குளிர்காலம் நெருங்கி கொண்டிருக்கிறது. நம்முடைய துணிமணிகளை மாற்ற குளிர்காலத்திற்கான தயாரிப்புகளை வாங்க பழைய அழகு தயாரிப்புகளை குறைத்து கொள்ள வேண்டிய நேரமிது. நமது வறண்ட சருமத்திற்கான தயாரிப்புகளை நாம் வாங்க முற்படும் போது ஒரு முக்கியமான பகுதியை மட்டும் மறந்து விடுகிறோம். என்னவென்று புரிகிறதா? நாங்கள் உங்கள் உதடுகளை பற்றித் தான் பேசிக்கொண்டிருக்கிறோம். இந்த குளிர்காலத்தில் நமது உதடுகள் வறண்டு வெடிப்புற்று களையிழந்து போய்விடும். ஆனால் அந்த கவலை இனிமேல் உங்களுக்கு இல்லை ஏனெனில் உங்கள் உதடுகளை பராமரிக்க நாங்கள் ஐந்து வழிமுறைகளை வரிசைப்படுத்தி வைத்திருக்கிறோம். என்னவென்று பாருங்கள்...

 

1. நீர்ச்சத்துடன் இருங்கள்

1. நீர்ச்சத்துடன் இருங்கள்

உங்கள் போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு இந்த கட்டுரையை படித்துக்கொண்டிருக்கீர்களா? உங்கள் படுக்கையை விட்டு எழுந்து சமையலறை நோக்கி செல்லுங்கள். அங்கு ஒரு பாட்டில் தண்ணீர் இருக்கிறதா! அதுவே உங்கள் உதடு பிரச்னைக்கான தீர்வு. உங்கள் உடம்புக்கு தேவையான நீர்ச்சத்தை தருவது மட்டுமல்லாமல் உங்கள் உதடுகள் இழந்த ஈரபதத்தையும் தண்ணீர் தருகிறது. மேலும், இது உறைகின்ற சருமத்தின் அறிகுறிகள்( வெடிப்பு மற்றும் ரத்தம் வழிதல்) ஆகியவற்றிலிருந்து காக்கிறது. மேலும் உதடுகளை நாக்கால் துழாவுவதை தவிர்க்கவும். இது உதடுகளை சீக்கிரம் வறண்ட செய்து விடும்.