உங்கள் முகத்திலுள்ள முடிகள் மற்றும் புருவத்திலுள்ள முடிக்களை அகற்றும்போது ஏற்படும் வலிகளைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். முடியை பிடுங்கி எடுப்பதற்கும், நீக்குவதற்கும் சில நிமிடங்கள் தேவைப்படுவதால், உங்களுக்கு சாதாரண சருமமாக இருக்குமாயின் வலி மற்றும் குத்தல்வலி போன்றவை நீண்ட நிமிடங்கள் நீடிக்கலாம். முகச்சருமத்தில் ஏற்படும் கையாளுவது மிகவும் கடினமான வேலையாகும். வேக்ஸிங் அல்லது த்ரெட்டிங் செய்து கொண்ட பிறகு, உங்கள் முகச் சருமத்தில் ஏற்படும் எரிச்சலை திறமையுடன் தணிப்பதற்கு எங்களிடம் சில உதவிக்குறிப்புகள் உள்ளன.
- குறிப்பு 01: ஐஸ்
- குறிப்பு 02: கற்றாழை ஜெல்
- குறிப்பு 03: எக்ஸ்ஃபாலியேஷனைத் தவிர்க்கவும்.
- குறிப்பு 04: முகப்பரு தடுப்பு சிகிச்சைகளை தவிர்க்கவும்.
குறிப்பு 01: ஐஸ்

வேக்ஸிங் அல்லது த்ரெட்டிங் செய்து கொண்ட பிறகு, உங்கள் சரும எரிச்சலைக் குணப்படுத்துவதற்கு பாதிக்கப்பட்ட இடத்தில் ஐஸ்க் கட்டியை தடவுவது மிகவும் எளிமையான, திறன்மிக்க வழிகளில் ஒன்று. இது மிகவும் குறைந்த செலவு மற்றும் விரைவான பலனைத் தரக்கூடியதாகும். இருப்பினும், சருமத்தின் மீது நேரடியாக தடவக் கூடாது. ஐஸ்க் கட்டியை ஒரு கைக்குட்டையில் சுற்றி எரிச்சலுள்ள பகுதிகளில் மெதுவாக தேய்க்கும் போது, அந்தப் பாதிப்பிலிருந்து உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.
குறிப்பு 02: கற்றாழை ஜெல்

சருமத்தை மிருதுவாக்கும் மற்றும் குணப்படுத்தும் அற்புதத் தன்மை கற்றாழையில் உள்ளது. ஆகையால் தான், பெரும்பாலான சருமப் பராமரிப்பு பொருட்களில் இந்த இயற்கைப் பொருள் சேர்ப்பதற்குக் காரணம். உங்கள் வீட்டில் கற்றாழைச் செடி இல்லையெனில், உங்கள் முகத்தின் எரிச்சலைத் தணிப்பதற்கு Lakme 9 to 5 Naturale Aloe Aqua Gel தடவவும். சுத்தமான கற்றாழைச் சாறு சருமத்திற்குள் ஊடுவிச் சென்று, வலியையும், சிவப்படைதலையும் உடனடியாகக் குறைக்கும்.
குறிப்பு 03: எக்ஸ்ஃபாலியேஷனைத் தவிர்க்கவும்.

இதைச் செய்வது புத்திசாலித்தனமானச் செயலல்ல. உங்கள் முகத்திற்கு வேக்ஸிங் அல்லது த்ரெட்டிங் செய்து கொண்ட பிறகு, சில நாட்கள் வரை எக்ஸ்ஃபாலியேட்டிங் செய்து கொள்வதை தவிருங்கள். மேலும், சருமத்திற்கு எரிச்சலைத் தரக்கூடிய விஷயங்களை செய்வதன் விளைவாக தோல் உரிதல், சிவத்தல் போன்ற தேவைற்ற சருமப் பிரச்னைகள் ஏற்படும். உங்கள் சருமம் முழுமையாக குணமடையும் வரை காத்திருந்த பிறகு எக்ஸ்ஃபாலியேட்டர்கள் செய்து கொள்ளத் தொடங்குங்கள்.
குறிப்பு 04: முகப்பரு தடுப்பு சிகிச்சைகளை தவிர்க்கவும்.

நீங்கள் பயன்படுத்தும் பொருட்களினால் கூட, உங்கள் முகத்தில் எண்ணெய் வடிதல் அல்லது முகப்பருவால் பாதிக்கப்படைவதற்கு வாய்ப்புகள் உண்டு. இத்தகைய தயாரிப்புகளில் பெனோஸைல் பெராக்ஸைடு போன்ற உட்பொருட்கள் பயன்படுத்துப்படுவதால், அவை சருமத்திற்கு மேலும் அரிப்பை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் சில சந்தரப்பங்களில் அவை எரிச்சலையும் உண்டாக்கும். சில நாட்களுக்கு முகப்பரு தடுப்பு சிகிச்சையை நிறுத்தி வைக்கவும், உங்களுடைய சருமம் நன்றாக குணமடைந்த பின்பு மீண்டும் வழக்கமாக செய்பவைகளை செய்யத் தொடங்கலாம் என்றும் நாங்கள் பரிந்துரைக்கிறோம்.
Written by Kayal Thanigasalam on Jun 11, 2021
Author at BeBeautiful.