உங்கள் திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்யும் போது உங்களுக்கு மிகவும் மனஅழுத்தத்தை ஏற்படுத்துகிறது. உங்களுடைய திருமணத் தேதி நிச்சயித்த நாளிலிருந்து, திருமணத்தில் அனைத்தும் விஷயங்களும் சரியாக நடக்க வேண்டுமென்று நீங்கள் மிகவும் கவனமாக இருக்கிறீர்கள். ஏனெனில், திருமணம் என்பது உங்களின் வாழ்க்கையில் ஒரே ஒருமுறை நடைபெறும் மிகவும் மகிழ்ச்சியான தருணமாகும். உங்களின் ஆடைகளை பெறுவது, அழைப்பிதழ்களை அனுப்புதல், ஹேர்/மேக்கப் கலைஞரை ஏற்பாடு செய்தல், தேனிலவை திட்டமிடுதல் போன்ற வேலைகளுக்கிடையில், உங்களை மிகவும் வேதனைப்படுத்துவது எது என்று உங்களுக்குத் தெரியுமா உங்களுடைய சருமம் ஆமாம், மனஅழுத்தம், ஊட்டச்சத்து இல்லாத உணவு, மற்றும் தவறான வாழ்வியல் பழக்கவழக்கம் போன்றவைகள் உங்கள் சருமத்தை மிகவும் மோசமான பாதிப்படையச் செய்யும். மணப்பெண்ணான நீங்கள் அம்மாதிரி நடப்பதற்கு அனுமதிக்கக் கூடாது. அதனால் திருமணத்திற்கு குறைந்தது ஆறு மாதத்திற்கு முன்பிருந்தே

உங்கள் சருமத்தின் மீது கவனம் செலுத்த வேண்டும். மணப்பெண்ணாகப் போகிறவர் செய்ய வேண்டிய சரியான சரும பராமரிப்புப் பற்றி சரும நிபுணர் Dr. சோமா சர்க்கார் கூறுகிறார்.

 

மணப்பெண்ணுக்கான சரும பராமரிப்பு வழிமுறைகளை எப்போது ஆரம்பிக்க வேண்டும்?

மணப்பெண்ணுக்கான சரும பராமரிப்பு வழிமுறைகளை எப்போது ஆரம்பிக்க வேண்டும்?

மணப்பெண்ணாகப் போகிற ஒரு பெண் தன்னுடைய வழக்கமான சருமப் பராமரிப்பு பணிகளை உங்கள் திருமணத் தேதிக்கு குறைந்தது மூன்று அல்லது ஆறு மாதத்திற்கு முன்பிருந்தே தொடங்கிவிட வேண்டும் என்பதே நான் கொடுக்கும் மிகச் சிறந்த அறிவுரையாகும். முதலில் உங்கள் சருமத்தை கவனமாக கூர்ந்து கவனிக்கவும், பிறகு பிரச்னை என்ன என்பதை கண்டறியவும், பிறகு அதற்கேற்றபடி உங்கள் வழக்கமாக சருமப் பராமரிப்பை துவங்குங்கள். சீரற்ற சரும நிறம் மற்றும் முகப்பரு வெடிப்பு போன்றவற்றை உதாரணமாகச் சொல்லலாம். உங்கள் சரும நிபுணரின் அறிவுரையின்படி உங்களுடைய வழக்கமான சருமப் பராமரிப்பைப் பின்பற்றுவதைப் பற்றி பிறகு முடிவு செய்து கொள்ளவும்.

 

நான் பயன்படுத்தக் கூடிய சரும பராமரிப்பு தயாரிப்புகள் யாவை?

நான் பயன்படுத்தக் கூடிய சரும பராமரிப்பு தயாரிப்புகள் யாவை?

