உடல் மற்றும் சருமத்தில் ஏற்படும் பிரச்னைகளுக்கு யோகாசனம் மூலம் தீர்வை விளக்குகின்றது இக்கட்டுரை.

Written by Kayal ThanigasalamNov 30, 2023
உடல் மற்றும் சருமத்தில் ஏற்படும் பிரச்னைகளுக்கு யோகாசனம் மூலம் தீர்வை விளக்குகின்றது இக்கட்டுரை.

உங்களைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழலை போலவே ஆரோக்கியமானது உங்களுடைய சருமம் மட்டுமே. உங்கள் சூழலை கண்ணாடி போல் பிரதிபலிக்கக் கூடியது உண்மையில் உங்களின் சருமம் மட்டுமே. ஒரு மந்தமான, உட்கார்ந்து கொண்டே இருக்கும் வாழ்வியலில் வாழ்ந்து கொண்டிருப்பவரென்றால், உங்களுடைய சருமம் புத்துணர்ச்சியுடனும், உயிர்ப்புடனும் இருப்பதற்கான ஒரு மாஸ்யரைஸர் அல்லது ஒரு சீரம் போன்ற ஊட்டச்சத்தை தருவதற்கு எந்த ஒரு வழியுமில்லை. எனவே, சருமத்தை மிகவும் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும், பொலிவுடனும் வைத்திருப்பதற்கு,

உங்கள் உடலை நன்றாக பராமரித்துக் கொள்வது ஒன்றே மிகச் சிறந்த சவாலாகும். உங்கள் உடலை நன்றாக வைத்துக் கொண்டால், அது உங்களை நன்றாக வைத்துக் கொள்ளும். குறுகிய காலத்திலேயே உங்கள் சருமத்திற்கு பொலிவை ஏற்படுத்திட ஒரு சில யோகாசனப் பயிற்சிகளை மேற்கொள்வதைவிட மிகச் சிறந்த வழி வேறு ஏதுவுமே இல்லை. மொத்தத்தில் இது வெற்றிக்கு மேல் வெற்றி. உங்களை ஆரோக்கியமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், உங்களுடைய சருமத்திக்கும் ஆரோக்கியத்தைத் தரக் கூடியது. உங்கள் சருமத்தை பொலிவுடன் வைத்துக் கொள்வதற்கான சிறந்த யோகாசனங்களைப் பற்றி படித்துத் தெரிந்து கொள்வோம்.

 

01. வக்ராசனம்

06. திரிகோணாஸனம்

முதுகு தண்டுவடத்தை பாதியளவு திருப்பி அமர்ந்து செய்யக்கூடிய ஆசனமாகும். இந்த ஆசனத்தை செய்வதினால் அட்ரீனல் சுரப்பிகள் நன்றாக தூண்டப்பட்டு சரியாக செயலாற்றவும், மனஅழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கும் உதவுகின்றது. குறிப்பாக கடினமான சருமத்தையுடைய உங்களின் சரும நிறத்தை சீராக வைத்திருப்பதற்கு உதவுவது மட்டுமல்லாமல், உங்களுடைய சருமத்தை பொலிவுடன் வைத்திருக்கவும் உதவுகின்றது.

 

03. புஜங்காசனம்

06. திரிகோணாஸனம்

இந்த ஆசனம் செய்யும் போது ஒரு நாகப்பாம்பு ஓய்வு பெறுவது போல் தோற்றமளிக்கும். இது பதற்றம், மனஅழுத்தம், மற்றும் சோர்வை குறைப்பதற்கும் உதவும் இந்த புஜங்காசனம், அநேகமாக மற்ற ஆசனங்களைவிட பலவித நன்மைகளைத் தரக் கூடியது. இது மேலும், சரும செல்களுக்கு அதிகப்படியான ஆக்ஸிஜனை வழங்குவதால், உடலுள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இதனால் நாம் நல்ல சருமத்தை பெற்றிடலாம்.

 

04. மஸ்யாசனம்

06. திரிகோணாஸனம்

இந்த ஆசனம் தைராய்டு சுரப்பிகளை தூண்டிவிடுகின்றது. அது தவிர, ஹார்மோன்களை ஒழுங்குபடுத்துவதோடு, ஆக்ஸிஜன் அளவையும் அதிகப்படுத்துகின்றது. இதனால், உங்கள் முகத்திற்கு இயற்கையான பளபளப்பும், பொலிவும் கிடைப்பதற்கு உதவுகின்றது. இதைவிட மத்யாசனம் அல்லது மீனைப் போல தோற்றமளிக்கும் இந்த ஆசனத்தால் செய்ய முடியாதது வேறு ஏதாவது இருப்பதாக தெரியவில்லை.

 

05. ஹலாசனம்

06. திரிகோணாஸனம்

இந்த ஹலாசனத்தை செய்யும் போது கலப்பையைப் போன்ற தோற்றமளிக்கும். இந்த ஆசனம், எளிதாக செய்ய முடியும். மேலும் செரிமான செயல்பாட்டை சரியாக பாதையில் கொண்டு செல்கிறது என்பதையும் உறுதி செய்கிறது. இதுவும் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நச்சுத் தன்மையை நீக்குகின்றது. ஆரோக்கியமான மற்றும் பொலிவான சருமத்தைப் பெறுவது அவ்வளவு சுலபமில்லை என்பதே இதன் பொருளாகும்.

 

06. திரிகோணாஸனம்

06. திரிகோணாஸனம்

இது முக்கோண வடிவில் தோற்றமளிக்கும் ஆசனமாகும். இந்த ஆசனத்தை செய்வதினால், மார்பு, நுரையீரல், மற்றும் இதயம் ஆகிய உறுப்புகளுக்கு ஆக்ஸிஜனை தேவையான அளவு வழங்கும். மேலும், உங்கள் சருமம் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளவும், புத்துணர்ச்சி மற்றும் நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்கும் இந்த ஆசனம் உதவுகின்றது.

Kayal Thanigasalam

Written by

Author at BeBeautiful.
789 views

Shop This Story

Looking for something else