இந்த மழைக்காலத்தை சமாளிப்பதற்கு உங்களுடைய சருமம் தயாராகிவிட்டதா. இந்த இத்தகைய சருமப்பராமரிப்பு சாதனங்கள் உங்கள் சருமத்தை பாதுகாக்கும்.

Written by Kayal ThanigasalamNov 30, 2023
இந்த மழைக்காலத்தை சமாளிப்பதற்கு உங்களுடைய சருமம் தயாராகிவிட்டதா. இந்த இத்தகைய சருமப்பராமரிப்பு சாதனங்கள் உங்கள் சருமத்தை பாதுகாக்கும்.

சுட்டெரிக்கும் கோடைகால வெப்பம் கடந்து சென்றவுடன் உங்களுடைய சருமம் சிறப்பாக இருப்பதாக உணர்கிறீர்களா? இதோ மற்றுமொரு தாக்குதலை சந்திக்கப் போகிறோம். உலகத்திலுள்ள அனைத்தையும் சுத்தமாகவும், அழகாகவும் மாற்றக்கூடிய மழைக்காலம், உங்கள் சருமத்தைப் பொருத்தவரை அதற்கு நேர்மாறாக நடந்து கொள்ளும். முகப்பரு, பொலிவின்மை, வறட்சி போன்ற ஒரு சில பிரச்னைகளை உங்களுடைய சருமத்திற்கு தரும். அது அப்படியே இருக்க வேண்டிய அவசியமில்லை. சிறிதளவு முயற்சி எடுத்துக் கொண்டால், உங்கள் சருமத்தை மழைக்காலத்தை தயார் செய்ய முடியும். மழைக்காலத்தை சமாளிக்க உங்கள் சருமத்தை எவ்வாறு தயார் செய்வது மற்றும் வெளியிலுள்ள வானிலையைவிட மிக அழகாக இருக்கும் செய்வதுப் பற்றியும் இங்கே காணலாம்.

 

மாஸ்யரைஸ் செய்யாமல் இருக்கக் கூடாது.

முகத்தை சுத்தமாகவும், எண்ணெய் வடியாமலும் வைத்துக் கொள்ளுங்கள்

உங்கள் வாழ்க்கையைப் பொறுத்து உங்கள் சருமத்தை ஹைட்ரேட் செய்யுங்கள். வானிலையின் ஏற்ற இறக்கம் மற்றும் ஈரப்பதத்தின் அளவு போன்ற மாற்றங்களால் வறட்சியடைந்த உங்கள் சருமம் மேலும் வறட்சியடையச் செய்யும் மற்றும் மழைகாலத்தில் சருமத்தை சீரற்றதாகவும் மாற்றிவிடும். சருமத்திலுள்ள இடைவெளியை நீக்குவதற்கு ஒரு ஊட்டமளிக்கக் கூடிய மற்றும் லைட்வைட் மாஸ்யரைஸரை பயன்படுத்தவும், மேலும், வாரத்திற்கு இருமுறை ஹைட்ரேட்டிங் ஃபேஸ் மாஸ்க்கினால் மாஸ்யரை தக்க வைத்துக் கொள்ளுங்கள்.

 

வெடிப்பு ஏற்படுவதை தடுத்தெறியுங்கள்.

முகத்தை சுத்தமாகவும், எண்ணெய் வடியாமலும் வைத்துக் கொள்ளுங்கள்

அமில மழைநீர் மற்றும் திடீரென்று வானிலையில் ஏற்படும் மாற்றத்தினால் முகப்பரு மற்றும் வெடிப்புகள் ஏற்பட காரணமாகும், அவையே ஒரு கடைசியில் மிகப் பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தும். இதனுடன், உங்கள்முகத்தில் படியும் கடுமையான மற்றும் அழுக்குகளும் ஒரு காரணமாகும். மழைக்காலத்தில் முகப்பருக்களை எதிர்த்துப் போராட, முறையான சருமப்பராமரிப்பு விதிகளை பின்பற்ற வேண்டும். உங்கள் சருமத்தின் துளைகளை அடைக்காத பிசுபிசுப்பில்லாத சருமப்பராமரிப்பு பொருட்களைப் பயன்படுத்துவதை உறுதி செய்து கொள்ளுங்கள். மேலும் அதிகப்படியாக வடியும் எண்ணெய் மிருதுவான ஸ்க்ரப்புகளால் துடைத்து எடுக்கவும்.

