துவாரங்களை சுத்தம் செய்து, நச்சுக்களை குறைத்து, அழுக்குகளை நீக்கும். முகப்பரு நீங்குவதற்கு, கிண்ணத்தில் ஒரு டீஸ்பூன் தேனை ஊற்றி, பஞ்சால் அந்த தேனை எடுத்து உங்கள் முகப்பருக்களில் தொட்டு எடுங்கள். ஒரு இரவு கழிந்து நீங்கள் பார்க்கும் போது அந்த பரு குறைந்திருக்கும். பளபளப்பான சருமத்திற்கு இதனை தினமும் செய்து வாருங்கள்.

 

ப்ளாக்ஹெட்ஸ்

ப்ளாக்ஹெட்ஸ்

ப்ளாக்ஹெட்ஸ் நம் மூக்கின் தண்டுகளில் ஏற்படும் ஒரு கருப்பு படர்வாகும். இது நம் முகத்தின் பளபளப்பை குறைத்து விடும். இதனை சரி செய்ய நீங்கள் போராடுகிறீர்கள் என்றால், ஒரு டீஸ்பூன் தேனுடன் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறை கலந்து அந்த படர்வில் தடவுங்கள். அடுத்த நாள் பளபளப்பான சருமத்தினை நீங்கள் பார்க்கலாம். நாள்பட இதனை நீங்கள் செய்து வந்தால் உங்கள் சரும பிரச்னைகளையும் இது நீக்கும்.

 

ஸ்ப்ளிட் எண்ட்ஸ்

ஸ்ப்ளிட் எண்ட்ஸ்

வலுவிழந்த கூந்தல் ஸ்ப்ளிட் எண்டுகளுக்கு காரணமாகிறது. நீங்கள் முடி வெட்டினாலும் இந்த பிரச்சனை தீராது. ஆனால் தேனை பயன்படுத்துவதன் மூலமாக உங்கள் கூந்தல் வலுப்பெற்று இந்த ஸ்ப்ளிட் எண்ட்ஸிலிருந்து நீங்கள் விடுபடலாம். இரண்டு ஸ்பூன் ஆலிவ் ஆயிலுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து உங்கள் கூந்தலின் முனைகளில் தடவி மறுநாள் கழுவுங்கள்.

 

மென்மையான உதடுகளுக்கு

மென்மையான உதடுகளுக்கு

உங்கள் வறண்ட உதடுகளுக்கு தேனைத் தவிர ஒரு சிறந்த மருந்து இருக்க முடியாது. இரவு தூங்கும்முன் உதடுகளில் நன்கு தேனைத் தடவுங்கள். அதில் உள்ள மென்மை மற்றும் குணமாக்குகின்ற தன்மை உங்கள் உதடுகளை மென்மையாகவும் பளபளப்பாகவும் மாற்றும்.