புதிய பருவத்திற்கேற்ற புதிய டிரெண்ட்கள். அழகு மற்றும் ஃபேஷன் டிரெண்டுகளினால் நிறைந்து காணப்படும் இந்த குளிர்காலக் கொண்டாட்டங்களுக்கு நன்றி சொல்லும் அதே நேரத்தில், இந்த பருவத்தில் எந்தளவுக்கு சருமத்திற்கு நீர்ச்சத்து குறைபாடும், பொலிவிழப்பும் இந்த சரும டிரெண்டுகளால் ஏற்படுகிறது என்பதைப் பற்றி நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்த பருவகாலம் முழுவதும் நிகழ்ச்சிகள் மற்றும் விழாக் கொண்டாடங்களினால் நீங்கள் மிகவும் பிஸியாக இருக்கப்போவதால், இந்த குளிர்காலத்தில் உங்களுடைய சருமத்தை நல்ல ஆரோக்கியத்துடன் வைத்திருக்க உங்களுக்கு உதவுவதற்காக, 5 சருமப்பராமரிப்பு டிரெண்டுகளை இங்கே வழங்கியுள்ளோம்.

 

 

01. ஃபேஸ் ஆயில்

01. ஃபேஸ் ஆயில்

எப்போதுமே குறிப்பாக குளிர்காலத்தில் ஃபேஸ் ஆயில்கள் தங்களுடைய புகழை நெடுங்காலமாக பெற்றுக் கொண்டு வருகின்றன.   இந்த பருவத்தில் மற்றும் சருமத்திற்கு பாதிக்கு பொலிவிழப்பு மற்றும் கவிர்ச்சியின்மையை எதிர்த்துப் போராடுவதற்கான முக்கிய படிகளில் ஒன்றாக இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. வறண்ட மற்றும் குளிர்ந்த குளிர்கால காற்று அடிக்கடி நீர்ச்சத்து குறைபாட்டை ஏற்படுத்துவதுடன், சருமத்திற்கு ஈரப்பதத்தை தக்கவைக்கும் பாதுகாப்பு அரணையும் சேதப்படுத்தும். குறிப்பாக ஒமேகா கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்ட்டிஆக்ஸிடென்ட்களில் ஃபேஸ் ஆயில் நிறைந்துள்ளன. குறிப்பாக சருமத்தை சேதத்திலிருந்து பாதுகாக்கவும், சருமத்தை போஷிக்கவும், ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகின்றன.

 

02. LED தொழில்நுட்பம்

02. LED தொழில்நுட்பம்

முகப்பரு, பொலிவிழப்பு மற்றும் மெல்லிய வரிகள் போன்ற  சருமப் பிரச்னைகளை குணப்படுத்துவதற்கு ஒரு பிரபலமான கைவத்தியமானது தான் LED தொழில்நுட்பமாகும். நீல மற்றும் சிவப்பு ஒளியின் அலைநீளங்களை LED மாஸ்க்குகள் புலப்படச் செய்கின்றன. நீல ஒளி பாக்டீரியாவை குறிவைத்து,  முகப்பருவுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில், சிவப்பு ஒளி ஆழமாக ஊடுருவிச் செல்லவும், பொதுவாக கொலாஜன் அதிகரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது,  மேலும், இது வயது முதிர்ச்சி அறிகுறிகளைத் மறையச் செய்வதற்கு இது சிறப்பாக செயல்படுகிறது.  மேற்பூச்சு தோல் பராமரிப்பு போலல்லாமல், முகமூடிகளின் ஒளி தோலில் ஆழமாக ஊடுருவி, மற்ற சருமப் பாதுகாப்பு தயாரிப்புக்களைப் போலல்லாமல், இது சருமத்திற்குள் ஊடுருவிச் சென்று பாக்டீரியாக்கள் சருமத்தின் மேற்பரப்பில் பரவுவதற்குமுன் அவற்றை அழித்து விடும்.  மேலும் முகத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, ஆப்பிள் போலவும், ஆரோக்கியமாகவும் இருக்கச் செய்யும். உங்களைப் பற்றி எங்களுக்குத் தெரியாது, ஆனாலும்,  நாங்கள் நிச்சயமாக இதை உடனடியாக முயற்சி செய்து பார்க்கிறோம்

