வறண்ட உதடுகளை நன்கு பராமரிப்பதற்கான சிறந்த வழக்கங்களை பரிந்துரைக்கிறது இந்தக் கட்டுரை.

Written by Kayal ThanigasalamNov 30, 2023
வறண்ட உதடுகளை நன்கு பராமரிப்பதற்கான சிறந்த வழக்கங்களை பரிந்துரைக்கிறது இந்தக் கட்டுரை.

மேக்கப் என வரும் போது அடிப்படைகளைத் தவற விடக்கூடாது. அந்த அடிப்படைகள் சரும பராமரிப்பில் துவங்குகின்றன. பெரும்பாலான பெண்களுக்கு உதடுகளில் சுருக்கங்களும் கோடுகளும் இருப்பது சகஜம். ஆனால் உதடுகள் வறண்டிருந்தால், நீர்ச் சத்து இல்லாமலிருந்தால் லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டால்கூட எந்த மேஜிக்கும் நடக்காது.

அதனால்தான் தொடர்ச்சியாக நல்ல லிப் கேர் பின்பற்றுவது மூலம் உதடுகளை 24 மணிநேரமும் மென்மையாக நீர்ச் சத்துடன் வைத்திருக்க வேண்டும். இங்கே கொடுத்திருக்கும் சிம்பிளான காரியங்களை நீங்கள் செய்தாலே போதும். வறண்ட, பிளவுகள் கொண்ட உதடுகளுக்கு டாட்டா பை பை சொல்லிவிடலாம். நீர்ச்சத்து கொடுப்பதற்கு, எக்ஸ்ஃபாலியேட் செய்வதற்கு ஏற்ற வீட்டிலேயே செய்யக்கூடிய ஸ்கிரப்களை இங்கே கொடுத்திருக்கிறோம். நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக...

 

1. உதடுகளை சுத்தமாக, நீர்ச் சத்துடன் வைத்திருக்க வேண்டும்

4. க்ரீம் லிப்ஸ்டிக்


மீண்டும் சொல்கிறோம். தினமும் போதிய அளவு தண்ணீர் குடியுங்கள். இதுதான் நீர்ச் சத்தை சமநிலையில் வைத்திருக்கும். உதடுகளை வாயால் ஈரப்படுத்தும் போது உங்களது லிப்ஸ் வறண்டு போகிறது, போதிய நீர்ச் சத்து இல்லை என நீங்கள் உணர்ந்துகொள்ளலாம். போதுமான இடைவெளியில் போதுமான அளவில் தண்ணீர் குடிப்பதே தீர்வு.

உதடுகளை சுத்தமாக வைத்திருப்பது முக்கியம். உதடுகளில் படிந்திருந்திருக்கும் தூசியையும் மேக்கப் பொருட்களின் படிமங்களையும் தினமும் ஒரு முறை நன்கு துடைத்து நீக்க வேண்டும். Pond’s Vitamin Micellar Water – Aloe vera போன்ற மிசெல்லர் வாட்டர் அதற்கு சிறந்தது. காட்டன் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் மிசெலர் வாட்டர் ஊற்றுங்கள். அதை வைத்து உதடுகளை மென்மையாக துடைத்து எடுக்க வேண்டும். இது தூசியை நீக்குவதோடு உதடுகளை மென்மையாக, நீர்ச் சத்துடன் வைத்திருக்கும். இதிலுள்ள அலோவின் நன்மை இது.

 

 

 

2. வாரம் ஒரு முறை எக்ஸ்ஃபாலியேட் செய்துகொள்ள வேண்டும்

4. க்ரீம் லிப்ஸ்டிக்


லிப் கேர் என வரும் போது எக்ஸ்ஃபாலியேட் செய்யாமல் இருக்க முடியாது. உதடுகளில் ஸ்கின் உறிந்து வருவது போல் இருப்பதைத் தடுக்க இது சிறந்த வழி. வீட்டில் நீங்களே ஸ்கிரப் மூலம் எக்ஸ்ஃபாலியேட் செய்வதற்கு இது சிறந்த வழி.

ஒரு பாத்திரத்தில் ஒரு டீ ஸ்பூன் Vaseline Original Pure Skin Jelly எடுத்துக்கொள்ளுங்கள். அதோடு ஒரு டீ ஸ்பூன் சுகர் சேருங்கள். நன்கு கலக்குங்கள். லிப் ஸ்கிரப் ரெடி. அதில் கொஞ்சம் விரலில் எடுத்து உதடுகளில் மென்மையாக மசாஜ் செய்யவும். உதடுகளில் நீர்ச் சத்து நிறைந்திருக்க வேஸ்லின் உதவும். சன் டேமேஜ் ஏற்படாமல் சுகர் காக்கும். கூடுதலாக சுற்றுச் சூழலின் காரணமாக ஏற்படும் நச்சுக்களும் நீக்கப்படும். இதை சிறிய பாத்திரத்தில் வைத்திருந்து வாரம் 2-3 முறை பயன்படுத்தலாம்.

 

 

3. எஸ்.பி.எஃப் கொண்ட லிப் பாம்

4. க்ரீம் லிப்ஸ்டிக்


எக்ஸ்ஃபாலியேட் செய்த பிறகு லிப் பாம் அப்ளை செய்ய மறக்கவே கூடாது. ஏனென்றால் ஸ்கிரப் செய்யும் போது சிராய்ப்புகள் ஏற்படும். Lakme Lip Love Chapstick SPF 15 - Insta Pink போன்ற லிப் பாம் பயன்படுத்தலாம். உதடுகளின் மீது நன்றாக அப்ளை செய்ய வேண்டும். இதிலுள்ள எஸ்.பி.எஃப் 15 (சூரிய பாதுகாப்பு தரும் பொருள்) உதடுகளின் மீது மாய்ஸ்சுரைஸ் ஃபார்முலாவை அப்ளை செய்யும். இதனால் உதடுகள் நீர்ச் சத்துடன் இருக்கும். 22 மணி நேரம் வரை.

 

 

4. க்ரீம் லிப்ஸ்டிக்

4. க்ரீம் லிப்ஸ்டிக்

மேட் லிப்ஸ்டிக் மீது பலருக்கு பிரியம் இருப்பது புரிகிறது. ஆனால் அதனால் உதடுகள் வறண்டு போகலாம். நீர்ச் சத்து குறையலாம். அதனால் உதடுகள் தெரியும் பிசுறுகள் நன்றாக இருக்காது. அதனால் Lakmé 9 To 5 Primer + Crème Lip Color – Pink Bell CP8 க்ரீமியான லிப்ஸிடிக் பயன்படுத்தலாம். இதிலேயே ப்ரைமர், விட்டமின் இ, ஷியா பட்டரும் உள்ளது. இதனால் உதட்டிற்கு நல்ல நீர்ச் சத்து கிடைப்பதுடன் மென்மையும் கிடைக்கும். உங்களுக்கு இது நிச்சயமாகப் பிடிக்கும்.

Kayal Thanigasalam

Written by

Author at BeBeautiful.
672 views

Shop This Story

Looking for something else