விரைவில் தாய்மை அடையப் போகும் உங்களுக்கு, ஒரு மில்லியன் கேள்விகள் உங்கள் மனதில் இப்போது வட்டமடித்துக் கொண்டிருக்கும். நான் பயன்படுத்த வேண்டிய சருமப் பராமரிப்பு தயாரிப்புகள் என்ன? நான் தவிர்க்க வேண்டிய பொருட்கள் யாவை? தலைமுடியை கலர் செய்து கொள்வது பாதுகாப்பானதா?

இது உங்களுடைய தலைப் பிரசவமாக இருந்தால், அதிகமாக சிந்திப்பதும், குழப்பமடைவதும் இயற்கையானது தான். ஆகையால்தான், கர்ப்பம் சம்பந்தமான அழுகு குறித்த உங்கள் சந்தேகங்களுக்கு பதிலளிப்பதற்காக நிபுணர்களை நாங்கள் அழைத்து வந்துள்ளோம். தாய்மை அடையப் போகும் பெண்கள் எதிர்கொள்ளும் அழகு சம்பந்தப்படச 10 கேள்விகளுக்கு விருது வென்ற சரும மருத்துவர் Dr. கீதிகா மிட்டல் குப்தா (@drgeetika on Instagram) பதிலளிக்கின்றார். அவர் நிறுவனர் ISAAC Luxe (இண்டர்நேஷனல் ஸ்கின் & ஆன்ட்டி-ஏஜிங் சென்டர்) ஆவார். மேலும், இவருக்கு இத்துறையில் 13 வருட அனுபவம் உள்ளது. எனவே, அவரை தாராளமாக நம்பலாம்.

பீபி : பிரசவத்திற்கு பின் ஏற்படும் தலைமுடி உதிர்வை எப்படி கட்டுப்படுத்துவது?

பீபி : பிரசவ காலத்தில் முகப்பருவுக்கு பாதுகாப்பாக சிகிச்சைக்கு என்ன வழி?

Dr. கீதிகா : பிரசவ காலத்தின் போது ரெட்டினால் மற்றும் சாலிசிலிக் அமிலம் ஏற்றதல்ல. எனவே, உங்களுக்கு சரும வெடிப்பு பாதிப்பு ஏற்பட்டால், க்ளிணடாமைஸினை பயன்படுத்தலாம். அதிகமான காய்கறிகள், பழங்கள் சாப்பிட வேண்டும். கூடுமானவரை ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும். உங்களின் முகப்பரு அதிகமானால், ஒரு மென்மையான லாக்டிக் ஆஸிட் பீல் பற்றி உங்கள் சரும மருத்தவரிடம் கலந்துரையாடுங்கள்.

பீபி : பிரசவ காலத்தில் என் தலைமுடியை கலர் செய்து கொள்ளலாமா?

Dr. கீதிகா : நிரந்தரமான மற்றும் அரை நிரந்தர ஹேர் டைஸ்களில் அதிகமான நச்சுத்தன்மை இல்லாவிடினும், அவை சருமத்தால் உறிஞ்சப்படுகின்றன. டச்ச-அப் செய்து கொள்வதுதான் மிகவும் பாதுகாப்பானது என்று நினைக்கிறேன். ஆனால், ஹைலைட்டிங் மற்றும் ஓம்ப்ரே அமர்வுகளை பிரசவத்திற்குப் பிறகு வைத்துக் கொள்வது. அது வரை பேறு காலத்தில் மகிழ்ச்சியுடன் இருங்கள்

பீபி : பிரசவத்திற்கு பின் ஏற்படும் தலைமுடி உதிர்வை எப்படி கட்டுப்படுத்துவது?

