வானம் மேகமூட்டமாக இருக்கும் போது சன் ஸ்கிரீன் பயன்படுத்தாமல் வெளியே சென்றது உண்டா. நீங்கள் மட்டுமல்ல, பலரும் அப்படித்தான் செய்கிறார்கள். சூரியன் தெரியவில்லை என்றால் சன் ஸ்கிரீன் அவசியமில்லை என்றுதான் அவ்ளோ பேர் நினைக்கிறார்கள். இப்போது தெரிந்துகொள்ளுங்கள். வானம் மேகமூட்டமாக

இருக்கும் போது சன் ஸ்கிரீன் அவசியமில்லை என்பது ஒரு முழு கற்பனை. சூரியன் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் சருமத்தில் அதன் பாதிப்பு இருக்கத்தான் செய்யும். சருமம் வயதானது போல் தெரிவது முதல் மிக மோசமான அளவில் ஸ்கின் கேன்சர் வரை அபாயம் உள்ளது. இன்னும் நம்பவில்லையா. சரியான அளவில் எஸ்.பி.எஃப் பயன்படுத்துவதற்கான மூன்று காரணங்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

 

01. மேகங்கள் யு.வி கதிர்களை முழுமையாகத் தடுப்பதில்லை

01. மேகங்கள் யு.வி கதிர்களை முழுமையாகத் தடுப்பதில்லை

மேகங்கள் 25 சதவீத யு.வி கதிர்களை மட்டுமலே தடுப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதைத் தாண்டி வரும் கதிர்கள் சருமத்திற்குள் ஊடுருவி கேன்சர் ஏற்படுத்தக்கூடும். வானம் மேகமாக இருக்கும் போது வெப்பநிலை தணிந்திருக்கும். ஆனாலும்கூட சருமத்த்தால் ஈர்க்கப்படும் யு.வி.ஏ, யு.வி.பி கதிர்களின் அளவு அதிகமாக இருக்கும்.

 

02. சூரியனால் ஏற்படும் பாதிப்பிற்கும் வெப்பநிலைக்கும் தொடர்பில்லை

02. சூரியனால் ஏற்படும் பாதிப்பிற்கும் வெப்பநிலைக்கும் தொடர்பில்லை

வெப்பநிலை குறைவாக இருக்கும் போது சருமத்தின் மீதான சூரியனின் பாதிப்பு குறைவாக நீங்கள் நினைக்கலாம். ஆனால் குளிராக இருந்தாலும் வெப்பமாக இருந்தாலும் யு.வி கதிர்களின் பாதிப்பு என்னமோ ஒன்றுதான்.

 

03. யு.வி.பி கதிர்கள் தண்ணீரிலும் நிலத்திலும் பிரதிபலிக்கும்

03. யு.வி.பி கதிர்கள் தண்ணீரிலும் நிலத்திலும் பிரதிபலிக்கும்

வானத்தில் மேகமாக இருந்தால் சன் ஸ்கிரீன் யூஸ் செய்யாமல் பீச்சில் ஜாலியாக இருக்கத் தோன்றும். குறிப்பாக ஒரு மழை நாளில் வெளியே செல்வதால் சூரியனின் பாதிப்பு ஏற்படுமா என்று நீங்கள் நினைக்கலாம். அதெல்லாம் பொய் என்பது பள்ளிக்கூடத்திலேயே படித்தது. நினைவு இல்லையா… 17 சதவீத யு.வி.பி கதிர்கள் பனி, தண்ணீர், புல், மண்ணில் பட்டு பிரதிபலிக்கிறது. இதன் மூலமாக அதன் பாதிப்பு 80 சதவீதம் அதிகரிக்கிறது. அதனால் வெளியே மழை கொட்டினால்கூட யு.வி கதிர்களின் பாதிப்பு அதிகம்தான். சன் ஸ்கிரீன் அப்ளை செய்யாமல் வெளியே செல்ல மாட்டேன் என்று நினைப்பதைத் தவிர வேறு வழி இல்லை. ஆனால் எந்த சன் ஸ்கிரீன் யூஸ் செய்வது. நாங்கள் பரிந்துரைப்பது Lakme Absolute Perfect Radiance Whitening UV Lotion SPF 50 PA++. இது குறைந்த எடை கொண்டது. யு.வி.ஏ, யு.வி.பி கதிர்களிலிருந்து உங்களை பாதுகாக்கக்கூடியது. வெள்ளைத் திட்டுக்கள் படியாது. அதோடு எஸ்.பி.எஃப் அளவை வைத்து எவ்வளவு நேரம் அந்த சன் ஸ்கிரீன் நிலைத்திருக்கும் என தீர்மானிக்க முடியும். எஸ்.பி.எஃப் 50 என்றால் சன் ஸ்கிரீன் 50 நிமிடம் தாங்கும். ஆனால் அதே நேரத்தில் சரியான அளவில் பயன்படுத்துவதும் முக்கியம். முகத்திற்கும் கழுத்திற்கும் சேர்த்து கால் டீ ஸ்பூன் அப்ளை செய்ய வேண்டும் என்று டெர்மடாலஜிட்கள் சொல்கிறார்கள். அதனால் தினந்தோறும் ஜாலியாக சன் ஸ்கிரீன் அப்ளை செய்யுங்கள்.