 

ஸன்ஸ்க்ரீன் பயன்படுத்துவது மிகவும் இன்றியமையாதது.

முகத்தை சுத்தமாகவும், எண்ணெய் வடியாமலும் வைத்துக் கொள்ளுங்கள்

சூரிய வெப்பம் வெளிப்படையாக தெரியாமல் இருக்கும் காரணத்தினால், ஸன்ஸ்க்ரீன் உங்களுக்குத் தேவையில்லை என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், மழைப் பெய்கிறதோ, இல்லையோ ஸன்ஸ்க்ரீன் எப்போதுமே உங்களுக்கு உற்ற நண்பனாக இருக்கும் என்பதை உங்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறோம். வானிலை மாற்றம் எதிர்பாராத சமயத்தில் நிகழும். எப்போது வேண்டுமானாலும் உங்கள் சருமம் புறஊதாக் கதிர் Bயினால் (UVB) பாதிப்படையலாம். எனவே, சருமப் பாதிப்பிலிருந்தும், சரும முதிர்வு அறிகுறிகளையும் ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்துவதற்கு, அதிகளவு சூரிய வெப்பக் கதிர்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள எப்போதும் SPFஐ சருமத்தின் தடவிக் கொண்டு வெளியில் செல்லுங்கள்.

 

இறந்த செல்களை நீக்கி பொலிவை மீண்டும் பெறவும்.

முகத்தை சுத்தமாகவும், எண்ணெய் வடியாமலும் வைத்துக் கொள்ளுங்கள்

இருண்ட வானிலையானது உங்கள் சருமத்தையும் இருண்டுப் போகச் செய்து விடும். உங்கள் சருமம் ஈரப்பதத்தை இழந்து விடுவதால், உங்கள் சருமம் தன்னுடைய இயற்கையானப் பொலிவை இழந்து விடுகின்றது. இறந்த சருமங்கள், அழுக்குகள் மற்றும் சீபச்சுரப்பு (ஒருவித எண்ணெய்ச் சுரப்பி மெழுகு) போன்றவற்றை சருமத்திலிருந்து அகற்றி, ஆரோக்கியமான மற்றும் இயற்கையான பொலிவைப் பெற வழிவகுத்துக் கொள்ளவும்.

 

முகத்தை சுத்தமாகவும், எண்ணெய் வடியாமலும் வைத்துக் கொள்ளுங்கள்

முகத்தை சுத்தமாகவும், எண்ணெய் வடியாமலும் வைத்துக் கொள்ளுங்கள்

காற்றிலுள்ள மிதமிஞ்சிய ஈரப்பதத்தினால், மழைக்காலத்தில் உங்கள் சருமத்தில் அதிகமான எண்ணெய் சுரக்கும். இது சருமத் துவாரங்களை அடைக்கக்கூடிய சீபச்சுரப்புகளை (ஒருவித எண்ணெய்ச் சுரப்பி மெழுகு) சுரப்பதால், முகப்பரு, ப்ளாக்ஹெட்ஸ் மற்றும் அதைவிட அதிக பாதிப்புகளை விளைவிக்கும். நுரையுள்ள ஃபேஸ் வாஷ்களினால் ஒரு நாளைக்கு 2-3 முறையாவது உங்கள் முகத்தை நன்றாக சுத்தம் செய்த பின், வெதுவெதுப்பான தண்ணீரினால் நன்றாக அலச வேண்டும்.

Kayal Thanigasalam

Written by

Author at BeBeautiful.
643 views

Shop This Story

Looking for something else