தினமும் ஒர்க் அவுட் செய்வது உங்களின் உடலை வாளிப்பாக வைத்திருக்கும். உங்கள் மனநிலையும் சூப்பராக இருக்கும். உடம்பிலுள்ள டாக்சின்கள் வியர்வையுடன் வெளியேறவும் உதவும். ஆனால் உடற்பயிற்சிக்குப் பிறகு சரியான ஸ்கின்கேர் வழக்கங்களை பின்பற்றாவிட்டால் சருமத்திற்கு நல்லதல்ல.

ஒர்க் அவுட் செய்த பிறகு சில நிமிடம் கவனம் செலுத்தினாலே போதும். தொடர்ந்து உடற்பயிற்சி செய்பவர்கள் பளிங்கு போன்ற சருமம் பெற பின்பற்ற வேண்டிய டிப்ஸ் இதோ.

 

ஒர்க் அவுட் முடித்த பிறகு சருமத்தை க்ளென்ஸ் செய்யவும்

ஒர்க் அவுட் முடித்த பிறகு சருமத்தை க்ளென்ஸ் செய்யவும்

உடற்பயிற்சிக்குப் பிறகு சருமத்தில் இருக்கும் வியர்வையை முதலில் நீக்க வேண்டும். கொஞ்ச நேரம் கழித்து நீங்கள் ஷவர் செய்யலாம் என்றாலும் அதற்கு முன்பு முகத்தில் உள்ள வியர்வையை துடைத்து எடுக்க வேண்டும். ஆனால் அழுக்கான கைகளால் அதைச் செய்ய வேண்டாம். முகத்தை சுத்தமாக துடைக்கும் முன்பு கையால் தொட வேண்டாம். சோப், தண்ணீர் அல்லது சானிடைஸர் மூலம் க்ளென்ஸ் செய்த பிறகே கையால் தொடலாம். ஒர்க் அவுட் முடிந்ததும் ஒரு க்ளென்ஸரால் சுத்தம் செய்வது சிறந்தது. அது முடியவில்லை என்றால் Ponds Skin Fit Post Workout Instant Cooldown Wipes போன்ற ஃபேஷியல் வைப்ஸ் பயன்படுத்தலாம். இது தூசியையும் அழுக்கையும் நீக்க உதவும்.

 

எடை குறைவான மாஸ்சுரைஸர் பயன்படுத்தவும்

எடை குறைவான மாஸ்சுரைஸர் பயன்படுத்தவும்

ஒர்க் அவுட் செய்யும் போது சரும துளைகள் விரிவடையும். அதனால் உடற்பயிற்சியை முடித்த பிறகு சருமத்தின் வெப்பத்தைக் குறைக்க வேண்டும். தூசி, அழுக்கு, மாசு சரும துளைகளை அடைத்துக்கொள்ளாமல் இது தடுக்கும். முகத்தை க்ளென்ஸ் செய்த பிறகு Ponds Skin Fit Post Workout Cooldown Hydrating Gel SPF 50 போன்ற எடை குறைவான, தண்ணீரான மாஸ்சுரைஸர் அப்ளை செய்ய வேண்டும். இது சருமத்திற்கு ஈரப் பதம் கொடுக்கும், பி.எச் சமநிலையை காக்கும். இந்த ஃபார்முலா உடனடியாக சருமத்தால் உறிஞ்சப்படும்.

 

புது உடை மாற்றுங்கள்

புது உடை மாற்றுங்கள்

வியர்வை ஆடையில் அப்படியே இருக்காதீர்கள். இது ரேஷ் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதனால் ஒர்க் அவுட் செய்து வீடு திரும்பியவுடன் அல்லது வீட்டில் உடற்பயிற்சியை முடித்தவுடன் வியர்வை ஆடையிலிருந்து வேறு ஆடைக்கு மாறுங்கள். சருமத்தில் வியர்வை காய விடுவது பல ஸ்கின் பிரச்சனைகளை உண்டாக்கும். அது வேண்டாமே.