உங்கள் சருமம் எந்த வகை சரும்மாக இருந்தாலும் பராவயில்லை. க்ளீன்ஸர், டோனர், மாஸ்யரைஸர் மற்றும் சன்ஸ்க்ரீன் போன்றவைகள் அனைத்திற்கும் ஒரே மாதிரியாகத் தான் இருக்கும். ஆமாம், சன்ஸ்க்ரீன் எல்லாமே மாற்றத் தகுந்தவைகள் இல்லை. ஷாப்பிங் மற்றும் ஏதாவது வாங்க நீங்கள் வெளியே செல்லும்போது, சூரியனின் கடுமையான புறஊதா கதிர்களிலிருந்து தற்காத்துக் கொள்ள சன் புரொடக்ஷன் ஃபேக்டரை (SPF) நன்றாகப் பூசி கொண்டுச் செல்லவும். சூரியனிலிருந்து வெளிப்படும் அதிக வெப்பக்கதிரிகளினால் சருமத்தில், மெல்லியக் கோடுகள், சுருக்கம், கரும்புள்ளிகள், வீக்கம், வெங்குரு,கருத்துப் போதல், நிறமி போன்ற சரும தொல்லைகளால் பாதிக்கும். நிறமாறுதல் மற்றும் நிறமி முதலியவை மணப்பெண்களை அதிகமாக பாதிக்கும் பொதுவான சரும பிரச்னைகளில் ஒன்றாகும்.

 

நான் என்னமாதிரியான சரும சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்?

நான் என்னமாதிரியான சரும சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்?

உங்கள் திருமண தினத்தன்று உங்களுடைய சருமம் சீராகவும், புள்ளிகளில்லாமல், புத்துணர்ச்சி மற்றும் பிரகாசமாகவும் இருக்க வேண்டுமானால், உங்களின் பிரம்மாண்டமான திருமணத்திற்கு ஆறு மாதத்திற்கு முன்பிருந்தே மாதத்திற்கு ஒருமுறை சரும நிபுணரிடம் சென்று வர வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன். உங்களுடைய முகச்சருமப் பராமரிப்புக்கு எந்தளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்களோ, அதே அளவு பராமரிப்பையும், கவனத்தையும் உடலின் மற்ற பாகங்களுக்கும் கொடுக்க வேண்டும். ஸ்கின்-ஹைட்ரேட்டிங் சிகிச்சை, எக்ஸ்ஃபாலியேட்டிங் சிகிச்சை, முகம் மற்றும் உடல் பாலிஷிங் சிகிச்சை போன்றவைகளை தெரிவு செய்யும்படி மணப்பெண்களிடம் கூறுவேன். மேலும் முகப்பருக்களால் சருமத்திற்கான சிகிச்சை மற்றும் முகப்பரு வடுக்களை குணப்படுத்துவதற்கான சிகிச்சையையும் செய்து கொள்ள வேண்டும்.

 

சருமத்தை மேம்படுத்த என்னுடைய வாழ்க்கை முறையில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமா?

சருமத்தை மேம்படுத்த என்னுடைய வாழ்க்கை முறையில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமா?

சருமப பராமரிப்பில் ஒருவருடைய உணவுமுறை மிகப்பெரிய பங்கு வகிக்கின்றது,. நீங்கள் சாப்பிடும் உணவுகளின் நேரடித் தாக்கம் உங்கள் சருமத்தின் மீது காணப்படும். எனவே, சர்க்கரை மற்றும் பால் உணவுப் பொருட்கள் உடனடியாக நிறுத்திட வேண்டும். சில வகையான உடற்பயிற்சிகளை தினமும் தொடர்ந்து செய்து, முடிந்தவரை உங்கள் சருமத்தை ஹைட்ரேட் செய்து கொள்ள வேண்டும். கடைசியாக, உங்கள் அன்றாட பழக்கவழக்கங்களில் ஒரு சில மாற்றங்களை செய்ய வேண்டும். புகைப்பிடிக்கக் கூடாது, பின்னிரவிலும் கண் விழித்திருப்பதை தவிர்க்கலாம். கூடுமானவரை மது அருந்துவதை நிறுத்தி விடுங்கள்.