 

03. குறைந்தபட்ச சருமப் பாதுகாப்பு

03. குறைந்தபட்ச சருமப் பாதுகாப்பு

இத்தகைய டிரெண்ட் இயற்கையான சரும அமைப்பை பெறுவதற்காகவும், எந்தவகையான சருமப் பிரச்னைகளையும் நீங்களே சமாளிப்பதற்கான எளிமையான மற்றும் சிறந்த பலனைத் தரக் கூடியை சருமப் பராமரிப்பு வழக்கங்களை பின்பற்றக் கூடியதாகும். உங்களுடைய சரும வகை மற்றும் பிரச்னைகளுக்கேற்ப செயல்படக்கூடிய குறைந்தளவு மற்றும் திறன்வாய்ந்த தயாரிப்புகளை பயன்படுத்துவதாகும். குளிர்காலத்திற்காக சருமப் பராமரிப்பு பொருட்களை வாங்கி வைத்துக் கொள்வதற்கு முன் அவை எந்தளவுக்கு உங்களுடைய சருமத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்பதைப் பற்றி ஒரு சில வினாடிகள் யோசன செய்யுங்கள்.  இத்தகைய டிரெண்டுகளை குறைவாக பயன்படுத்தவும்.

 

04. மனஅழுத்தமற்ற சருமப்பராமரிப்பு

04. மனஅழுத்தமற்ற சருமப்பராமரிப்பு

பெரும் தொற்றின் மற்றும் வீட்டிருந்தே பணி செய்ய வேண்டிய நிலை  போன்ற காரணத்தால்,  மனஅழுத்தம் தவிர்க்க முடியாததாகவும், வாழ்க்கையின் ஒரு பகுதியில் அதைப் பற்றி நினைக்க  முடியாமலும் இருக்க வேண்டியுள்ளது.  எனவே, முன்பு எப்போதுமில்லாத அளவிற்கு சுயப்பராமரிப்பு தேவைகள் இப்போதும் மிகவும் அத்தியாவசியமாகிறது. தற்போதைய டிரெண்டும் அதை நோக்கியே செல்கிறது.  இவை உங்களுடைய மனஅழுத்தத்தை போக்கி, உங்கள் சருமத்திற்கு பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகிறது.  இதற்காக,  Pond’s Hydrating Sheet Mask With Vitamin B3 And 100% Natural Coconut Waterஐ பரிந்துரைக்கிறோம். ஏனெனில், இது சருமத்தின் நீர்ச்சத்தை அதிகரிப்பதுடன், கொழுகொழுவென்றும், அழகாகவும் வைத்திருக்கச் செய்யும்.  இத்தகைய ஷீட் மாஸ்க்கைப் பூசிக் கொண்டு, 15-30 நிமிடங்களை வரை அப்படியை விட்டுவிடுங்கள். நீங்கள் நன்றாக இருப்பதாக உணர்வது மட்டுமல்லாமல், உஙகள் சருமமும் பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கும்.

 

05. சப்ளிமெண்ட்ஸ்கள்

05. சப்ளிமெண்ட்ஸ்கள்

மில்லேனியல்ஸ் மற்றும் குறிப்பாக ஜென் Z போன்றவற்றில் மிக ஆர்வமாக அனைத்தையும் விரைவாக சரி செய்வதற்கு இந்த சப்ளிமெண்ட்கள் புதிய நிறைவைத் தரும். சருமம் தொடர்பான எந்தவகை பிரச்னைகளாக இருந்தாலும் சப்ளிமெண்ட்கள் மிகவும் சிறப்பாக சமாளித்து செயல்படும்.  நிச்சயமாக, ஒரு சரும நிபுணரிடம் காண்பித்து பரிசோதனை மேற்கொள்ளுங்கள்.  அவருடைய ஒப்புதலுக்குப் பின் நீங்கள்  எதை வேண்டுமானாலும் உட்கொள்ளலாம்.