ஒவ்வொரு மாதமும் சில வேதனையான நாட்களைக் கடந்து செல்வது இயற்கையின் நீதி. இந்த வலி கொடூரமாக இல்லாவிட்டாலும், பெண்களின் அழகு சிகிச்சைகளில் பெரும்பாலானவை மிகுந்த வேதனையை தாங்கிக்கொள்ளும் வகையில்தான் இருக்கின்றன. இது, பெண்களின் புருவங்களிலிருந்து முடியைப் பறித்தல் அல்லது பிளாக்ஹெட்ஸ் பிரித்தெடுத்தல் என நீண்டு பட்டியில் உண்டு. அதற்கு முடிவே இல்லை. இருப்பினும், சில பெண்கள் வேக்ஸிங் வழிமுறையை வேதனையாகக் காண்கிறார்கள், எனவே அதை முற்றிலும் தவிர்க்கவும், க்ளீன் ஷேவை முழுமையாக நம்பியிருக்கிறார்கள். இதில் இருந்து விடுபட, 5 உத்திகளை கண்டுபிடித்துள்ளோம். இந்த உத்தியைப் பயன்படுத்தி வலியில் இருந்து விடைபெற்று, மென்மையான ரோமம் இல்லாத சருமத்தைப் பெறலாம் ...
 

சருமத்தை எக்ஸ்போலியட் செய்யவும்

சருமத்தை எக்ஸ்போலியட் செய்யவும்

உங்கள் ரோமங்களை அகற்ற வேக்ஸிங் பயன்படுத்துவற்கு முன்பு, வலியைக் குறைப்பதற்கான வழிமுறையைச் செய்யவும். ‘செயின்ட் இவ்ஸ் ரேசியன்ட் ஸ்கின் பிங்க் லெமன் அண்ட் ஆரஞ்சு எக்ஸ்போலியேட்டிங் பாடி வாஷ்’ பயன்படுத்தி, சருமத்தில் உள்ள இறந்த சரும செல்களைத் துடைத்துவிடலாம். இதன் மூலம் கடினமான ரோமங்களின் வேர்களை வெளியேறிவிடும். இதனால் வேக்ஸிங் பயன்படுத்தும்போது வலி குறையும்.

 

ஷேவ் செய்ய வேண்டாம்

ஷேவ் செய்ய வேண்டாம்

நீங்கள் வேக்ஸிங் செய்வதற்கு முன்பு, இடைப்பட்ட காலத்தில் ஷேவ் செய்ய வேண்டாம். இடையில் ஷேவ் செய்வதன் மூலம் குறுகிய ரோமங்களை அகற்ற நீங்கள் ஆசைப்படலாம். இருப்பினும், இது உங்கள் ரோமங்களின் இயற்கையான வளர்ச்சியின் சுழற்சியைத் தொந்தரவு செய்வதோடு, வேக்ஸிங் பயன்படுத்தும்போது மிகவும் வேதனையடையச் செய்வதால் அதைத் தவிர்க்குமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். ரோமங்களை அகற்றுவதற்கு முன்பு உங்கள் சரும ரோமங்கள் குறைந்தது 1/4 அங்குலமாவது வளர அனுமதிக்கவும்.

 

தொழில்முறை வல்லுநரிடம் செல்லுங்கள்

தொழில்முறை வல்லுநரிடம் செல்லுங்கள்

வேக்ஸின் பயன்படுத்துவது எளிதான வேலையாகத் தோன்றலாம். இது மெழுகு பூசி, அதன் மீது ஒரு சிறிய துணியை அழுத்தி ரோமங்களின் வளர்ச்சிக்கு எதிராக இழுப்பது போன்றது. உங்களுக்குத் தெரியாதது இங்கே, அனைவரின் சரும ரோமங்களும் ஒரே திசையில் வளரவில்லை, மேலும் சிறந்த முடிவுகளைப் பெறுவதற்கு வெப்பநிலை சரியாக இருக்க வேண்டும். எனவே, காயங்கள், சிவப்பு தடிப்புகள் மற்றும் பிறவற்றைத் தவிர்க்க லக்மே சலூன் வல்லுநர் ஓருவரை பார்வையிடுவது நல்லது.

 

குளிக்கும் சிகிச்சை

குளிக்கும் சிகிச்சை

உங்களுடைய வேக்ஸிங் அமர்வுக்கு முன், ஒரு சூடான நீரில் குளிப்பது சிறந்த பலனைத்தரும். இதன் மூலம் சரும துளைகள் திறந்து, ரோமங்களை மென்மையாக்கும். நீங்கள் எப்போதும் வேக்ஸிங் செய்ய விரும்பினாலும் குளிர்ந்த நீரில் குளிப்பதைத் தவிர்க்கவும், ஏனென்றால் இது உங்கள் துளைகள் சுருங்கி அதிக வலியை ஏற்படுத்தும்.

 

மாதாந்திர சுழற்சியைக் கவனியுங்கள்

மாதாந்திர சுழற்சியைக் கவனியுங்கள்

ஒவ்வொரு முறை வேக்ஸிங் செய்வதற்கு முன்பும், உங்கள் கால சுழற்சியை கவனத்தில் கொள்ளுங்கள். மாதத்தின் சரியான சுழற்சி நேரத்திற்கு குறைவான நாட்களில் வேக்ஸிங் செய்ய விரும்பினால் வலி அதிகமாக இருக்கும் மாத சுழற்சி நேரம் வந்ததற்கு பின்பு வேக்ஸிங் பயன்படுத்துவது நல்லது. நிறைய வித்தியாசத்தை ஏற்படுத்தும்.