Dr. கீதிகா : பிரசவத்திற்கு பின் தலைமுடி இழப்பிற்கு காரணம், ஈஸ்ட்ரோஜன் அளவைக் குறைப்பது டெலோஜென் எஃப்ளூவியம் அல்லது ஹேர் ஷெட்டிங்கைத் தூண்டுகிறது. பெரும்பாலான பெண்கள் தலைமுடி மெலிதாவது மற்றும் அதிகப்படியான முடி இழப்பினால் பெரிது பாதிக்கப்படுகிறார்கள். அது இரண்டு அல்லது மூன்று மாதங்கள் வரை தொடரும். ஆரோக்கியமான கொழுப்புச் சத்து உணவுகளுடன் 3-6-9 ஒமேகா ஊட்டச்சத்து மருந்துகளையும் எடுத்துக் கொள்ளலாம். உங்களுடைய தலைமுடி மெலிதாவதை தவிர்க்க முடியை இரண்டாக பிரித்துக் கொள்ளவும். மேலும், கெமிக்கல் சிகிச்சை மற்றும் அதிக சூடாவதிலிருந்து விலகியிருங்கள். இந்த எண்ணமே.சரும விரிசலை மேலும் மோசமடையாமல் தடுப்பதற்காக தான். அப்போதும், உங்களுடைய தலைமுடி தொடர்ந்து உதிர்ந்து கொண்டிருந்தால், மீண்டும் உங்களுடைய முடியை வளரச் செய்வதற்கு, உங்களுடைய இரத்தத்தையே பயன்படுத்தும் பிளேட்லெட் ரிச் ப்ளாஸ்மா அல்லது PRP சிகிச்சையை முயற்சி செய்து பாருங்கள். முடி மெலிதாவதை தடுப்பதற்கு PRP மிகச் சிறந்த மாற்றாகும் மேலும் மிகவும் பாதுகாப்பானதும் கூட. கூடுதலாக, மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே செய்து கொள்வதால், நீங்கள் நீண்ட நேரம் குழந்தையை விட்டு பிரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை.

பீபி : மெலேஸ்மா தற்காலிகமானதா? அதை எவ்வாறு சமாளிப்பது?

Dr. கீதிகா : பிரசவ காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தினால் 80 சதவீத பெண்கள் ஹைபர்பிக்மெண்டேஷனால் பாதிக்கப்படுகிறார்கள். நீலம், சாம்பல்-பழுப்பு நிற தடிப்புகள் முகத்தில் காணப்படுவதே, மெலேஸ்மா என்று பொதுவாக அறியப்படுகிறது. இது புதிய தாய்மார்கள் மற்றும் தாய்மை அடையப் போகும் பெண்கள் பொதுவாக எதிர்கொள்ளும் பிரச்னையாகும். தாய்மை அடையப் போகும் சிலப் பெண்களுக்கு இது தற்காலிகமானது, இருப்பினும் பிரசவத்திற்கு பின்பும் இது மறையவில்லையெனில் அவர்களுக்கு அதிகமான உதவிகள் தேவைப்படும். முழுமையான மருத்துவ மற்றும் சரும பரிசோதனைப் பிறகு, உங்களுடைய சரும மருத்துவர் உங்களின் தனிப்பட்ட சிகிச்சையை வரிசைப்படுத்துவார். அதில் லேசர் தெரபியின் அல்லது ஒரு திரவ ஹைட்ரோகுவினோன், க்ரீம் அல்லது ஜெல் வடிவம் போன்ற உயர்ந்த க்ரீம்களின் கலவையை உள்ளடக்கி இருக்கலாம். நீங்கள் லேசர் டோனிங்கை தெரிவு செய்யலாம். எலாஸ்டின் மற்றும் கொலாஜென்னை உற்பத்தி செய்வதற்கு உடலில் ஒரு இயற்கையாக வினையாற்றுவதற்கு தூண்டக் கூடிய சரியான பிக்மெண்டேஷனாகும்.

பீபி : தாய்மை அடையப் போகிறவர்கள் செய்ய வேண்டிய சில சருமப் பராமரிப்பு யாவை?

பீபி : தாய்மை அடையப் போகிறவர்கள் செய்ய வேண்டிய சில சருமப் பராமரிப்பு யாவை?

Dr. கீதிகா : நீங்கள் தற்போதுதான பிரசவித்துள்ளீர்கள் என்றால், நீங்கள் ஒரு சமநிலையை அடைவதே மிகவும் முக்கியம். pH சீராகவுள்ள ஃபேஸ் வாஷ், ஒரு குறைந்த ஆற்றல் கொண்ட வைட்டமின் C சீரம் மற்றும் ஐ க்ரீம் ஆகியவற்றைப் பயன்படுத்துங்கள். சன்ஸ்க்ரீன் பூசிக் கொள்வதை நிறுத்தாதீர்கள். உடல் சார்ந்த சன்ஸ்க்ரீன்களையே பயன்படுத்துங்கள். ஏனெனில் அது ஒரு வெண்ணிற லேயரை விட்டுச் செல்லும். இது கெமிக்கல் சன்ஸ்க்ரீன்களை விட மிகவும் பாதுகாப்பானது. அவை சூரியக் கதிர்களை உடல்ரீதியாகத் தடுக்கின்றன. தொடர்ந்து சருமத்தை மஸாஜ் செய்து கொள்ளுங்கள். மேலும் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க உடல் வெண்ணெய் மற்றும் உடல் எண்ணெய்யை பயன்படுத்துங்கள். வீக்கத்தை தவிர்க்க உப்பு சேர்ப்பதை குறைத்துக் கொள்ளுங்கள்.

