சூரியனின் வெப்ப கதிர்களிலிருந்து உங்கள் சருமத்தினை வருடம் முழுதும் காக்க நிச்சயம் பாதுகாப்பு தேவை மற்றும் இது ஒரு பெரும் ரகசியமும் கிடையாது. ஆனால் சரியான சன்ஸ்க்ரீனை தேர்வு செய்வதற்கு நாம் ஒரு சில விஷயங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும். பெரும்பாலானவர்களுக்கு சன்ஸ்க்ரீனின் எஸ்.பி.எப் பாக்டர் மற்றும் அதன் அமைப்பு, நீர்புகாத்தன்மை பற்றிய குழப்பம் ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் இப்பொழுது உங்களுக்கு அந்த குழப்பம் இருக்காது ஏனெனில் சன்ஸ்க்ரீனை வாங்குவதற்கு முன்பு இந்த மூன்று விஷயங்களை நீங்கள் தெரிந்து வைத்து கொண்டிருந்தால் போதுமானது.
- 30ல் இருந்து 50க்குள் இருக்கும் எஸ்.பி.எஃப் பாக்டர்
- கோமெடோஜெனிக் அல்லாத பார்முலா
- சன்ஸ்க்ரீனில் உள்ள மூலப்பொருட்கள்
30ல் இருந்து 50க்குள் இருக்கும் எஸ்.பி.எஃப் பாக்டர்

யூ.வி.ஏ மற்றும் யூ.வி.பி கதிர்கள் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடியது மற்றும் அது கான்சரையும் ஏற்படுத்தலாம். யூ.வி.பி சருமத்தின் நிறத்தை பாதித்து எரிச்சலை ஏற்படுத்தும், மற்றும் யூ.வி.ஏ சருமத்தை முதிர்ச்சியடைய செய்யும். அதனால் சன்ஸ்க்ரீன் வாங்கும் போது எஸ்.பி.எப் பாக்டர் 30ல் உள்ளதா என்பதை பாருங்கள். ஏனெனில் அது யூ.வி.பி கதிர்களில் இருந்து 97% பாதுகாப்பை தரும். நெப்பமான சருமத்தினை உடையவர்கள் அதிக எஸ்.பி.எப் பாக்டர் உள்ள க்ரீமை பயன்படுத்த வேண்டாம். எந்த ஒரு சன்ஸ்க்ரீனும் 100 சதவீத பாதுகாப்பை தராது. உங்களுடைய சருமம் எப்படிப்பட்டதாக இருந்தாலும், 30ல் இருந்து 50க்குள் இருக்கும் எஸ்.பி.எப் பாக்டர் உடைய க்ரீமை பயன்படுத்துவது சிறந்தது.
கோமெடோஜெனிக் அல்லாத பார்முலா

சரும பிரச்சனைகளை தவிர்க்கவே நாம் சன்ஸ்க்ரீனை பயன்படுத்துகிறோம், ஆனால் கோமெடோஜெனிக் பார்முலா அந்த பாதிப்பை தரலாம். கோமெடோஜெனிக் அல்லாத மூலப்பொருட்களை கொண்ட சன்ஸ்க்ரீனை வாங்குங்கள், ஏனெனில் அது சரும பிரச்சனைகளை ஏற்படுத்தாது. Lakmé Sun Expert Ultra Matte SPF 50 PA+++ Gel Sunscreen கோமெடோஜெனிக் அல்லாத மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட மற்றும் அனைத்து வித சருமங்களுக்கும் பொருந்தும் சன்ஸ்க்ரீனாகும். மேலும் இது சருமபிரச்சினைகளையும் ஏற்படுத்தாது.
சன்ஸ்க்ரீனில் உள்ள மூலப்பொருட்கள்

லேபிளில் உள்ள அனைத்து மூலப்பொருட்களையும் படித்து அதன் பயன்களையும் தெரிந்து கொள்வது சற்று கடினமானது தான். ஆனால் சில மூலப்பொருட்களை பற்றி தெரிந்து கொள்வது உங்களுக்கு நிச்சயம் பயனளிக்கும். ஜின்க் ஆக்சைட், விட்டமின்கள் மற்றும் குகும்பேர் எக்ஸ்டராக்ட் சருமத்தினை பாதுகாத்து மற்றும் அலர்ஜிகளையும் தவிர்க்கும். விட்டமின் B3 அடங்கிய Lakme Sun Expert Ultra Matte SPF 50 PA+++ Lotion யூ.வி.ஏ கதிர்களில் இருந்து நம் சருமத்தை பாதுகாக்கும்.
Written by Kayal Thanigasalam on Feb 18, 2022
Author at BeBeautiful.