உங்களிடம் சிலவிஷயத்தைக் கேட்கிறேன். உங்கள் உதடுகள் சூட்டினால் உலர்ந்துவிடும். அதற்கு உடனடியாக சிறிது ஈரப்பதம் வேண்டும். அப்போது உங்கள் கைவசம் லிப் பாம். நீங்கள் என்ன செய்ய செய்வீர்கள்? உடனே நாக்கால் நக்குவீர்கள் அப்படித்தானே? சரி, சாதாரணமாக அனைவரும் செய்யக்கூடியவைதான். ஆனால், உங்கள் உதடு உலர்வது மற்றும் வெடிப்பது தொடர்ந்து கொண்டேயிருந்தால், அதற்கு உங்களுக்கு இருக்கும் உதட்டை நக்கும் பழக்கமே காரணமாகும். உங்கள் உதட்டை நீங்கள் நக்குவதால் ஏற்படும் பாதிப்புகள், அவற்றை எப்படி நிறுத்துவது, மேலும் எப்போதும் உதட்டை எப்படி ஈரப்பதத்துடனே வைத்திருப்பது என்பதைப் பற்றி உங்களுக்கு கூறுகிறோம்.

 

நீங்கள் நக்குவதால் உங்கள் உதட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன?

நீங்கள் நக்குவதால் உங்கள் உதட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன?

உங்கள் உதட்டை நக்குவதால் அவற்றை ஈரப்பதத்துடனும், அதோடு சீராகவும், வெடிப்புகளிலில்லாமலும் வைத்திருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கின்றீர்கள். ஆனால் உண்மையில், அது மேலும் உதட்டை உலர்ந்து போகச் செய்யும். உங்கள் வாழ்க்கை முழுதும் பொய்யான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். அதுமட்டுமல்லாமல், இந்தப் பழக்கம் மற்றும் வறண்ட உதடுகளால் லிப் லிக்கர்ஸ் டெர்மாடிஸ் என்றழைக்கப்படுகின்ற நாட்பட்ட நோய் ஏற்படக் காரணமாகின்றது. உங்கள் உதடுகளை உமிழிநீர் ஈரப்படுத்தினாலும், விரைவில் அது ஆவியாகி விடும். அதனால், அது முன்பைவிட மிகவும் மோசமாக வறண்டுவிடும். உமிழ்நீரில் உணவை செரிமானம் செய்யக்கூடிய என்சைம்களை கொண்டுள்ளதால், உங்களுடைய உதட்டு சருமத்தை அரித்து விட்டு, உதடுகளை வறண்டுப் போகச் செய்யும்.

 

அதற்கு நீங்கள செய்ய வேண்டியது என்ன

அதற்கு நீங்கள செய்ய வேண்டியது என்ன

உலர்ந்த உதடுகளை நக்குவதால், அது மேலும் மோசமான நிலைக்குத் தள்ளப்படும். உதடுகளை ஈரத்துடன் வைத்திருப்பதற்காக ஏற்படுத்திக் கொண்ட இந்தப் பழக்கத்தை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். ஒரு லிப் பாம் எப்போதும் கைவசம் வைத்திருங்கள். எப்பொழுதெல்லாம் உதட்டை நக்க வேண்டும் என்று எண்ணம் தோன்றுகிறதோ, அப்பொழுதெல்லாம், இதை உங்கள் வறண்ட மற்றும் வெடிப்பு ஏற்பட்ட உதட்டின்மீது தடவிக் கொள்ளுங்கள். நிறைய தண்ணீர் குடிப்பது மிகப் பெரிய உதவியாக இருக்கும். ஹைட்ரேடட் உடல் என்றால் ஹைட்ரேடட் சருமம் என்பதாகும். உங்களுடைய சருமம் மிகவும் மென்மையானதாக இருக்கும்பட்சத்தில், நீங்கள் போதுமான தண்ணீர் அருந்தவில்லையெனில், அவை உங்கள் உதடுகளை மிக விரைவாக உலர்ந்துப் போகச் செய்யும். எனவே, அவற்றை ஆரோக்கியமாகவும், ஈரப்பதத்தடனும் வைத்திருக்க வேண்டும். உங்கள் உதடுகள் வறண்டு போகிவில்லையெனில், உதடுகளை நக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு ஏற்படாது.