பீபி : சதை நீட்சி தழும்பை (stretch marks ) வீட்டிலேயே சமாளிப்பது எப்படி?

Dr. கீதிகா : சதை நீட்சி தழும்பு (stretch marks) என்று வரும்போது, சில விஷயங்களை நீங்கள் வீட்டிலிருந்தே செய்யத் தொடங்கலாம். உங்கள் சருமத்தை ஹைட்ரேட்டுடன் வைத்திருக்க உதவும் உயர்ரக எண்ணெய் மற்றும் க்ரீம்களை பயன்படுத்தலாம். இதில் தாவர வெண்ணெய், தேங்காய் எண்ணெய், அவகேடோ எண்ணெய், ஹைலூரோனிக் அமிலம் மற்றும் வேறு ஹைட்ரேட்டிங் பொருட்கள் உள்ளடங்கியது. வறட்சித் தன்மையால் பெரும்பாலான அரிப்புகள் ஏற்படுகிறது என்பதை மறவாதீர்கள். தேங்காய் எண்ணெய், வைட்டமின் E கேப்ஸ்யூல்கள் மற்றும் தாவரத்தை அடிப்படையாகக் கொண்ட வேறுசில எண்ணெய்கள் முதலியவை அரிப்பைக் கட்டுப்படுத்த உண்மையிலேயே உதவுகின்றன. எண்ணெய்கள் உறிஞ்சப்படுவதற்கு வெகுநாட்கள் ஆகும் என்பதால், இவை குறிப்பாக வறட்சியான சருமத்தையுடையவர்களும் மிகவும் உதவியாக இருக்கும்.

பீபி : சதை நீட்சி தழும்பை (stretch marks ) வீட்டிலேயே சமாளிப்பது எப்படி?

பீபி : தாய்மை அடைய போகும் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தவிர்க்க வேண்டிய சருமப் பராமரிப்பு பொருட்கள் ஏதேனும் உள்ளனவா?

Dr. கீதிகா : நல்லது, வழக்கமாக பிரசவ காலத்தை விளக்குவதற்கு ஒரு சிறந்த வார்த்தை ‘மென்மை’யாகும். ரெட்டினால், சாலிசிலிக் அமிலம், ரெட்டின்- A, ரெட்டினைல் பாலமிடேட் மற்றும் பென்ஸைவ் பெராக்ஸைட் போன்ற தயாரிப்புகளை தவிர்க்கவும். முகப்பருக்கான மருந்துகளை சாப்பிடுபவரானால், உங்களுடைய சரும மருத்துவர் மற்றும் மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவரிடம் கலந்தாலோசியுங்கள். தேன், க்ளிசரின், யூரியா அதோடு தாவரத்தை அடிப்படையாகக் கொண்ட வைட்டமின் C (குறைந்தளவு திடத்தன்மையுடையது) போன்ற வழக்கமான ஈரம்சார்ந்த பொருட்கள் பயன்படுத்துவதற்கு மிகவும் பாதுகாப்பானது. சதை நீட்சி தழும்புகளை தடுக்க உங்கள் சருமத்தை ஹைட்ரேட் செய்து கொள்வது மிகவும் முக்கியமாகும். எனவே, பாதாமி-கெர்னல், பாதாம் மற்றும் தேங்காய் எண்ணெய், தாவர எண்ணெய், மோரிங்கா ஆயில் பாடி பட்டர் மற்றும் ப்ரேசில் நட் வெண்ணெய் ஆகியவை மிகவும் சிறந்தவை.

பீபி : சதை நீட்சி தழும்பை (stretch marks ) வீட்டிலேயே சமாளிப்பது எப்படி?

மென்மையான தயாரிப்புகளை பயன்படுத்துவது மிகவும் சிறந்ததாகும். வழக்கமான சுத்தம் செய்தல், மைக்ரோடெர்மப்ரேசன் மற்றும் லாக்டிக் அமிலம் போன்ற ஒரு மென்மையான AHA முதலியவைகளை உள்ளடக்கிய ஒரு பாதுகாப்பான ஃபேசியல் செய்து கொள்ளலாம். சாலிசிலிக் அமிலத்துடன் கூடிய கெமிக்கல் பீல்ஸ், போடக்ஸ், மற்றும் லேசர் சிகிச்சைகள் போன்ற தொழில்முறை சிகிச்சைகளை தவிர்க்கவும்.

