காலப்போக்கில் உங்கள் சருமத்தின் தன்மையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? உங்கள் சருமம் உலர் சருமத்தில் இருந்து எண்ணெய் பசை மிக்க மற்றும் பருக்கள் தோன்றும் சரும வகையாக மாறியிருக்கிறதா? இந்த மாற்றங்கள் நிரந்தரமானவையா? அல்லது காலப்போக்கில் சரியாக சருமம் மீண்டும் பழைய தன்மையை பெறுமா?

சரும வகை என்பது மரபணு சார்ந்தது என்பதும், அது பிறப்பில் இருந்து உண்டானது என்பதும் உண்மை தான். ஆனால், சுரப்பிகளின் மாற்றம், பருவநிலை மாற்றம் அல்லது வாழ்வியல் மாற்றங்கள் பல விதங்களில் உங்கள் சருமத்தை பாதித்து. அதன் தன்மையை மாற்றலாம். உங்கள் சரும தன்மையை மாற்றக்கூடிய சில முக்கியமான காரணங்களை பார்க்கலாம் வாருங்கள். 

·     வயோதிகம்

·     காலநிலை அல்லது பருவநிலை மாற்றங்கள்

·     வாழ்வியல் மாற்றங்கள்

·     ஊட்டச்சத்து குறைபாடு

 

வயோதிகம்

வயோதிகம்

சருமத்தின் தன்மை மாறுவதில் வயோதிகம் முக்கிய பங்காற்றுகிறது. நீங்கள் பதின் பருவத்தில் மற்றும் இளமையான 20 களில் இருக்கும் போது, உங்கள் சுரப்பிகள் சீராக செயல்பட்டுக்கொண்டிருப்பதால் சுரப்பு சுழற்சியும் சீராக இருக்கும். இது எண்ணெய் பசை உற்பத்தியை அதிகமாக்குகிறது. வயோதிகம் காரணமாக, எண்ணெய் பசை உற்பத்தி குறைவதால் சருமம் உலர் தன்மை பெறத்துவங்குகிறது.

 

கால நிலை அல்லது பருவநிலை மாற்றங்கள்

கால நிலை அல்லது பருவநிலை மாற்றங்கள்

நீங்கள் வேறு நாடுகளுக்கு செல்வதாக இருந்தால், மற்ற உறுப்புகளின் பாதுகாப்பிற்காகவும், உங்கள் சருமம் புதிய சூழலுக்கு ஏற்ப மாறும். வேறுபட்ட சரும வகைகள் இதற்கு வேறுபட்ட முறையில் செயல்படுகின்றன. சில நேரங்களில் உலர் சருமம் மேலும் உலர் தன்மை பெறலாம். எண்ணெய் பசை சருமம், சமநிலை பெறலாம். எனவே காலநிலை மாற்றங்கள் உங்கள் சருமத்தின் வகையில் முக்கிய தாக்கம் செலுத்துகிறது.

 

வாழ்வியல் மாற்றங்கள்

வாழ்வியல் மாற்றங்கள்

நீங்கள் காலப்போக்கில் உண்டாக்கி கொண்ட பழக்க வழக்கங்கள் காரணமாக கூட உங்கள் சருமத்தின் தன்மை மாறலாம். நிறைய காபி குடிப்பது மற்றும் அதற்கேற்ப போதிய தண்ணீர் குடிக்காமல் இருப்பது உங்கள் சருமத்தை உலரச்செய்யலாம். அதிக அளவிலான எக்ஸ்போலியேஷன், உங்கள் சருமத்தின் இயற்கையான எண்ணெய் பசையை குறைக்கிறது. இதை ஈடு செய்ய சருமம் மேலும் அதிக செபத்தை சுரக்க வேண்டியிருப்பதால், உங்கள் உலர் சருமம் எண்ணெய் பசை மிக்கதாக மாறிவிடுகிறது.

 

மருந்துகள்

மருந்துகள்

நீங்கள் ஏதேனும் மருந்துகள் எடுத்துக்கொண்டிருந்தால், அதுவும் உங்கள் சருமத்தின் தன்மையை பாதிக்கும். ஒரு சில வகை மருந்துகள் உலர் சருமத்தை உண்டாக்கும். சில மருந்து வகைகள் சருமத்தை எண்ணெய் பசை மிக்கதாக்கலாம். ஆனால் இது தற்காலிகமானது. இது தொடர்பாக உங்கள் டாக்டரிடம் ஆலோசனை பெற்று தீர்வு காணலாம்.

 

உட்டச்சத்து குறைபாடு

உட்டச்சத்து குறைபாடு

நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதும் உங்கள் சரும தன்மையை தீர்மானிக்கிறது. சர்க்கரை அதிக அளவு உள்ள உணவுப்பொருட்களை அதிகம் சாப்பிடுவது, உங்கள் சருமத்தை உலரச்செய்து மங்கச்செய்கிறது. மேலும் போதிய அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பதும் உங்கள் சருமம் காலப்போக்கில் உலர்த்தன்மை பெறுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.