மிகவும் பயன்வாய்ந்த ஆனால் அவை அதிகம் அறியப்படாத காலண்டுலா ஆயில், சாமந்தி பூக்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இவை பலரும் கவனிக்காத அழகு கலை பலன்களை கொண்டது.

ஆனால், உண்மையான அழகு கலை ஆர்வலராக,, காலண்டுலா ஆயிலின் நற்குணங்களை உங்களுக்காக தொகுத்து அளிக்கிறோம்: 

·     ஆன்டிசெப்டிக் தன்மை கொண்டது

·     சென்சிட்டிவான சருமத்திற்கு ஏற்றது

·     பருக்களை குணமாக்குகிறது

·     புதிய அம்மாக்களுக்கு ஏற்றது

·     பாதுகாப்பாக ஸ்கிரப் செய்வது

·     சருமத்திற்கு நீர்த்தன்மை அளிக்கிறது

 

ஆன்டிசெப்டிக் தன்மை கொண்டது

ஆன்டிசெப்டிக் தன்மை கொண்டது

காலண்டுலா ஆயில் பாதுகாப்பானது மற்றும் மருத்துவ குணங்களை கொண்டது. இது காயங்களை ஆற்றும் தன்மை கொண்டது. காலண்டுலா ஆயில் மற்றும் ஆலோவேரா இணைந்து காயங்கள் மீது நல்ல பலன் அளிக்கின்றன.

 

சென்சிட்டிவான சருமத்திற்கு ஏற்றது

சென்சிட்டிவான சருமத்திற்கு ஏற்றது

சென்சிட்டிவான அல்லது பருக்கள் தாக்கம் கொண்ட சருமத்தை கொண்டவர்கள் உங்கள் மாஸ்குகள் மற்றும் மாய்ஸ்சரைசர்களில் காலண்டுலா ஆயிலை கலந்து, வாரம் ஒரு முறை சருமத்தின் மீது பயன்படுத்தலாம். உங்களுக்கு உலர் சருமம் இருந்தால் அது மாய்ஸ்சரைஸ் செய்கிறது. எண்ணெய் பசை மிக்க சருமம் எனில், அது ஈரப்பதத்தை தக்க வைத்து பருக்களை எதிர்க்கிறது. 

 

பருக்களை அகற்றுகிறது

பருக்களை அகற்றுகிறது

பருக்கள் மீதும் இதை குறிப்பாக பயன்படுத்தலாம்.  காலண்டுலா ஆயிலை ஆலோவேராவில் கலந்து பருக்கள் மீது தடவினால் போதும்.

 

புதிய அம்மாக்களுக்கு ஏற்றது

புதிய அம்மாக்களுக்கு ஏற்றது

காலண்டுலா எஸிமா சரும பாத்தை குணமாக்க கூடியது. எனவே குழந்தைக்கு எஸிமா சரும பாதிப்பு இருந்தால் அம்மாக்கள் இதை பயன்படுத்தலாம். காலண்டுலா ஆயில் சிசுக்களுக்கு பாதுகாப்பானது. டயாப்பர்களால் ஏற்படும் பாதிப்பை நீக்க பயன்படுத்தலாம். சிறிதளவு ஆலோவேராவுடன் சேர்த்து, பாதுக்கப்பட்ட பகுதிகளில் சில முறை தடவினால் போதும்.

 

ஸ்கிரப் செய்ய உதவும்

ஸ்கிரப் செய்ய உதவும்

இதற்கு மருத்துவ குணங்கள் இருப்பதால், பருக்கள் பாதிப்பு கொண்ட சருமத்திற்கு இது சிறந்த ஸ்கிரப்பாகும். கிரவுண்ட் காபி அல்லது ஓட்சுடன் கலந்து சருமத்தின் மீதுள்ள இறந்த செல்களை அகற்ற பயன்படுத்தலாம்.

 

சருமத்திற்கு நீர்த்தன்மை அளிக்கிறது

சருமத்திற்கு நீர்த்தன்மை அளிக்கிறது

மேம்பட்ட சருமத்திற்கு இதை பயன்படுத்தலாம். இரவில் இதை செரமாக பயன்படுத்தலாம். சரும தோற்றத்தை தூய்மையாக்கி, பருக்களை எதிர்க்கிறது. காலண்டுலா ஆயில் நீர்த்தன்மையை அதிகரித்து, சருமத்தை உறுதியாக்கி, முன்கூட்டியே வயோதிக தன்மையை போக்குகிறது.