"என்னை பத்து நிமிடத்தில் அழகாக்கக்கூடிய வழிமுறைகளையே நான் பின்பற்ற விரும்புவேன்". இதனை நீங்கள் ஆமோதித்தால், இப்பொழுது உங்களுக்கான அழகு சார்ந்த வழிமுறைகளை நாங்கள் கூற இருக்கிறோம். இது தினசரி அழகு சார்ந்த வழக்கங்களை பின்பற்ற முடியாத பெண்களுக்கானது. இதனை செய்திட உங்களுடைய அழகு சாதன பொருட்களில் நாங்கள் கூறும் சில தயரிப்புகளை வைத்துக்கொண்டாலே போதுமானது. நாம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன என்பதை காண்போம்:

 

நல்ல தூக்கம்:

நல்ல தூக்கம்:

நம்முடைய சருமம் சந்திக்கின்ற தினசரி வறட்சியில் இருந்து விடுபட நல்ல தூக்கம் அவசியமானது. 4 முதல் 5 மணி நேர மிதமான தூக்கத்தால் உங்கள் உடம்பை கெடுத்து கொள்ளாதீர்கள். சாதாரண கணக்கு தான்; குறைவான தூக்கத்தால், கண்ணில் குழி விழுவது மற்றும் கருவளையங்கள் மற்றும் உலர்ந்த சருமம், இதனை நேர்செய்ய அதிகமான அழகு சாதன பொருட்களை நாம் பயன்படுத்த நேரிடும். எனவே நிறைவான தூக்கத்தால் பொருட்களை குறைத்து கொள்ளலாமே.

 

தினசரி தண்ணீர் நன்கு குடியுங்கள்:

தினசரி தண்ணீர் நன்கு குடியுங்கள்:

தினமும் 2 முதல் 2.5 லிட்டர் தண்ணீர் குடிப்பதனால் உடம்பிலுள்ள கேட்ட நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு நம்முடைய சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும். சரியான நீர் அளவு உடம்பிலுள்ள வறட்சியை குறைத்து நம்முடைய சருமத்தை ஆரோக்கியமாகவும் மிருதுவாகவும் வைத்திருக்கும்.

 

எக்ஸ்ஃபாலியேட் செய்தல்:

எக்ஸ்ஃபாலியேட் செய்தல்:

உங்களால் சரும பராமரிப்பிற்கு அதிக நேரம் செலவிட முடியாதென்றால் நீங்கள் Dermalogica Skin Resurfacing Cleanser பயன்படுத்தலாம். இதிலுள்ள ரோஜா பூ எண்ணெய், லாக்டிக் அமிலம் மற்றும் வைட்டமின் E சருமத்தினை சுத்தம் செய்வதோடு நீண்ட நேரம் ஈரப்பதத்தோடு வைத்திருக்கிறது.

 

சீரமை பயன்படுத்துங்கள்:

சீரமை பயன்படுத்துங்கள்:

பளிச்சிடும் வெண்மை, ஈரப்பதம் மற்றும் சூரிய ஒளியிலிருந்து பாதுகாப்பு இவை அனைத்தும் ஒரே சீரமில் இருந்தால் அதுவே உங்களுக்கானது. வைட்டமின் C மற்றும் ககாடு பிளம் அடங்கிய Lakme 9to5 Vitamin C+ Facial Serum, சரும மாசுபாடு, கருத்து போதல் மற்றும் வறட்சியிருந்து காக்கும் சத்துக்களை சருமத்திற்கு தருகிறது.

 

அனைத்தும் அடங்கிய ஒரு மேக்கப்:

அனைத்தும் அடங்கிய ஒரு மேக்கப்:

அதிக அழகு சாதன பொருட்கள் மற்றும் தயாரிப்புகளை நீங்கள் விரும்பவில்லையென்றால், உங்களுக்கான பல்பணி செய்யக்கூடிய Lakmé 9to5 Primer + Matte Powder Foundation தயாரிப்பே போதுமானது. 3 இன் 1 பார்முலாவான இது ப்ரைமராக சருமத்திலுள்ள கருப்புகளை மறைத்து, சமமான வெண்மையை கொடுக்கும்; பவுண்டேஷன் நல்ல கவரேஜ் கொடுக்கும்; மற்றும் சிறந்த மேட் பினிஷ்க்காக காம்பக்ட்டாகவும் வேலை செய்யும்.

 

குவிந்த உதடுகளில் அடர் வண்ணம்

குவிந்த உதடுகளில் அடர் வண்ணம்

பளிச்சிடும் உதடுகள் உங்களது அழகை மெருகேற்றும் மற்றும் நீங்கள் மேக்கப்பிற்கு அதிக மெனக்கெட்டுள்ளீர்கள் என்று தோன்றச்செய்யும். ஆனால் யாருக்கும் தெரியக்கூடாது நீங்கள் அந்த லிப்ஸ்டிக்க்கை பயன்படுத்தி வெறும் 30 வினாடிகளே செலவளித்தீர்கள் என்று. எனவே Lakmé 9 To 5 Primer + Matte Lip Color - Red Velvet இருந்து உங்களுக்கு பிடித்த கலரை தேர்வு செய்து பயன்படுத்துங்கள்.

 

அழகான சிகை அலங்காரம்:

அழகான சிகை அலங்காரம்:

நமக்கு சுலபமாக எளிதில் வரக்கூடிய ஹேர்ஸ்டைல் மெஸ்ஸி போனிடைல் மட்டுமே. ஆனால் நாங்கள் சொல்வது செய்தால் இன்னும் சிறப்பான பலனை பார்க்கலாம். உங்கள் சிகையை மேல்,கீழ் என்று இரண்டு பகுதிகளாக பிரியுங்கள். முன்பக்கத்தில் முகத்தினை மறைக்க சில ஸ்டரண்டோடு மிதமிருப்பதை பின்பக்கம் இழுத்து வாரி போனிடைல் போடுங்கள். கீழ் பகுதி சிகையையும் வாரி போனிடைல் போடுங்கள். அழகான அமைப்பிற்கு TRESemmé Compressed Micro Mist Invisible Hold Natural Finish Texture Hold Level 1 Hair Spray பயன்படுத்துங்கள். அழகான ஹேர்ஸ்டைல் உங்களுக்கானதே!