உண்மையை ஒப்புக்கொள்வோம்: பரபரப்பான இந்த நவீன வாழ்க்கை முறை மன அழுத்தம் ஏற்படுத்தக்கூடியதுதான். அது மனதையும் உடலையும் பாதிப்பதோடு நிற்பதில்லை. உங்கள் சருமத்தையும் பாதிக்கும். ஃப்ரீ ரேடிகல்ஸ், சுற்றுச் சூழல் நெருக்கடிகளோடு மன அழுத்தமும் சேர்ந்துகொண்டால் சரும சோர்வாகக் காணப்படும். பொலிவு காணாமல் போகும். இதைப் பொதுவாக சரும சோர்வு என அழைப்பார்கள்.

உங்களுக்கு சரும சோர்வு இருக்கிறதா என்பதைக் கண்டறியவும் அதற்கு தீர்வு காணவும் உதவும் டிப்ஸ் இதோ.

what is skin fatigue

சரும சோர்வின் அறிகுறிகள் என்ன?

சரும சோர்வு இருக்கிறதா என்பதை கண்ணால் பார்த்தே கண்டுபிடித்துவிடலாம். ஆனால் அதை நாம் பொதுவாக கண்டும் காணாமல் விட்டுவிடுவோம். சரும துளைகள் பெரிதாக இருப்பது, சருமத்தின் டல்லான தோற்றம், ஆங்காங்கே சருமம் வறண்டு காணப்படுவது, முன்கூட்டியே தெரியும் கோடுகள், சுருக்கங்கள், வீக்கம், கரு வளையம்… இப்படிப் பல…

இது போன்ற பிரச்சனைகளை சரி செய்வதற்கான சரியான ஸ்கின்கேர் பொருட்கள் பயன்படுத்தினால்கூட பல சமயங்களில் கண்ணில் தெரியும் மாற்றங்கள் நிகழ்வதில்லை. உங்கள் வாழ்க்கை முறை மாற்றம் செய்ய வேண்டும் என்பதை உணர்த்தும் தருணங்கள் இவை. இதன் மூலம் ஸ்கின்கேர் பொருட்கள் உங்கள் சருமத்திற்கு வழங்கும் பலனை பலமடங்காக்க முடியும். அதை எவ்வாறு செய்வது என இங்கே வழிகாட்டுகிறோம்.

 

01 மன அழுத்தத்தை சமாளிக்க முயற்சி செய்யவும்

01 மன அழுத்தத்தை சமாளிக்க முயற்சி செய்யவும்

மன அழுத்தம் போக்கும் காரியங்களில் ஈடுபடுவது சரும சோர்வை நீக்குவதற்கு சிறந்த வழி. உடற்பயிற்சி செய்யலாம், யோகாசனம் செய்யலாம், ஓவியம் வரைவதில் ஆர்வம் உள்ள, ஓவியம் தீட்டலாம், மனதிற்குப் பிடித்தவர்களுடன் பேசுவதால் மன அழுத்தம் குறையும் என்றால் அதையும் செய்யலாம். இது மன அழுத்தத்தை போக்குவதோடு, மனதையும் உடலையும் ரிலாக்ஸாக வைக்கும்.

 

02. போதுமான தூக்கம்

02. போதுமான தூக்கம்

இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் முதலில் அடிபடுவது தூக்கம்தான். இதனால் கண்ணைச் சுற்றி கரு வளையம் ஏற்படுவதோடு, சருமம் பொலிவை இழக்கும். அதைத் தடுக்க வேண்டும் என்றால் தினமும் 7 முதல் 8 மணி நேரம் வரை தூங்க வேண்டும். இது உடல் தன்னைத் தானே ரிப்பேர் செய்யவும் புதுப்பித்துக்கொள்ளவும் உதவும்.

 

03. அதிக தண்ணீர் குடிக்கலாமே

03. அதிக தண்ணீர் குடிக்கலாமே

போதுமான அளவு தண்ணீர் குடிக்காமலிருப்பது சரும பிரச்சனைகளுக்கு அடிப்படை காரணம் என நிரூபணம் ஆகியிருக்கிறது. ஒவ்வொரு நாளும் எட்டு பெரிய டம்ப்ளர் தண்ணீர் குடிப்பது அவசியம். தினசரி தண்ணீர் தேவையை பூர்த்தி செய்தால் உங்கள் உடலும் சருமமும் எவ்வளவு ஹெல்தியாக இருக்கும் என்பதை உணர்ந்தால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.

 

04. ஆரோக்கியமற்ற உணவு வேண்டாமே

04. ஆரோக்கியமற்ற உணவு வேண்டாமே

உடலுக்குள் என்ன செல்கிறதோ அது சருமத்தின் வெளிப்புற தோற்றத்தின் மீது பெரிய தாக்கம் ஏற்படுத்துகிறது. அதனால் சத்தான உணவு எடுத்துக் கொள்ளுங்கள், சர்க்கரையையும் வறுத்த உணவுகளையும் முடிந்த வரை குறைவாக எடுத்துக்கொள்ளுங்கள்.