பீபி : தாயாகப் போகிறவர்கள் நம்பக்கூடாத அழகியல் கட்டுக்கதைகள் ஏதாவது உன்னதா?

Dr. கீதிகா : ஆமாம், காபி குடிப்பதினால் குழந்தை கருப்பாகப் பிறக்கும் என்று பெரும்பாலான மக்கள் நம்புகின்றனர். இது ஒரு கட்டுக்கதை மட்டுமல்ல, நிறவாதமும் கூட. இது போன்ற எண்ணங்களை புறந்தள்ள வேண்டிய தருணம் இது.

பீபி : தாயாகப் போகும் பெண்ணுக்கு ஒரு சருமப் பராமரிப்பு தொகுப்பை கொடுக்க முடியுமா?

Dr. கீதிகா : உங்கள் சருமத்தை ஹைட்ரேட்டுடன் வைத்துக் கொள்ள தாவர வெண்ணெய், மோரிங்கா ஆயில் பாடி பட்டர், ப்ரேசில் நட் பட்டர், அதனுடன் கோல்ட் ப்ரஸ்ட் ஆயில் மற்றும் தாய்மார்களுக்கு நன்றாக தூக்கமவர கொஞ்சம் லேவெண்டர் எஸன்ஷியல் ஆயில் மிகவும் சிறந்தது.

பீபி : சதை நீட்சி தழும்பை (stretch marks ) வீட்டிலேயே சமாளிப்பது எப்படி?

பீபி : இரவில் தூக்கமில்லாத காரணத்தினால் ஏற்படும் கருவளையங்களை எப்படி சமாளிப்பது?

Dr. கீதிகா : கண்களுக்கு கீழ் கருமையாக்க் காணப்படுவது அடிப்படையில் கருவளையங்களாக இருக்கலாம். இது பொதுவாக கண்களுக்குக் கீழ் ஆக்ஸிஜனேற்றப்பட்ட இரத்தத்தால் உருவாகிறது. மரபியல், ஒவ்வாமை, தூக்கமின்மை, அல்லது சில சமயம் இரத்த சோகை போன்ற காரணங்களால் கூட கருவளையங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. முதலில் முழுமையான மருத்துவ பரிசோதனை செய்து கொண்ட பிறகு, கருவளையத்திற்கு காரணமான குறைபாடுகளை கண்டறியவும். உங்கள் கண்களுக்குக் கீழ் நீரேற்றமுள்ளதா என்பதை உறுதி செய்ய ஒரு ஐக்ரீமை தடவ ஆரம்பிக்கவும். ஐக்ரீமுடன் வழக்கமான சருமப் பராமரிப்பை வீட்டிலேயே செய்வதுடன்,

பின்குறிப்பிடும் சிகிச்சைகளையும் நீங்கள் தேர்வு செய்ய அறிவுறுத்துகிறேன் : கெமிக்கல் பீல்ஸ்: சரும அமைப்பை மேம்படுத்த, நிறமாறுதல், மற்றும் கண்களுக்குக் கீழே கண்களைச் சுற்றி கரும்புள்ளிகள் இவற்றை குணப்படுத்த உதவுவதற்கு பல்வேறு வகையான AHA மற்றும் BHA பீல்ஸ்கள் உள்ளன மைக்ரோடெர்மப்ரேசன்: இறந்த செல்களின் மேலடுக்குகளை அகற்றுவதற்கு உதவ சிறிய கிரிஸ்டல்கள் மற்றும் வேறு எக்ஸ்போலியண்ட்ஸ் பயன்படுத்துவது ஒரு அறுவை சிகிச்சையற்ற வழிமுறையாகும். துளைகள் ஏற்படுவது குறையும், இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும்,மற்றும் நிறமாறுதலை குறைக்கவும் இது உதவியாக இருக்க்ம். டெர்மல் ஃபில்லர்ஸ்: டெர்மல் ஃபில்லர்ஸ் என்பது ஊசிப் போடுவதாகும். இதை சருமத்தை கொழுகொழுவென்று ஆக்கவும், ஹைட்ரேட் செய்யவும் பயன்படுத்தபடுகின்றது.

மேலும், வயதின் காரணமாக வருடக் கணக்கில் நாம் இழந்த கொலாஜென் மற்றும் எலாஸ்டின் மீண்டும் பெறவும் உதவும். ஹைலூரோனிக் அமிலத்துடன் சேர்ந்து இந்த ஃபில்லர்கள் கருவளையங்களை குறைக்க உதவும்.